கடலின் காதலன்

Wednesday, December 23, 2009

ஒரு எதிர் வினை அல்லது சுய புலம்பல்

கருவேல முட்கூர்மை கொண்ட
சர்ப்ப பற்களின் தடமொன்று
போதுமானதாய் இருக்கிறது
தனிமையில் அழவும்; பித்துவெறி
மிக சிரிக்கவும் .
-௦௦
.
மூடிய தழும்பினுள்
பதப்பட்ட இறைச்சியாய்
ரணம்
தயவுசெய்து ஆயுதங்களுக்கு
சொல்வேடம் பூட்டி அனுப்பாதே
கிழிபட நான் தயார் !!
உள்ளிருக்கும் உயிரிக்கு
ஆயுதங்காணும் லேசர்
கண்கள் இல்லை ..............

23 comments:

நட்புடன் ஜமால் said...

தயவுசெய்து ஆயுதங்களுக்கு
சொல்வேடம் பூட்டி அனுப்பாதே
கிழிபட நான் தயார் !!]]


என்னா வரிகள் - பாலா

இது வெறும் கவிதைக்காகவென்றால் நலம் தான் .

Sivaji Sankar said...

//சர்ப்ப பற்களின் தடமொன்று
போதுமானதாய் இருக்கிறது
தனிமையில் அழவும்; பித்துவெறி
மிக சிரிக்கவும்//

வேணா வேணான்னு சொன்னா கேட்டாதான....

//உள்ளிருக்கும் உயிரிக்கு
ஆயுதங்காணும் லேசர்
கண்கள் இல்லை ........//

சான்சே இல்ல ரெம்ப நல்லாருக்கு...

யாழினி said...

//மூடிய தழும்பினுள்
பதப்பட்ட இறைச்சியாய்
ரணம்
தயவுசெய்து ஆயுதங்களுக்கு
சொல்வேடம் பூட்டி அனுப்பாதே
கிழிபட நான் தயார்//

ம்ம்ம்...
நல்லா வந்திருக்கு

சத்ரியன் said...

/தயவுசெய்து ஆயுதங்களுக்கு
சொல்வேடம் பூட்டி அனுப்பாதே
கிழிபட நான் தயார் !!//

மாப்ள,

பின்னூட்டம் நல்லா வந்திருக்கு.
கவிதையை போலவே...!

பா.ராஜாராம் said...

மாப்ள
,
//கருவேல முட்கூர்மை கொண்ட
சர்ப்ப பற்களின் தடமொன்று
போதுமானதாய் இருக்கிறது
தனிமையில் அழவும்; பித்துவெறி
மிக சிரிக்கவும்//

மாமன் எதுவும் காயபடுத்திடேனா-எனை அறியாது?..எதிர் வினைன்னு வேற சொல்றீகளே..
-௦௦

மற்றபடி,கவிதை ரொம்ப பிடிசிருக்குப்பு..(கிடு,கிடு,கிடு..)

:-))

பாலா said...

@ ஜமால்
"இது வெறும் கவிதைக்காகவென்றால் நலம் தான்"
அப்படியே ஆகக்கடவது அமென்
@சங்கர்
உன் பேச்சை கேட்ருக்கணும் சகோதரா
@யாழினி
நன்றி தோழமையே
@சத்ரியன்
வாங்க மாம்ஸ் உமக்கு
குசும்பு எல்லைகடந்து போய்கிட்டு இருக்கு
@பா.ரா
என்ன மாமா ?
நீங்க அடிச்ச வாங்கிக்கதானே இந்த உடம்பு .
மறுகன்னமும் தயார் நீங்க அடிப்பதென்றால்
உங்களுக்கான எதிர் பதிவு இல்ல மாம்ஸ்
இது வேற (?) ஒருத்தருக்கு

ANU said...

மூடிய தழும்பினுள்
பதப்பட்ட இறைச்சியாய்
ரணம்
தயவுசெய்து ஆயுதங்களுக்கு
சொல்வேடம் பூட்டி அனுப்பாதே
கிழிபட நான் தயார்//

கிழிபட்ட வலிக்காதா பாலா????

நல்லா இருக்கு பா...ஆனால்
என்னவோ ஒரு வலி....

பிரியமுடன்...வசந்த் said...

யப்பாடி ரொம்ப சந்தோஷம் மாப்ள...!

அ.மு.செய்யது said...

அது என்னவோ மாப்பி..உன் பதிவுக்கு வந்தா மட்டும் கவிதையை பார்க்காம பின்னூட்டங்களை மட்டும் பாக்கச் சொல்லுது.

அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல..!!! பட் கவிதை வழக்கம் போல கிளாஸ்..கொற எதும் வைக்கில நீ.

பாலா said...

@அனு
நன்றி தோழி
என்றேனும் இடம்பெறலாம் உனக்கான எதிர்வினையும்
காத்திரு . மதிப்பையும் ; பிரியத்தையும் குரல்வளை அறுக்கும்
கொடூரம் நிகழ்த்தபெற்றால் !!!!
@வசந்த்
நன்றி மாப்ள எதுக்கு இவ்ளோசந்தோசம்
@செய்யது
வாங்க மாப்பி
பின்னூட்டம் மட்டும் பார்குற கண்ணை குத்த சொல்லிருக்கு
சாமி .

கொற்றவை said...

migavum nanru

பாலா said...

நன்றி கொற்றவை

thenammailakshmanan said...

/உள்ளிருக்கும் உயிரிக்கு
ஆயுதங்காணும் லேசர்
கண்கள் இல்லை ..............//

அசத்தலா இருக்கு பாலா வலியின் கூர்மை

பாலா said...

நன்றி தேனக்கா

கவிதை(கள்) said...

எப்பொழுதும் போல் பாலாவின் முத்திரை

வாழ்த்துக்கள்

விஜய்

பா.ராஜாராம் said...

ரைட்டு நடக்கட்டும்..

நன்றி மாப்ஸ்!

பலா பட்டறை said...

கருவேல முட்கூர்மை கொண்ட
சர்ப்ப பற்களின் தடமொன்று
போதுமானதாய் இருக்கிறது
தனிமையில் அழவும்; பித்துவெறி
மிக சிரிக்கவும் .
-௦௦
.
மூடிய தழும்பினுள்
பதப்பட்ட இறைச்சியாய்
ரணம்
தயவுசெய்து ஆயுதங்களுக்கு
சொல்வேடம் பூட்டி அனுப்பாதே
கிழிபட நான் தயார் !!
உள்ளிருக்கும் உயிரிக்கு
ஆயுதங்காணும் லேசர்
கண்கள் இல்லை ......//

அற்புதம்... ஒவ்வொரு வார்த்தையும் பல் கடித்து சொல்கிறது வலிக்கவில்லை என்று.

பாலா said...

@விஜய்
நன்றி அண்ணா
@ பா.ரா
விஷயம் புரிஞ்சுடுச்சா மாம்ஸ் ?
@ பலாபட்டறை
நன்றி நண்பரே
உணர்ச்சிபூர்வமான பின்னூட்டம்

சந்தான சங்கர் said...

சொல்வாள் வீசியும்
கொல்வாள்
கொல்லாமல்...


வாழ்த்துக்குள் பாலா..

கவிதை(கள்) said...

புது வடிவமைப்பு அழகு

விஜய்

S.A. நவாஸுதீன் said...

சத்ரியன் said...
/தயவுசெய்து ஆயுதங்களுக்கு
சொல்வேடம் பூட்டி அனுப்பாதே
கிழிபட நான் தயார் !!//

மாப்ள,

பின்னூட்டம் நல்லா வந்திருக்கு.
கவிதையை போலவே...!

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

பாலா said...

நன்றி சந்தான சங்கர் (எப்படி ("கொ" ) இப்படிலாம்?)
நன்றி விஜய் அண்ணா
@நவாஸ்
இந்த கல்யாணம் ஆன பசங்க குசும்பு வரவர ஓவரா போய்ட்டுது (கிகிகிகிகி)

sakthi said...

Bala superb