கடலின் காதலன்

Thursday, September 24, 2009

குடைக்குள் மழை !!???

தென்னை ஈர்க்கின் நுனி திரண்டு

மழை மறுபிறப்பெடுக்கும்

ஈரநாளில் ;

உன்னின் நானும் ;நானெனப்படும்

உன்னின் எனக்கான நீயும் .

.

..

விரல்களின் கலவியிலுதித்த

செஞ்சூட்டு குழவியொன்று

பருகிக்கொண்டிருக்கிறது இதயத்தின்

காதற் தாய்மையை .

..

உன்னாலவென் தருணங்கள்

வார்த்தைகளில் வர்ணத்தையும்

வாசனையையும் பீச்சியடிப்பதை

(அறிவாயா நீ ?(டீ))

..

ஒற்றைக்குடைக்குள் மௌனத்தோடு

ஒழுகுகிறது காதற் பெயருற்றும்

பெயரிடப்படாவொன்று!!!!!

சட்டென்று பொழிந்து விடுகிறது

ஒற்றை வெம்மழை உதடுகளினிடுக்கில்

திறந்த கதவின் வழி சட்டென்று

உடற்கலவும் பதனவறை காற்றைப்போல ..

..

கண்டும் காணா தோழியைப்போல்

ஓடிக்கொண்டிருக்கிறது

வெட்கிச்சிவந்து செம்மழையாய் ..

குறுகுறிப்பு .

இது மழையை காதலிக்கும் "மழைக்கு ஒதுங்கியவருக்காக "

மழை ??!!!

மழை ... இதன் மீது எனக்கு காதலோ ,விருப்பமோ , ரசனையோ இதுவரை

வந்ததாய் இல்லை .இதன் அவசியம் பொருட்டே வலுவில் ஏற்று கொண்டிருக்கிறேனென்றே நினைக்கிறேன் .ரோஜா வர்ணத்தின் மீது காதலிருந்தும் வன்மயாய் கறுப்பை ஏற்று கொண்டதைப்போல .

என்றேனும் ஒருநாள் இந்த மண்புணரியை இதே குடைக்குள்ளோ அல்லது

ஒற்றை இருக்கையில் எவளோ அவளுடன் சாளரக்கம்பிகளிடுக்கின் வழி மண் புணர்தலை காதலிக்க தொடங்கலாம் அப்போது இந்த கிறுக்கல்களின் அவசியம் நேரலாம்

14 comments:

யாழினி said...

"ஒற்றைக்குடைக்குள் மௌனத்தோடு
ஒழுகுகிறது காதற் பெயருற்றும்
பெயரிடப்படாவொன்று!!!!!
சட்டென்று பொழிந்து விடுகிறது
ஒற்றை வெம்மழை உதடுகளினிடுக்கில்
திறந்த கதவின் வழி சட்டென்று
உடற்கலவும் பதனவறை காற்றைப்போல .."

மண் சாய்கின்ற மழைக்கும் நேசத்திற்கும் மிக நீண்டதொரு தொடர்பு உண்டு...
இந்த கவிதையும் அதை போலொரு அழகு...!! இது குடைக்குள் மழையாகினும்
குடை இல்லாது நனைவது போலொரு இதமானது...!!
இனியும் எழுத வாழ்த்துகள்....!

பா.ராஜாராம் said...

//உன்னின் நானும்;நானெனப்படும்
உன்னின் எனக்கான நீயும்//

மனசின் தாழ்வாரத்தை உருவுது மாப்ள.

//விரல்களின் கலவியிலுதித்த//

வார்த்தைகளை தட்டச்சு செய்யவே எனக்கு தாவு தீந்து போகுது பாலா.

அடிச்சு துவச்சு காய போட்டு கிழிப்பு வேற மாட்டிட்டு போறாங்கப்பா இப்பல்லாமென
வடிவேல் மாதிரி புலம்ப வேண்டி இருக்கு மாப்ள..

பாத்து செய்யுங்க.

செய்யத வேறு கோர்க்கிரீறு..
மழை??!!!(எதிரியை கூடவே வச்சுருக்கீங்களே செய்யது)

beutiful baalaa!

கார்க்கி said...

மாப்பி நீ கலக்கு

அபுஅஃப்ஸர் said...

வரிகள் புரிந்தவருக்கு நிச்சயம் பிடிக்கும்

அருமை நண்பா

தொடரும்

பாலா said...

நன்றிங்க தோழி
வாங்க மாம்ஸ் (செய்யத காரணமாத்தான் இதுக்குள்ள இழுத்து விட்டிருக்கேன் )
நன்றி மாப்பி நீயும் எப்பவும் கலக்கு கலக்கு னுட்டு இருக்கே நானும் எத கலக்குரதுனு தெரியாம முழிசுகிட்டு தான் இருக்கேன் எப்படி கலக்குரதுன்னு சொல்லிட்டு போ மருவாதையா
நன்றி அபு நீங்க வருவதே போதுமே அப்புறம் எதுக்கு கமென்ட்

ANU said...

விரல்களின் கலவியிலுதித்த

செஞ்சூட்டு குழவியொன்று

பருகிக்கொண்டிருக்கிறது இதயத்தின்

காதற் தாய்மையை .

..

உன்னாலவென் தருணங்கள்

வார்த்தைகளில் வர்ணத்தையும்

வாசனையையும் பீச்சியடிப்பதை

(அறிவாயா நீ ?(டீ))

..

ஒற்றைக்குடைக்குள் மௌனத்தோடு

ஒழுகுகிறது காதற் பெயருற்றும்

பெயரிடப்படாவொன்று!!!!!

சட்டென்று பொழிந்து விடுகிறது

roampa alahana varikal bala

engathaan erukaaloo unnavalanaval

malzayil nanainthathu poandra oru unarvu bala
romapa nalla erukku

ஹேமா said...

பாலா மழை,பெருமழை,காதல் மழைக்குள் நனைந்தும் உடல் நனையாமல் ஈரம் சொட்டச் சொட்ட நான்.இன்னும் தூவானம் நிற்காமல்.
அருமை.சொல்விளையாட்டு அதைவிட அருமை.நீங்கள் சொன்னது போலவே நிறையப்
பேசாமல் சுருக்கமாய் உங்கள் எண்ணங்களைச் சொல்லியிருப்பது அற்புதம்.எனக்கு இப்பிடி வரமாட்டேன் என்கிறதே.
நான் என்ன செய்ய ?

எனக்கு இக்கவிதையில் மிக மிகப்பிடித்த வரிகள்....

//விரல்களின் கலவியிலுதித்த செஞ்சூட்டு குழவியொன்று
பருகிக்கொண்டிருக்கிறது இதயத்தின்
காதற் தாய்மையை.//

பிரியமுடன்...வசந்த் said...

//காதற் பெயருற்றும்

பெயரிடப்படாவொன்று//

ஹேய் எப்டிங்க இந்த மாதிரி வரிகள் எல்லாம் எழுதுறீங்க கொஞ்சம் சொல்லிக்குடுங்கப்பா...

அ.மு.செய்யது said...

சில்லென்று ஒரு கவிதை !!

மழையென்றாலே ஒரு வித சிலுசிலுப்பும் பரவசமும் ஈர நினைவுகளும் தொற்றிக் கொண்ட காலங்கள் மாறிப்போய் மழை கூட இப்போதெல்லாம் சலிப்பை ஏற்படுத்துகின்றன.

உலர்ந்த நினைவுகளை ஒரு அற்புத கவிதை கொண்டு மீண்டும் ஈரப்படுத்தியிருக்கிறீர்கள்.நிச்ச‌ய‌மாக‌ வ‌லையுல‌கில் இக்க‌விதை க‌வ‌னிக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌து.

எல்லாவ‌ரிக‌ளையும் இர‌சித்தேன் என்றாலும் கீழ்க்க‌ண்ட‌ வ‌ரிக‌ள் வ‌ழ‌க்க‌ம் போல‌..பாலாவின் ஸ்டைலில் ..

ஒற்றைக்குடைக்குள் மௌனத்தோடு

ஒழுகுகிறது காதற் பெயருற்றும்

பெயரிடப்படாவொன்று!!!!!

சட்டென்று பொழிந்து விடுகிறது

ஒற்றை வெம்மழை உதடுகளினிடுக்கில்

திறந்த கதவின் வழி சட்டென்று

உடற்கலவும் பதனவறை காற்றைப்போல ..
//

ம‌ர‌ண‌ ர‌ச‌னை !!!

அ.மு.செய்யது said...

//இது மழையை காதலிக்கும் "மழைக்கு ஒதுங்கியவருக்காக "//

ந‌ன்றி பாலா !

////(செய்யத காரணமாத்தான் இதுக்குள்ள இழுத்து விட்டிருக்கேன் )
//

அந்த‌ உள்குத்து என்ன‌ன்னு கொஞ்ச‌ம் சொல்றேளா ??

S.A. நவாஸுதீன் said...

;உன்னின் நானும் ;நானெனப்படும் உன்னின் எனக்கான நீயும் ....

விரல்களின் கலவியிலுதித்தசெஞ்சூட்டு குழவியொன்று பருகிக்கொண்டிருக்கிறது இதயத்தின்காதற் தாய்மையை ...

சட்டென்று பொழிந்து விடுகிறது ஒற்றை வெம்மழை உதடுகளினிடுக்கில்திறந்த கதவின் வழி சட்டென்று உடற்கலவும் பதனவறை காற்றைப்போல ....
*****************************
பாலா! என்ன சொல்லி பாராட்டுரதுன்னு தெரியலை. பளிச்சுன்னு சொன்னா, செய்யது சொன்னது தான் சரி. மரண ரசனை.

பாலா said...

நன்றி அனுஷா (அ )அஸீஸ்
வாங்க ஹேமா (சித்திரமும் , செந்தமிழும் ???)
வாங்க வசந்த் (அதுக்கு கொஞ்சம் செலவாகுமே பரவாஇல்லையா??)
வாங்க செய்யது இது முழுக்க முழுக்க உங்களுக்காகவே எழுதுனது
ஏன்னா மழையோடான உங்கள் காதல்மீதான என் ஈர்ப்பு .
வாங்க நவாஸ் மாம்ஸ் நன்றிங்கோ. ஹாலிடேய் முடிஞ்சுட்டா ???

சந்தான சங்கர் said...

மழைக்கு ஒதுங்கியவரையும்
நனைத்துவிட்டீர்..
உன் வார்த்தை மழையினில்..
செய்யது...
என்ன
செய்ய!!

வாருங்கள் வரவேற்கிறோம்..

நன்றி..

பாலா said...

நன்றி சந்தான சங்கர்