கடலின் காதலன்

Saturday, May 23, 2009

பேச்சுலர் டிகிரி

ஏதோவொரு காட்சி பிழையின் தீவிரத்திலோ

தனிமையின் முயங்களிலோ

அதுவென்னுள் விழுந்து விட்டது போலும் !

(இதை அனுபவித்திருப்பீர் நீங்கள் )

என்னுள் தன் கிளைகளை

பரப்பி இருந்தது

என்புகள் நொறுங்கி

நரம்புகள் தெறித்துவிடும் போல் !

இழந்து கொண்டிருந்தேன்

அதனாளுமையின் வன்மையில்

வெட்கம் ,பசி இன்னபிற .....

எந்த முனிவனுக்கு தெரியும்

என் ஊசிமுனைத்தவ்ம் ??!!!!!

அங்கங்கள் வழி தீஒழுக

நின்றிருக்கிறானா அவன் ??!!!!

மார்பிலும் முகத்திலும்

மயிர்க்கால்களின் ஆளுமைக்கொண்ட

என்னால் கண்ணாலே

அழைக்கும் எவளுடனோ

அதை விட்டொழிக்க வழியிருந்தும்

கலாச்சார முட்கொம்பிலதை

கொன்று மாட்டி விட்டேன்

இனிமேலும் கொலைக்க

நான் தயாரில்லை

அடியே என்னவளே

எங்கிருந்தேனும் உடனே புறப்பட்டு வா !!

Sunday, May 17, 2009

தேர்டு மில்க் அகைன்

தினவெடுத்த தீநாக்கள்

திரண்டு தழலாய்

அந்த அறை மையத்தில்

பொங்கி வழிந்ததில்

இல்லாதது இருப்பு கொண்டு

இருப்பின் இல்லாததை

ஒன்றையொன்று நிரப்பும்

முயற்சியில் !

பூமியினின்று கழற்றி

கொண்ட அவ்வறை

கட்டற்ற வெப்ப உயர்தலில்

எரிந்து சாம்பலானது !

வெட்ட வெள்ளை வெளியில்

இயங்கியவற்றின்

முயற்சி தீவிரத்தில்

ஒன்று வென்றிருக்கையில்

மற்றொன்று தோல்வியின் விளிம்பில்

வெற்றியை ருசித்துக்கொண்டிருந்தது !!

நெருப்பு நீறு பூக்க

உறங்கத்தொடங்கியது !!...................................

Friday, May 8, 2009

தேடல்

அவளைக்காணவில்லை

முற்பகலில் தேடத்தொடங்கினேன்

வெக்கை

வெளியேயும் உள்ளேயும்

.

.

முன்னிரவிலும் கிட்ட வில்லை

காலத்துளிகள் இற்று உதிர்ந்து போயின !

பின்னிரவில் நெருப்பாய் தகிக்க

தொடங்கினேன் !!

.

.

கருக்கலில் அருகம்புல்லில்

அரும்பிய பனித்துளியொன்றில்

கண்டெடுத்தேன்

இதயத்துசெல்களை

பூக்களாய் புஷ்பிக்க செய்து

அர்ச்சிக்கத் தொடங்குகிறேன்

.

அவள் கால் சுண்டுவிரலால்

சீண்டப்பட்டு

சிரித்து விழுகின்றன அவை !!!

இதயம் செல் உற்பத்தியில்

சாதனை செய்யும் விதமாய்

உமிழத்தொடங்கியது

பூக்களை !!!!

.

எங்களை ஒதுக்கித்தள்ளி

ஓடிக்கொண்டிருக்கின்றது

காலவெளி

சிறு ஓடையென !

.

சட்டென்று நுகர்கிறேன்

அவளை

ஏதோ ஒன்று தூக்கி எறிகிறது

எனை !

அதொரு வெட்ட வெளி

அந்திமம்

ஏதேதோ வாசனைகள்

எண்ணப்பிதற்றல்கள்

இப்போழ்து

என்னைக்காணவில்லை !!!!!!!!!(?)..........................