கடலின் காதலன்

Friday, October 16, 2009

பேச்சிலர் டிகிரி- 4

வள்ளுவப்பேராண்மை இகழ்தலுக்காட்படும்


பிரம்மச்சர்யம் புசித்தவென் நிசிகள் .


பூமிதி விழாவின் தணல் துண்டங்களை


தளர்த்தி சென்றிருக்கிறாள் கனவுப்


பெண்ணொருத்தி உள்ளும் புறமும் .


முறுக்கேற்றப்பட்ட வீணை நரம்புகள்


சரணம் வாசிக்கும் வாய்ப்பற்றவை (?)


சதைப்புசிக்கும் மிருகத்தின் வளர்தல்


பாக்டீரியப் பெருக்கத்திற்கான தட்பம்

என் உடல் .


கனவினைக் கொலைத்துமதன் உழவுச்சேற்றில்


மிருகத்தின் கால்தடம் .


வாய்ப்பின் வழியடைத்த இரவில்

தற்கலந்தழியவும் தேவையாய்

கனவுப் பெண்ணுடல் ..................


குறிப்பு :

மேற்கண்ட கிறுக்கல் என்பது "முட்டை போண்டா "போன்றது முட்டைப்பொரியல் விரும்புபவர்கள் "நேசன் " கடைக்கு செல்லவும் .

நண்பர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் .

பாலா

9 comments:

S.A. நவாஸுதீன் said...

பேச்சிலர் டிகிரி வர வர ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு. இங்கேயும் Master Passion தானா.

நேசனின் வரிகள் ஒரு சிறந்த கல்லூரி பேராசிரியர் என்றால், நீங்கள் கல்லூரியின் மிகச்சிறந்த மாணவர் என்பதில் சிறு ஐயமும் இல்லை.

அபுஅஃப்ஸர் said...

//மேற்கண்ட கிறுக்கல் என்பது "முட்டை போண்டா "போன்றது//

தீபாவளிக்கு இந்த முட்டைபோன்டாதான் ஸ்பெஷலா

பலகாரம் இல்லியா.. இனிப்பா எழுதுங்க பாலா

தீபாவளி வாழ்த்துக்கள்

நேசமித்ரன் said...

தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்


ஸ்பெஷலா

எழுதுங்க பாலா

SUREஷ் (பழனியிலிருந்து) said...

வாழ்த்துக்கள்

பா.ராஜாராம் said...

அருமையாய் இருக்கு மாப்ள.உங்களின் தனித்துவம் இதிலும்.தீபாவளி வாழ்த்துக்கள் பாலா!

ஹேமா said...

அச்சோ...நேசனுக்கும் எதிர்க்கவிதை போட ஒரு ஆள் வந்தாச்சு.
நின்மதியா இருக்கு.

அ.மு.செய்யது said...

பாலா நல்லா இருக்கு...ஆனா வழக்கமான உங்களுடைய பாணி பிரமிக்க மட்டுமே வைக்கிறது.சில இடங்களில்
ரசிக்க முடியவில்லை.

இன்னும் கொஞ்சம் சிம்பிளா எழுதுங்களேன்.ப்ளீஸ்...

கவிதை(கள்) said...

பாலா பட்டய கிளப்புறீங்க

வாழ்த்துக்கள்

விஜய்

பாலா said...

நன்றி நண்பர்களே இது
நேசன் கடையில் அடித்த சரக்கின் விளைவு அவ்வளவே
மீண்டும் பினூட்டமிட்ட நண்பர்களுக்கு இபோதொரு மிகப்பெரிய நன்றி