கடலின் காதலன்

Monday, December 21, 2009

மரணஅமுதம்

இருள்வாயில் சிக்குண்ட அறையில்
அறுந்த மின்குமிழ்விளக்கின்
டங்க்ஸ்டனாய் துடிக்கிறேன் .
நரம்பின் திசுக்களில் விரிவடைந்த
இணையத் தொடர்பாய் வலி
சமிக்ஞை பரிமாற்றம் .
பிரசவ வேதனை .
பனிக்குடம் உடைந்த குறியினின்று
ஈன்றெடுத்தேன் ஒற்றைக் கண்ணீர்த்துளியை .
.
இப்போதைய என் தேவை
1. அவள் மடி
2. காமம் கழித்த ஒரேமுத்தம்
மரணம் = அமுதம்

20 comments:

Sivaji Sankar said...

//அறுந்த மின்குமிழ்விளக்கின்
டங்க்ஸ்டனாய் துடிக்கிறேன் .//
நல்ல கற்பனை...நிறைவான கவிதை..

அ.மு.செய்யது$ said...

// காமம் கழித்த முத்தம்..அவள் மடி..//

என்னன்னவோ சொல்ல தோணுது..நல்லா எழுதியிருக்கீங்க பாலா...

மனதை தொட்டது கவிதை அப்படின்னு தான் சொல்லணும்.காரணங்களை ஏற்கெனவே சொல்லி விட்டேன்னு நினைக்கிறேன்.

keep writing..!!

S.A. நவாஸுதீன் said...

மரணக் கவிதை. அதான் நம்ம செய்யது ஏற்கனவே உங்களைப்பற்றி சொல்லி இருக்காரே மரண ரசனையுள்ள கவிஞன்னு. இதைவிட வேற என்ன சொல்றது

சத்ரியன் said...

/இப்போதைய என் தேவை
1. அவள் மடி
2. காமம் கழித்த ஒரேமுத்தம்//

பாலா,

இப்"போதை"க்கு மட்டுமா....?

புரிஞ்ச வரைக்கும் நல்லாயிருக்கு.!

ANU said...

இருள்வாயில் சிக்குண்ட அறையில்
அறுந்த மின்குமிழ்விளக்கின்
டங்க்ஸ்டனாய் துடிக்கிறே

ரொம்ப அருமையா இருக்கு பாலா

thenammailakshmanan said...

அருமை பாலா

கமலேஷ் said...

அடடா கவிதை பேசுதே...
மிகவும் நன்றாக இருக்கிறது...
வாழ்த்துக்கள்..

யாத்ரா said...

கவிதை ரொம்பப் பிடிச்சிருக்குங்க

கவிதை(கள்) said...

ஷாக்கடிக்குது டங்க்ஸ்டன்

வாழ்த்துக்கள்

விஜய்

பிரியமுடன்...வசந்த் said...

மாப்பு இப்போதாண்டா எலக்ட்ரிகல் படிச்சதுக்கு புண்ணியமா மின்சார விளக்குல இருக்குற டங்ஸ்டன் பத்தி எழுதிருக்க..

மாப்பு அந்த பனிக்குடத்துக்கப்புறம் சுத்தம்...

வாழ்க மின்சாரகவிஞர் பாலா...!

:))))))

நட்புடன் ஜமால் said...

பாலா நலம் தானே

உடனே புரியறது போல கவிதையெல்லாம் வருது.

’அனு’ ‘அனு’வா இரசிச்சி சொல்லியிருக்கேப்பா

பா.ராஜாராம் said...

என்னய்யா இந்த கொளுத்து கொளுத்துறீங்க..

ரெண்டாவது சீகோல்டூ=கண் நிறைகிறது மாப்ள!

அதுவே சாஸ்வதம்!

மிக அருமை!

பாலா said...

நன்றி சகோதரா (சங்கர் )
வாங்க மாப்பி ( அதான் சாட் லையே சொல்லிட்டீங்களே(எல்லாத்தையும்!!!!!) )
நன்றி நவாஸ் (நமக்குள்ள இதெல்லாம் தேவையே இல்லைன்னு நினைக்குறேன் )
வாங்க மாம்ஸ் (உமக்கு குசும்பு வரவ ஜாச்த்தியாயிகிட்டே போகுது ஓவர் குசும்பு உடல் நலத்திற்கு கேடு )
நன்றி அனு
நன்றி சகோதரி தேனம்மை
நன்றி கமலேஷ்
வாங்க யாத்ரா
நன்றி விஜய் அண்ணா
வா மாப்ள வசந்த் (ஓம்ஸ் லா, பிளம்மிங் ரைட் ஹேன்ட் , லேபிட் ஹேன்ட் ரூல் , எல்லாத்தையும் எழுதுறேன் இப்போ திருப்தி தானே உனக்கு சாரி லென்ஸ் லாவ விட்டுட்டேன் கிகிகிகிகிகி )
என்ன ஜமால் விட்டா போஸ்டர் அடிச்சு ஓட்டுவீங்க போல
அட வாங்க மாம்ஸ் உங்களைவிடவா ?????!!! நீங்க மனுசனை நேரம் காலம் பார்க்காமலே அழ வைக்குறீங்க இதுக்குமேல வேற என்ன இருக்கு ????

அ.மு.செய்யது said...

// ’அனு’ ‘அனு’வா இரசிச்சி சொல்லியிருக்கேப்பா //

ரைட்டு விடுங்க !!!!

கார்க்கி said...

மாப்பி.. எப்படி இப்படிலா? எனக்கு உரையாடல் போட்டிக்கு ஒரு கவிதை எழுதி தாப்பா...

யாழினி said...

/இப்போதைய என் தேவை
1. அவள் மடி
2. காமம் கழித்த ஒரேமுத்தம்
மரணம் = அமுதம்/

பாலா
கவிதை
மனச கனமாக்குது..
நல்ல உணர்வு வெளிப்படுகை

வாழ்த்துக்கள்!

அபுஅஃப்ஸர் said...

//மாப்பு இப்போதாண்டா எலக்ட்ரிகல் படிச்சதுக்கு புண்ணியமா மின்சார விளக்குல இருக்குற டங்ஸ்டன் பத்தி எழுதிருக்க..
/

இப்போதானே கனெக்ஷன் கொடுத்திருக்காரு, இனிமேல்தான் பிரகாசமா ஒளிரப்போகுது

பாலா said...

@ செய்யது
ரிப்பீடிங் போட்ட மாப்பிக்கு நன்றிகள் இல்லை (கிகிகிகி)
@ கார்க்கி
ஏன் மாப்பி கவிதை வேணும்னா சொல்லு அனுபிருவோம் ஒரு அஞ்சு போதுமா??
@யாழினி
நன்றி தோழமையே ( வருந்துவதா ; மகிழ்வதா தெரியவில்லை )
@ அபு
avvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
நான் இந்த விளையாட்டுக்கு வரலை ஆளைவிடுங்கோ

சத்ரியன் said...

ஜமால், அ.மு.செய்யது, நவாஸ்,அபு... எல்லாருக்கும் நன்றி.

பத்திரிக்கை செலவு மிச்சம்டா மாப்ள...(பாலா)...!

அரங்கப்பெருமாள் said...

//இப்போதைய என் தேவை
1. அவள் மடி//

உண்மை.