கடலின் காதலன்

Tuesday, October 5, 2010

பார்பி பொம்மையின் தோழி !!!

கழுகின் நகக்கால்கள் கைவிரல்களின் மடங்கில்
பெருகிநிற்கும் கரங்கள் கீறும் வேதனை
மிடறு விழுங்கி உடையும் குரலில்
உன் " Miss you "

தனிவெறுமை மகாசமுத்திர நினைவலைகளின்
நிசப்த பேரிரைச்சல் டெசிபல் அளவுகளின் எல்லை.
தாள இயலாதது ..

பார்பி பொம்மையின் தோழி; கிலுவைதளிர்
பாத தேவதையின் ஆசி பெற்றவன்
நாட்களை கொன்றபடியிருக்கிறேன் அன்பே ..

காத்திரு ..
.
.
.

டெடிபியர்களும், பார்பிக்களும் எனக்கான
"ப்பா" க்களை தின்று தீர்த்து கொண்டிருக்கின்றனவாம்

என்ன செய்ய ?? :((

11 comments:

பனித்துளி சங்கர் said...

//////தனிவெறுமை மகாசமுத்திர நினைவலைகளின்
நிசப்த பேரிரைச்சல் டெசிபல் அளவுகளின் எல்லை.
தாள இயலாதது ..
////

அருமை வார்த்தைகள் நிசப்தம் கிழிக்கிறது . பகிர்வுக்கு நன்றி . தொடருங்கள் மீண்டும் வருவேன்

வினோ said...

காலம் கனியும் வரை காத்திரு...

நட்புடன் ஜமால் said...

miss you - தமிழாக்கம் என்ன ...

சிவாஜி சங்கர் said...

"ப்பா" ;)

பத்மா said...

கிலுவை தளிர் பாதம் ...சூப்பர் பாலா...

கண்கள் கிலுவை மரத்தை தேட ஆரம்பித்து விட்டது ..

என்ன ஒரு சொல்லாடல் சூப்பர் ..

அந்த ப்பா..புரியவில்லை

வினோ said...

@ பத்மா - அது அப்பா என்று நினைக்கிறன்.... (குழந்தைக்கு கவிதை எழுதினால்)

sakthi said...

தனிவெறுமை மகாசமுத்திர நினைவலைகளின்
நிசப்த பேரிரைச்சல் டெசிபல் அளவுகளின் எல்லை.
தாள இயலாதது ..

வார்த்தை பிரயோகங்கள் அருமை பாலா

சிவாஜி சங்கர் said...

ப்பா = ம்மா :)

ராகவன் said...

டேய்!

கொல்றடா...

ரொம்ப நல்லாயிருந்தது...

வேற என்ன சொல்றது...

வாழ்த்துக்கள்

அன்புடன்
ராகவன்

தமிழ்க்காதலன் said...

தீராத ஏக்கங்களை....!
தின்றுத் தீர்த்த நாட்களை....
தாளாத .... தவிப்புடன்....
கடலாடி மனம்...கசிந்தாடும்
உணர்வு கொந்தளிப்பு....!!
தரும் பேரிரைச்சல்...
தாளாத ஆழி தரும் "டெசிபல்"
குறைவுதான்...!!
தாங்காத தனிமை....
காத்திருக்கும் இளமை....
தாகம் பெருக்கும்....
மழலையின்....."ப்பா...ப்பா...ம்மா...ம்மா"
மகிழ்ச்சி கிடைக்க....
வாழ்த்துக்கள்..... இனிய பாலாவுக்கு.

Vettipullai said...

பிரிவின் துயரம்... அருமை...