கடலின் காதலன்

Tuesday, October 27, 2009

கடை காய்கிறது ????????????

அமுத போதை விட இன்பம்

சரிவிகித கலவையில் புகட்டப்

பெறுதல் செல்லிடைப் பிணைப்பில் !!

.

ஒரு சொல் ஒரே சொல் !!

கோடிகளில் கொலையவும்

உயிர்த்தெழவும் !!!!

.

மொழிஊனம் ! நீ நவில்

உணர்ச்சி பாஷை

ஒரு சொல் ஒரே சொல்லில் !!!

.

சுவாசத்துளை துணையில்

கிசுகிசுக்கும்

உன் வார்த்தை என் பெயர்

மதுவுண்ட புரவியொத்து

தறிகெட்டு விரைகிறது

குருதி வழங்கி !!!!!!!!!!

.

வண்ணப்பூச்சிகள் சூழ்

மலரிதழ் எஸ்ஸன்ஸ் கமழ்

ஸ்படிகக்கற் சமை பிரபஞ்ச

கடவுச்சொல் யாசித்தலின்றி

கையளித்தவள்!!!

.

முட்டையழி விடாய் நாட்கள்

அடிவயிற்றின் துடித்தலுக்கு

ஒத்தடமிட வலுவில்லை

என்னுதட்டிற்கும் வார்த்தைப்பிண்டங்களுக்கும்

.

உன்னிடம் இன்பத்தை (மட்டுமே ) யாசிக்கும்

ஆண்மையின் பிச்சைக்கரங்கள்

கு.கு .

கடை காய்ந்து கொண்டிருந்த காரணத்தால் இந்த ஒரு மொக்கைத்தனமான

பதிவை இறக்கி வைக்க வேண்டிய கட்டாயம் .மக்கா மன்னிச்சிக்குங்க ................

9 comments:

S.A. நவாஸுதீன் said...

முட்டையழி விடாய் நாட்கள்அடிவயிற்றின் துடித்தலுக்குஒத்தடமிட வலுவில்லை என்னுதட்டிற்கும் வார்த்தைப்பிண்டங்களுக்கும் .உன்னிடம் இன்பத்தை (மட்டுமே ) யாசிக்கும் ஆண்மையின் பிச்சைக்கரங்கள்

நல்லா இருக்கு பாலா.

Sivaji Sankar said...

மக்கா உன்ன மன்னிக்க முடியாது வே..,
இத போய் மொக்கைத்தனமான பதிவுன்னு ட்டீர..

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

விமர்சிக்க நமக்கு விவரம் பத்தாதுய்யா, அதனால சத்தம் போடாம படிச்சுட்டு போய்டுறேன்.

கார்க்கி said...

கிகிகிகிகிகி

நேசமித்ரன் said...

நல்லா இருக்கு மாப்பி . இதுக்கு ஏன் இப்பிடி ஒரு தலைப்பு ?
முறுக்காத..... நல்ல கவிதையும் அதனால கெட்டு விட வாய்ப்பு இருக்கு

அ.மு.செய்யது said...

//நல்ல கவிதையும் அதனால கெட்டு விட வாய்ப்பு இருக்கு//

கரெக்ட்டு...தலைப்ப முதல்ல மாத்துங்க...

கவிதையின் கடைசி பத்தி பெண்களுக்கான ஆண்களின் பதில் அல்லது காலில் விழுதல் ரகம்.

( வீட்டு சாப்பாடு,இட்லி,நெய் தேங்காச்ச‌ட்டினி தந்த‌ தெம்புல‌ எழுதுனீக‌ளோ ?? )

அபுஅஃப்ஸர் said...

ஊருக்குப்போயும் பதிவு போடுவதை விடலியா

எப்பவும் போல் நல்லாயிருக்கு கலக்குங்க‌

கவிதை(கள்) said...

நல்லா இருக்கு பாலா


விஜய்

பாலா said...

நன்றி நவாஸ்
நன்றி சங்கர்
நன்றி ஷபிக்ஸ்
மாப்பி கிகிகி
ரைட் மாம்ஸ்
வாங்க செய்யது (உங்க கிட்ட எதையும் சொல்ல முடியாது போல இருக்கு இங்க வந்து எல்லாத்தையும் வரிசை படுத்துறீங்க )
வீட்டுல வேலை வெட்டி ஏதும் இல்ல அதனால பதிவு போடுறதுதான் இப்போதைக்கு மெயின் வேலை அபு
வாங்க விஜய் அண்ணா போன் நம்பெர் குடுங்க கால் பண்றேன்