கடலின் காதலன்

Monday, September 7, 2009

திமிரெழில்

நாவிற்கிடறும் பல்லிடுக்கின்

இறைச்சி துண்டு பிசிறோ ??

பல்லிடைப்பட்டோ ; வெட்டப்பட்டோ

நுனியறுந்த நகக் கண்ணோர

எரிச்சல் ரத்த தீற்றலோ ??

உன் திமிரோடு ஒத்துபோவது ..

ஆயிரமாயிரமாய்

திமிரின் வெளிப்பாடாய்

ஏகோபித்தவுன் ஆதரவில் .

இருக்கிறேன் நானும்

திரிசங்கின் ஓரத்தில் !!

(என்றேனும் இடம் பெயரலாம் )

துணிச்சலை திமிராய்

குழம்பி னேனோ????

பார்வையில் ; அழைப்பில் ;

நிராகரிப்பில் ; செயலில்

துணிச்சல் தூக்கில் (!!)

திமிரும் அழகென வளர்சிதைந்து

போர்த்தியிருக்கிறதுன்மேல்

எதோ ஈர்ப்பில்

வைரமுத்துவை கடன் வாங்கி

"ரெட்டைத்திமிரே

நெஞ்சில் முட்டிக்கொல்லு "

என வாய்வரை வந்ததை

காலணியை கையிலேடுப்பாயாதலால் :(

மறக்காமல் மறந்து வைத்தேன்

காரணக்குறிப்பு :

திமிருக்கும் அழகுரு கொடுக்கும் அவளால் அவளுக்கே இது .

நேசமுடன்

பாலா

24 comments:

அ.மு.செய்யது said...

அச‌த்திட்டீங்க‌ பாலா..

காதுல‌ ஹெட்செட் வ‌ச்சி பாட்டு கேட்டுட்டே தான் ப‌டிக்க‌ ஆர‌ம்பிச்சேன்.க‌விதையை
ரெண்டு வ‌ரி ப‌டிச்ச‌வுட‌னே ச‌ட்டுன்னு ஆஃப் ப‌ண்ணி வ‌ச்சிட்டேன்.

திமிர் !!! முழுதும் ர‌சிக்க‌ முடிந்த‌து.

அ.மு.செய்யது said...

"திமிரெழில்" யுரேகா யுரேகா !!!!

கார்க்கி said...

மாப்பி, உனக்கு யாரு இதெல்லாம் எழுதி தருவது?

சும்மாப்பா.. அட்டகாசம்

S.A. நவாஸுதீன் said...

திமிரெழில் - தலைப்பே அழகிய முரண்பாடு. அருமை பாலா

S.A. நவாஸுதீன் said...

திமிரும் அழகென வளர்சிதைந்து போர்த்தியிருக்கிறதுன்மேல்

பிடிச்சுப் போச்சுன்னாலே இப்படிதான்!! எல்லாமே அழகாத்தான் தெறியும். கலக்குறீங்களே குரு

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

நேசமித்ரன் said...

வைரமுத்துவ எதுக்கு பாலா கூபிடுறீங்க
கவிதை அதை விட ஒரு படி மேல்
அருமை வார்த்தைகளுக்கு இடையில இருக்குற இறுக்கம் இருமார்புக்கு இடையில் புதையும் முகத்தில் கன்னம் தொடும் திண்மையான மென்மைன்னு சொல்லலாம் போல இருக்கு

மண்குதிரை said...

மொழி நல்லா இருக்கு பாலா

பாலா said...
This comment has been removed by the author.
சந்ரு said...

நல்லாருக்கு...

பிரியமுடன்...வசந்த் said...

//திரிசங்கின் ஓரத்தில் //

இதுதான் கவிதையின் கருவா பாலா?

கவிதை கிளாஸ்

mix said...

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....தமிழ்செய்திகளை வாசிக்க

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்

பா.ராஜாராம் said...

அற்புதம் பாலா!தலைப்பில் இருந்து தொடங்குகிறது வசியமொழி.எங்கு இறுகும்,எங்கு நெகிழும் என அறுதியடமுடியாத வீச்சு.
//என்றேனும் இடம் பெயரலாம்//என்பது "மனுஷிக்கு" எச்சரிக்கையா?மனுஷியுடனான குழைவா?என குழப்புகிற இடத்தில் கவிதை வேறு தளம் தாவுகிறது.//துணிச்சலை திமிராய் குழம்பினேனா//வாசிப்பவனையும் மயக்க நிலை கொள்ள வைக்கிறது.அழகாய் இருக்கிறது.பயமாவும் இருக்கிறது!(காலணி குறித்துதான்-நம் பாலா இல்லையா?)பின்னியிருக்கீங்க!

பாலா said...

வாங்க செய்யது அதோடு நன்றியும்
மாப்பி நல்லா கேட்டையா ஒரு கேள்வி
வாங்க நவாஸ் ( நீங்க கொடுத்த டார்ச்சர்லதான் இந்த கொலைவெறி )
முயல்கிறேன் உலவு.காம்
நன்றி நேசன் சார் ( என்னால அடி வாங்க முடியாது சார் )
நன்றி மண்குதிரை
நன்றி சந்ரு
வாங்க வசந்த்
வருகிறேன் தமிழர்ஸ்
வாங்க ராஜாராம் அய்யா எனக்கும் பயம்தான் அதனால்தான் அந்த கடைசி வரி

சத்ரியன் said...

//இருக்கிறேன் நானும்
திரிசங்கின் ஓரத்தில் !!
(என்றேனும் இடம் பெயரலாம் )//

பாலா,

உண்மையாகவே உமக்கு துணிச்சல் அதிகம் தான் ஓய்!
இடம் கூட பெயர்வீர்களோ?

சங்கின் ஓரத்திலிருந்து கீழ்ப்புறமா? மேல்புறமா?

படித்து ரசிச்சேன்;ரசித்து படிச்சேன்.

ஆனாலும், ஆயுதங்கள பாத்து கடன் வாங்குனத கவிதைய ....!
சரி விடுங்க.

பாலா said...

நன்றி சத்ரியன் வருகைக்கும் பின் தொடர்விற்கும்

நட்புடன் ஜமால் said...

எழிலான திமிர்

---------

திரிசங்கின் ஓரத்தில் !!

(என்றேனும் இடம் பெயரலாம் )]]

ம்ம்ம் ...

பாலா said...

நன்றி ஜமால் சாரே

அன்புடன் மலிக்கா said...

நல்ல ரசனை, நல்ல கவிதை
வாழ்த்துக்கள்

பாலா said...
This comment has been removed by the author.
பாலா said...

வாங்க மலிக்கா

சத்ரியன் said...

//இருக்கிறேன் நானும்
திரிசங்கின் ஓரத்தில் !!
(என்றேனும் இடம் பெயரலாம் )//

பாலா,

உண்மையாகவே உமக்கு துணிச்சல் அதிகம் தான் ஓய்!
இடம் கூட பெயர்வீர்களோ?

சங்கின் ஓரத்திலிருந்து கீழ்ப்புறமா? மேல்புறமா?

படித்து ரசிச்சேன்;ரசித்து படிச்சேன்.

ஆனாலும், ஆயுதங்கள பாத்து கடன் வாங்குன கவிதைய ....!
சரி விடுங்க.

Azeez said...

ha ha ha sonnathai seythaai seyurathai sonnai ,,,,,
aanalum roampa thimirrrrrrrrrrrr
hahahahhahaha
nalla erukku

Anonymous said...

Hey, I am checking this blog using the phone and this appears to be kind of odd. Thought you'd wish to know. This is a great write-up nevertheless, did not mess that up.

- David