கடலின் காதலன்

Sunday, November 1, 2009

வெயில்

நிலவிலங்கின் வாய்ப்பிளந்த

குறிகளுக்குள் துழாவுகின்றன

சூர்ய நாவுகள்

.

இலையுதிர்த்து அழுது

யாசிக்கின்றன வானுலோபியை

வறண்ட பின்னும் தரை உறிஞ்சும்

முதலிய(ம்) மரங்கள்

.

தவிட்டின் வர்ணக் குருவிகள்

என்பற்ற புழுக்கள் தேடி

புண்படுகின்றன மரவேர்கள் .

.

வாகனக்கண்கள் புசிக்கப்

- பெறும் தார்ச்சாலையின்

காட்சிமயக்க நீர்மம் .

.

காய்ந்து வெடித்த அவளுதடுகண்டு

சபிக்கிறான் அம்பிகாபதி வழி

வந்தவன் .

.

உழவப்பாட்டன் தோல் நக்கிய

வெக்கை வளிமம் உமிழ் நெற்றி

வியர்வை உண்டபின் துடிக்கிறது

நிலக்குறி ..... ஆண்மையற்ற

வெண்மேகம் கண்டு .......................

23 comments:

விஜய் said...

மிக அழகு

வாழ்த்துக்கள்

நம்ம பக்கமும் வாங்க

விஜய்

அ.மு.செய்யது said...

வெயில் !!! வறட்சி என்று வைத்திருக்கலாம் !!

ஏகப்பட்ட உருவகங்கள்...படிமங்கள்....உங்க கவிதையை தனித்தனியாக மேற்கோள் காட்டினால்
அது பாவமாகி விடும்.அதிலிருந்து ஒரு மணி கூட உதிர்ந்து விடாமல் பார்த்து கொள்வதே நலம்.

மொத்ததில் உலர்ந்த சொற்கள் கொண்டு எழுதப்பட்ட நிறைவான கவிதை !!

( கவிதை பொருள்...உள்ளுறை உவமம் வித்தியாசமா இருக்கு மாப்பி...)

thiyaa said...

//
உழவப்பாட்டன் தோல் நக்கிய

வெக்கை வளிமம் உமிழ் நெற்றி

வியர்வை உண்டபின் துடிக்கிறது

நிலக்குறி ..... ஆண்மையற்ற

வெண்மேகம் கண்டு .......................

//


என்னங்க இப்பிடியுமா கவி வடிப்பது
எல்லாம் அருமையான வரிக வரிக்குவரி அலங்காரங்கள்
அருமையோ அருமை

S.A. நவாஸுதீன் said...

பாலா! அழுத்தம், அடர்த்தி கூடுதல் அழகு சேர்க்கிறது.

(ஆமா ஊர்ல நல்ல மழைதானே பெய்யுது. இதுவும் அழகிய முரண்பாடோ)

பாலா said...

நன்றி விஜய் அண்ணா
வாங்க செய்யது (போன் பண்ணுனா அட்டென் பண்ணுங்க )
நன்றிங்க தியா
வாங்க மாம்ஸ் (ஸ்மைலிக்கு அர்த்தம் புரியல ஒருவேளை நக்கல் சிரிப்பா இருக்குமோ ???)
வாங்க நவாஸ்
--

சிவாஜி சங்கர் said...

//தவிட்டின் வர்ணக் குருவிகள் என்பற்ற புழுக்கள் தேடி புண்படுகின்றன மரவேர்கள் ..//

சார்..,நீங்க எங்கேயோ போய்டீங்க..
:) :)

சத்ரியன் said...

//வறண்ட பின்னும் தரை உறிஞ்சும்

முதலிய(ம்) மரங்கள் //

பாலா,

எல்லாம் பிடித்த வரிகள் தான். இது மட்டும் கூடுதல் சிறப்பு.
(எனக்கு எளிதாய்ப் புரிந்ததால்...)

அன்புடன் நான் said...

உழவப்பாட்டன் தோல் நக்கிய

வெக்கை வளிமம் உமிழ் நெற்றி

வியர்வை உண்டபின் துடிக்கிறது

நிலக்குறி ..... ஆண்மையற்ற

வெண்மேகம் கண்டு .......................//

முழுக்க‌விதையும் மோச்ச‌ம் பெறும் பாலா!
மிக‌ அருமை.பார‌ட்டுக்க‌ள்.

இன்றைய கவிதை said...

//வாகனக்கண்கள் புசிக்கப்

- பெறும் தார்ச்சாலையின்

காட்சிமயக்க நீர்மம்
//

அருமை!

-கேயார்

பாலா said...

நன்றி சங்கர்
நன்றி சத்ரியன் (மாமா)
நன்றி கருணாகரசு அண்ணா
நன்றி கேயார் (மன்னிக்கவும் ஒரு சிறு சந்தேகம் தாங்கள் இயக்குனர் கேயார் அவர்களா??)

விஜய் said...

தொடர்பதிவு எழுதாம தப்பிச்சிட்டு இருக்கிறீங்களா

வாங்க

விஜய்

புலவன் புலிகேசி said...

நல்லா இருக்கு தல...

Thenammai Lakshmanan said...

பாலா ...

எந்த வரியையும் தொடவே பயமாய் இருகிறது...

ஆனால் அனைத்துமே உண்மையின் வெளிப்பாடு ...

கொஞ்சம் இதமாய் எழுதுங்கள் பாலா

பாலா said...

அங்கதான் வந்துட்டே இருக்கேன் விஜய் அண்ணா
நன்றி புலவன் புலிகேசி
வாங்க சகோதரி தேனு

Admin said...

நல்ல வரிகள்

பாலா said...

நன்றி சந்ரு

பா.ராஜாராம் said...

மாப்பி..

இதில் நீங்கள் நேசனையும் விஞ்சுகிறீர்கள்.முழுக்க முழுக்கவான கவித்துவத்தில்!அடர்த்தி குறைய குறைய,படிமானம் குறைய குறைய கவித்துவம் பொட்டென தாக்குகிறது.நேசனுக்கு சொல்லுங்க மாப்பி..இது போதுமென---எங்களுக்கு,எங்களுக்கு மாதிரியான ஆள்களுக்கு!...(அப்படியெனில் அது உங்களுக்கும் தானே)

ஹி..ஹி..நேயர் விருப்பமென கொள்ளலாம் இருவரும்!

பாலா said...

மாம்ஸ் நேசனுக்கு மெயில் அனுப்புறேன்
நன்றிங்கோ

சந்தான சங்கர் said...

//தவிட்டின் வர்ணக் குருவிகள் என்பற்ற புழுக்கள் தேடி புண்படுகின்றன மரவேர்கள்//

மரத்துப்போன
மர உணர்வுகள் நீ
உதிர்த்து போன
வார்த்தைகளில்
துளிரும்.


அருமை பாலா
வாங்க சிந்தனைக்கும்.

பாலா said...

nandri shangar

விஜய் said...

எவ்வளவு தடவை தான் வந்து வந்து ஏமாந்து போறது

சீக்கிரம் அடுத்த அதிரடி கவிதைய போடுங்க தம்பி

விஜய்

பாலா said...

out of form vijai anna konjam neram edukuren viraivil ethaavthu oru mokkaiayavathu ezhuthuren

பா.ராஜாராம் said...

sorry, maaps.thookkam.udal nala kuraivu.kappaluku vanthaacchu..ini pathivu ethir paarkkalaam.