கடலின் காதலன்

Sunday, December 27, 2009

வெற்றிடம் ????

புஷ்பித்து உதிர்கிறேன் ஆண்பனையாய் .
நாளெண்ணி கூடியும் நிறையவில்லை
கள்ளியின் தாய்மை திரவம் ஊறிக்கிடக்கும்
அகப்பையின் வெற்றிடம் .
உயிரணுவின் ஒற்றை தலைப்பிரட்டைக்கு
இடமளிக்கா ஓடுடை மலடு இருந்தென்ன????
பச்சிளமிதழ் தீண்டவியலா தனங்களை அறுத்தெறியலாம் .....
உதிரம் கசி நாட்களின் துடித்தல் எட்டவில்லை
மரத்த உடலின் வலிஉணர் பகுதிக்கு .
மருத்துவஞானம் கரைத்து கொண்டிருக்கும்
நாட்களோடு பணப்பையை.
நீர்தீற்றிய விழியோர பின்னிரவில் துழாவுமவன்
தாய்க்கரத்துள் குழந்தையாய் நிறைகிறேன்
நிறையாத வயிற்றுக்காரி.......................

புலம்பல்கள் :
* தலைப்பு தெரிவு செய்த தோழமைக்கு இவ்விடம் நன்றி ...........
* உரையாடல் போட்டிக்கென்று எழுதி சிலபல சிக்கல்களினால் அனுப்பவியலாத நிலைமைஎனக்கு நானே சொல்லிக்கொண்டேன் ......பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம் என்று ...

22 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

மாப்ள ரொம்ப நாளைக்குபிறகு முதல்வாட்டி படிச்சதுமே விளங்கிச்சு

ரொம்ப ரொம்ப

ஐ லவ் யூ டா...!

ANU said...

ரொம்ப நல்லா இருக்கு பாலா...

ஒவ்வொரு வரிகளிலும் இனம் புரியாத வலிகள்
கள்ளியின் தாய்மை திரவம் ஊறிக்கிடக்கும்
அகப்பையின் வெற்றிடம் .
உயிரணுவின் ஒற்றை தலைப்பிரட்டைக்கு
இடமளிக்கா ஓடுடை மலடு இருந்தென்ன????
பச்சிளமிதழ் தீண்டவியலா தனங்களை அறுத்தெறியலாம் .....


அனுபவித்து கண்ணீர் வாங்கிய வரிகள்

ANU said...

மருத்துவஞானம் கரைத்து கொண்டிருக்கும்
நாட்களோடு பணப்பையை.


உண்மை ....

ப்ரியமுடன் வசந்த் said...

எடுத்துகிட்ட கரு? ரொம்ப அழகா சொல்லியிருக்க...

இதை நீ போட்டிக்கு அனுப்பிருக்கலாம்டா..

ANU said...

நீர்தீற்றிய விழியோர பின்னிரவில் துழாவுமவன்
தாய்க்கரத்துள் குழந்தையாய் நிறைகிறேன்
நிசப்தம்

மொத்ததில் சூப்பர்

thiyaa said...

தரமாக உள்ளது.
நல்ல நடை

சிவாஜி சங்கர் said...

//உயிரணுவின் ஒற்றை தலைப்பிரட்டைக்கு
இடமளிக்கா ஓடுடை மலடு இருந்தென்ன????
பச்சிளமிதழ் தீண்டவியலா தனங்களை அறுத்தெறியலாம்//

வலியுணரும் வார்த்தைகள்

அண்ணாச்சி ம்ம்ம்ம்... பட்டய கெளப்புறீங்க...

நட்புடன் ஜமால் said...

நல்ல சிந்தனை.

S.A. நவாஸுதீன் said...

* தலைப்பு தெரிவு செய்த தோழமைக்கு இவ்விடம் நன்றி ...........

உங்க அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு

கொற்றவை said...

good one

நேசமித்ரன் said...

பட்டயக் கிளப்புறீங்க மாப்ள

வெற்றிடம் நிறைவு

அப்துல்மாலிக் said...

good na

ரௌத்ரன் said...

நல்லாயிருக்கு நண்பா..

//உங்க அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு//

:))

எனக்கும் :)

பாலா said...

@ வசந்த்
வாடா கோபக்கார குழந்தை இந்தா முத்தங்கள் சில
@ அனு
தலைப்பு தெரிவு செய்தமைக்கும் , பின்னூட்டமிட்டமைக்கும் நன்றிகள் பல
@ தியாவின் பேனா
நன்றிங்க தியா ,மகிழ்ச்சி .
@ சிவாஜி சங்கர்
நன்றி சகோதரா உன்னை சொல்லிட்டு நானே பார்த்தீல்ல
@ஜமால்
நன்றி எல்லாவற்றிற்கும்
@ நவாஸ்
குசும்பு???
@கொற்றவை
பெரியதொரு நன்றி தோழமையே
@நேசன்
காமெடி கீமெடி பண்ணலியே மாம்ஸ் என்னைய வச்சு
@ அபு
நன்றி அபு
@ ரௌத்ரன்
மீண்டும் குசும்பு ???? இருந்தாலும் நன்றி

--
சே.ரா.பாலா

விஜய் said...

வெற்றிட மனதை கவிதை கொண்டு நிரப்பிய தம்பிக்கு வாழ்த்துக்கள்

ஏன் போட்டியில் கலந்து கொள்ளவில்லை ( அப்பாடா நமக்கு ஒரு சான்ஸ் இருக்கு)

வாழ்த்துக்கள்

விஜய்

பாலா said...

@விஜய்
நன்றிங்கோ அண்ணா
நான் அனுப்புனாலும் செலக்ட் ஆகாது ண்ணா நீங்க கவலை படாதீங்க
உங்களுக்கு கட்டாயம் பிரைஸ் உண்டு

கிறுக்கன்... said...

உணர்ச்சிப் பிழம்பு தோழா..
வார்த்தை வர்ணஜாலம்..
வரிகளின் ஜாலத்தை
வலிகள் புதைத்து விட்டன..
கொழுந்து விட்டு எரியட்டும் தங்களின் உணர்வுத் தீ..
குளிர் காய்கிறோம் நாங்களும் கொஞ்சம்...

க.பாலாசி said...

நல்ல கவிதைங்க தலைவரே. ரொம்ப நாளா உங்களை நான் மிஸ் பண்ணியிருக்கேனே. வாழ்த்துக்கள்.

சத்ரியன் said...

//நீர்தீற்றிய விழியோர பின்னிரவில் துழாவுமவன்
தாய்க்கரத்துள் குழந்தையாய் நிறைகிறேன்
நிறையாத வயிற்றுக்காரி.......................//

பாலா,

டச்சிங்டா மாப்ள....! (அதுவும், அவன் தாய்க்கரம்=====> அற்புதம்டா)

பாலா said...

நன்றி புஷ்பராஜ்@ தமிழ்
நன்றி பாலாஜி
நன்றி மாம்ஸ் (சத்ரியன்)

பா.ராஜாராம் said...

சிலீரென தொடங்குகிறது
முதல் வரி..

இறுதிவரையில் அதன் டெம்போ விடவில்லை.
இது கலந்திருந்தால் நாங்கள் ஒன்றுமில்லை
.என்னவோ மாப்ளைக்கு நம்பிக்கை இல்லை.
ஒரு எதிரி போர்க்களம் வரவே இல்லை..

(மாப்ஸ் சரியா இருக்கா டி.ஆர்.தொணி?)

நம்மதாண்டா ராஜா இனி!!

பாலா said...

maams nandringo
ithu tharkalingam thaan eppothu vendumaanalum mudivu marum
kikikiki