கடலின் காதலன்

Thursday, December 31, 2009

பையித்தியக்காரனிடமிருந்து.......................

நிலவின் வீச்சில் ஒவ்வாத
கடற்சருமம் தடிக்க
இயந்திர மிருகங்கள் அலையும்
பரப்பில் தனிமையில் அழ சிரிக்கும்
பையித்தியக்காரனிடமிருந்து......................
முதல் முத்தம் !!!!!!
புவியியலின் தொலைவை சுழியமாக்கும்
எழுத்திற்கு .
...............................................
சட்டென்று செவிப்பறை தடவும்
விரும்பிய இசையோ ....
முதன்முறை கைகோர்க்கும்
காதல் தருணமோ ஒத்தது
நேசம் பெருகும் நட்பின் பிணைப்பு
நேசத்திற்கு பதிலென்ன????!!!!
??
புத்தாண்டு வாழ்த்துகள் சொந்தங்களே
மறக்கவியலா ப்ரியங்களுடன்

பாலா

Sunday, December 27, 2009

வெற்றிடம் ????

புஷ்பித்து உதிர்கிறேன் ஆண்பனையாய் .
நாளெண்ணி கூடியும் நிறையவில்லை
கள்ளியின் தாய்மை திரவம் ஊறிக்கிடக்கும்
அகப்பையின் வெற்றிடம் .
உயிரணுவின் ஒற்றை தலைப்பிரட்டைக்கு
இடமளிக்கா ஓடுடை மலடு இருந்தென்ன????
பச்சிளமிதழ் தீண்டவியலா தனங்களை அறுத்தெறியலாம் .....
உதிரம் கசி நாட்களின் துடித்தல் எட்டவில்லை
மரத்த உடலின் வலிஉணர் பகுதிக்கு .
மருத்துவஞானம் கரைத்து கொண்டிருக்கும்
நாட்களோடு பணப்பையை.
நீர்தீற்றிய விழியோர பின்னிரவில் துழாவுமவன்
தாய்க்கரத்துள் குழந்தையாய் நிறைகிறேன்
நிறையாத வயிற்றுக்காரி.......................

புலம்பல்கள் :
* தலைப்பு தெரிவு செய்த தோழமைக்கு இவ்விடம் நன்றி ...........
* உரையாடல் போட்டிக்கென்று எழுதி சிலபல சிக்கல்களினால் அனுப்பவியலாத நிலைமைஎனக்கு நானே சொல்லிக்கொண்டேன் ......பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம் என்று ...

Wednesday, December 23, 2009

ஒரு எதிர் வினை அல்லது சுய புலம்பல்

கருவேல முட்கூர்மை கொண்ட
சர்ப்ப பற்களின் தடமொன்று
போதுமானதாய் இருக்கிறது
தனிமையில் அழவும்; பித்துவெறி
மிக சிரிக்கவும் .
-௦௦
.
மூடிய தழும்பினுள்
பதப்பட்ட இறைச்சியாய்
ரணம்
தயவுசெய்து ஆயுதங்களுக்கு
சொல்வேடம் பூட்டி அனுப்பாதே
கிழிபட நான் தயார் !!
உள்ளிருக்கும் உயிரிக்கு
ஆயுதங்காணும் லேசர்
கண்கள் இல்லை ..............

Monday, December 21, 2009

மரணஅமுதம்

இருள்வாயில் சிக்குண்ட அறையில்
அறுந்த மின்குமிழ்விளக்கின்
டங்க்ஸ்டனாய் துடிக்கிறேன் .
நரம்பின் திசுக்களில் விரிவடைந்த
இணையத் தொடர்பாய் வலி
சமிக்ஞை பரிமாற்றம் .
பிரசவ வேதனை .
பனிக்குடம் உடைந்த குறியினின்று
ஈன்றெடுத்தேன் ஒற்றைக் கண்ணீர்த்துளியை .
.
இப்போதைய என் தேவை
1. அவள் மடி
2. காமம் கழித்த ஒரேமுத்தம்
மரணம் = அமுதம்