கடலின் காதலன்

Saturday, November 28, 2009

வளிமம்

அறை அபிஷேகிக்கும் மின்னிறகு

துண்டாடிய காற்றுடல் .

.

முடிவிலியில் ஆரத்தழுவியும்

இதற்தின்றும் தீரவில்லை

காற்றின் தாய்பசி .

.

இனவிருத்திக்கும் முயக்கவீச்சில்

இறந்த எதிர்பாலொத்து

பச்சைய உடலங்கள் கொலைத்த

கடல் முகிழ் வெற்றிடந்தேடும்

ராட்சத சுவாசம் .

.

மொழிஞன் பிரசவிக்கும் சொற்களாய்

வனமடைந்து திரும்பும் வாசவளி .

.

"வளியிடை போழப்படா முயக்கு "(வள்ளுவம் )

தேடுமவள்

உடைஎரிக்கும் துணையற்ற

பின்னிரவின் நாசி நவில்

கரியமில வளிமம் .

15 comments:

அ.மு.செய்யது said...

கார்பன் டை ஆக்ஸைடு,குளோபல் வார்மிங் பத்தி ஏதோ எழுதியிருக்கீங்கன்னு நினைச்சி படிச்சிட்டு எஸ் ஆய்கிறேன்.

ஆமா உரையாடல் கவிதைப்போட்டிக்கு இது வார்ம் அப் கவிதையா ???

அ.மு.செய்யது said...

//வளியிடை போழப்படா முயக்கு "(வள்ளுவம் )//

இந்த விசயம் அவருக்கு தெரியுமா ?

கவிதை(கள்) said...

தலையை சொரிஞ்சிட்டு போறேன் எப்பவும் போல புரியாமல்

வாழ்த்துக்கள்

விஜய்

r.selvakkumar said...

//மின்னிறகு //
Is it fan?

அடர்த்தியான வார்த்தைகள் நிரம்பிய படைப்பு!
இன்னமும் எனக்கு அர்த்தம் புரியவில்லை.

அபுஅஃப்ஸர் said...

GOOD but not understand

Please take some classes for me


(sorry for writing in english)

பா.ராஜாராம் said...

இந்த கவிதையை என்னால் புரிய இயலவில்லை மாப்ள.முதலில் வளிமம் என்ன வென தெரியவில்லை.ஆற அமர வாரேன்.

அன்புடன் மலிக்கா said...

கவிதை கவிதையாய் தெரிகிறது ஆனா விபரம் புரியலைங்க..

பாலா said...

உங்க அன்புக்கு நன்றி மாப்ள
வாங்க விஜய் அண்ணா (வார்த்தைகள் சிக்கலே தவிர விஷயம் ஒண்ணுமில்ல )
நன்றி செல்வா சார் (நீங்க சொல்றது சரிதான் )
வாங்க அபு (கிளாஸ் எடுத்துடுவோம் )
முதல்ல சொன்னதுதான் மாம்ஸ் விஷயம் ஒண்ணுமில்லை வார்த்தைகள்தான் சிக்கி விட்டுருக்கேன்
வாங்க மாலிக்கா இனிமே கோசம் இளக்கமா எழுதுறேன் . நன்றி

S.A. நவாஸுதீன் said...

ஆகா! ஆகா!. குரு பின்றீங்களே.

காற்று கூட இடையில் புகுந்து பிரிக்க இயலாத தழுவல் தேடுமவள் இரவு சுவாசம் கரியமில வளிமம்தான்.

இந்த மாதிரியெல்லாம் யோசிக்க உங்களால் எப்படி குரு முடிகிறது!!

இது பசலை வாரமோ.

ரௌத்ரன் said...

நல்லாயிருக்கு நண்பா....வேனுமின்னே கொஞ்சம் சுழிச்சு எழுதுன மாதிரியும் இருக்கு...நல்லா உருட்டி நெருப்பு பந்து போல எறிங்க..மேல பட்டா சுடனும் :))

விக்னேஷ்வரி said...

நீங்களுமா..... :(

பாலா said...

நன்றி நவாஸ்
வாங்க ரௌத்ரன் அதோடு நன்றியும்
இதுக்கே வருத்தப்பட்ட எப்படி விக்னேஸ்வரி இன்னமும் நிறைய இருக்கே

பா.ராஜாராம் said...

நீங்கள் சொன்ன பிறகு இந்த கவிதை வாசிக்கிற போது பிரமிப்பு ஏற்படுத்துகிறது.

கொற்றவை said...

ungal mozhi aalumai nanru

அரங்கப்பெருமாள் said...

ம்ம்ம்ம்ஹுஹுஹும்ம்ம்ம்