கடலின் காதலன்

Wednesday, September 22, 2010

கிரீன் டீ வித் நிலா

இன்று, 22 / 09 / 2010 - புதன், கீழை மலேசியா - அழகொழுகும் சபா , (SABA )

இந்த நடுக்கடலுக்கு அருகில் இருப்பது லபுவான் (LABUAN ) தீவின் துறைமுகம் .
இன்று நிலவு பார்த்தீர்களா நண்பர்களே ??
என் இருப்புக்கு அல்லது கடல் மட்டத்திற்கு ஏறக்குறைய 38 இலிருந்து 40 டிகிரி வரை இருக்கலாம் நிலவிருப்பின் கோணம் . இதை எழுதும் கணம் இன்னமும் அதிகப்படுத்தி கொண்டிருக்கலாம் தன் பாகையை.
அந்த நீல போர்வைக்குள் விழுந்திருக்கும் ஓட்டையில் நண்டு வாய்பிளப்பது போன்றான கறை , ஒருவேளை இப்படி நிகழ்திருக்கலாம் என்றோ ஒருநாள் அந்த நீல சல்லாதுணிக்கு பின்னால் இருந்த வெளிச்ச உலகிலிருந்து இப்பூமி துணியை துளைத்து கொண்டு விழுந்திருக்கலாம் அதைத்தான் தேடிக்கொண்டிருக்கிறது போலும் இந்த ஓட்டை வழியே அவ்வுலகம் . காயம் துடைக்கும் விரவிய பஞ்சுகளை இல்லை பக்க வாதம் கண்டு இடப்பக்கம் வாயோடு கைகால் விளங்காமல் போன என் ஊர் உடையார் வீட்டு கிழவியின் நரை வெளுப்பை நியாபகப்படுத்தி கொண்டிருகிறது நிலவின் விளிம்பை கவ்வி துடைக்கும் டிஷு பேப்பர் மேகங்கள் . என் வரையில் திருமணப்பெண் முகத்தில் ஒளிர கிடைக்கும் நான் பெயரறிந்திரா அந்த பொன்னிற துணுக்குகள் உடுக்களாய் ஓரிரண்டு மட்டுமே எனக்கான இன்றைய வானத்தில் . பதினைந்து கிராம் கல்லுக்கே அதிர்ந்தலையும் தென்சீனக்குளம் மன்னிக்க தென் சீனக்கடல் .
எங்களுக்கென்றே சேவை செய்யும் கடலூர்திகள் தூரத்தே மினுக்கி கொண்டிருக்கிறது .

போனமுறை வானூரும் பயணத்தில் MH (malaysian hospitality ) இல் வாசிக்க கிடைத்த KK
(kota kina balu ) பற்றிய ஒரு கட்டுரையில் மலேசியா புகைபட கலைஞனின் ரசனை இப்படியாக வாசிக்க கிடைத்தது " என் பிறப்பிடம் என்ற வகையில் இவ்விடம் மீதான காதலை தவிர்த்து காதலிக்கவும் இருக்கிறது பச்சைதேநீர் கோப்பையுடன் என் வீட்டு வாயிலில் இருந்த படி மலையை குடிப்பது ."
சற்றுமுன் தேநீர் இடைவேளைக்கென Main deck (கப்பல் மேற்தளம் ) coffeeshop இல் Green tea யோடு நிலா தின்றதில் புலம்பி தொலைத்துவிட்டேன் இதை .
நம்ம ஊர்ல எப்படிங்க மழை பெய்யுதா? இல்ல நிலா தெரியுதா ?

7 comments:

வினோ said...

மக்க இந்த ஊர்ல வெறும் மழை தான்.. நிலாஆஅ வா :(

sakthi said...

" என் பிறப்பிடம் என்ற வகையில் இவ்விடம் மீதான காதலை தவிர்த்து காதலிக்கவும் இருக்கிறது பச்சைதேநீர் கோப்பையுடன் என் வீட்டு வாயிலில் இருந்த படி மலையை குடிப்பது ."

::)))

தமிழ்க்காதலன் said...

இனிய பாலா, வணக்கம். நிலவு பற்றிய புதிய பரிணாம சிந்தனையை தூண்டி இருக்கிறீர்கள். பூமிக்கு புதிய பிறப்பு உங்கள் சிந்தனை. "நிலா....பூமியின் கரு வாய்...." உங்கள் சிந்தனையின் படி..., நல்ல வளமான எழுத்து உங்களுடையது. நன்றி. தொடருங்கள். வாய்ப்பிருக்கும் போது வந்து பாருங்கள்...( ithayasaaral.blogspot.com ). என்றும் அன்புடன்...தமிழ்க் காதலன்.

ராகவன் said...

அன்பு பாலா,

எப்படி இருக்க!
நீ ஆன் லைன் வந்த போது நான் பேச முடியாமல் போய்விட்டது.

பச்சைத்தேனீரில் பாலாடையாய் மிதக்கும் நிலா... நல்லாயிருக்கு... ஜேடி குரூஸின் கொற்கைனு ஒரு நாவல் வந்திருக்காம் நல்லாயிருக்குன்னு ஒரு நண்பர் சொன்னார்... கடலாடிக்கும் பிடிக்கும்னு நினைக்கிறேன்.

எனக்கு மேலயும் நிலா இருந்தது நேற்று, பவுர்ணமிக்கு எத்தனை நாள் இருக்குன்னு கேட்ட என் மணைவியிடம்... பிறை நிலா தான் எனக்கு பிடிக்கும்னு பேசிக் கொண்டிருந்தேன். அதே நேரத்தில் நீயும் நிலா பார்த்துக் கொண்டிருந்தது, நிலா பார்த்தல் நமக்கு எல்லோருக்கும் பொது என்று நினைத்து கொண்டேன்

அன்புடன்
ராகவன்

adhiran said...

நிலவும் கடலும் உண்டு மழையில்லை சென்னையில். வாழ்த்துக்கள் தம்பி.

சிவாஜி சங்கர் said...

கடலோடு கடலாடி.,
கடல் தின்று.,
கடல் செரித்து.,
கடலை காதலிக்கும்

கடற்காதலன்..!
என் பாலா... ;)

கமலேஷ் said...

பலா, படிக்கிறவன் மேல ஏறி ஏறி போகுது உங்க நிலாவும், எழுத்தும்..
ரொம்ப நல்லா வந்திருக்கு.