புஷ்பித்து உதிர்கிறேன் ஆண்பனையாய் .
நாளெண்ணி கூடியும் நிறையவில்லை
கள்ளியின் தாய்மை திரவம் ஊறிக்கிடக்கும்
அகப்பையின் வெற்றிடம் .
உயிரணுவின் ஒற்றை தலைப்பிரட்டைக்கு
இடமளிக்கா ஓடுடை மலடு இருந்தென்ன????
பச்சிளமிதழ் தீண்டவியலா தனங்களை அறுத்தெறியலாம் .....
உதிரம் கசி நாட்களின் துடித்தல் எட்டவில்லை
மரத்த உடலின் வலிஉணர் பகுதிக்கு .
மருத்துவஞானம் கரைத்து கொண்டிருக்கும்
நாட்களோடு பணப்பையை.
நீர்தீற்றிய விழியோர பின்னிரவில் துழாவுமவன்
தாய்க்கரத்துள் குழந்தையாய் நிறைகிறேன்
நிறையாத வயிற்றுக்காரி.......................
புலம்பல்கள் :
* தலைப்பு தெரிவு செய்த தோழமைக்கு இவ்விடம் நன்றி ...........
* உரையாடல் போட்டிக்கென்று எழுதி சிலபல சிக்கல்களினால் அனுப்பவியலாத நிலைமைஎனக்கு நானே சொல்லிக்கொண்டேன் ......பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம் என்று ...
காந்தரூக், எப்போதும் அப்பாலுள்ள ஒன்று.
6 hours ago

