தென்னை ஈர்க்கின் நுனி திரண்டு
மழை மறுபிறப்பெடுக்கும்
ஈரநாளில் ;
உன்னின் நானும் ;நானெனப்படும்
உன்னின் எனக்கான நீயும் .
.
..
விரல்களின் கலவியிலுதித்த
செஞ்சூட்டு குழவியொன்று
பருகிக்கொண்டிருக்கிறது இதயத்தின்
காதற் தாய்மையை .
..
உன்னாலவென் தருணங்கள்
வார்த்தைகளில் வர்ணத்தையும்
வாசனையையும் பீச்சியடிப்பதை
(அறிவாயா நீ ?(டீ))
..
ஒற்றைக்குடைக்குள் மௌனத்தோடு
ஒழுகுகிறது காதற் பெயருற்றும்
பெயரிடப்படாவொன்று!!!!!
சட்டென்று பொழிந்து விடுகிறது
ஒற்றை வெம்மழை உதடுகளினிடுக்கில்
திறந்த கதவின் வழி சட்டென்று
உடற்கலவும் பதனவறை காற்றைப்போல ..
..
கண்டும் காணா தோழியைப்போல்
ஓடிக்கொண்டிருக்கிறது
வெட்கிச்சிவந்து செம்மழையாய் ..
குறுகுறிப்பு .
இது மழையை காதலிக்கும் "மழைக்கு ஒதுங்கியவருக்காக "
மழை ??!!!
மழை ... இதன் மீது எனக்கு காதலோ ,விருப்பமோ , ரசனையோ இதுவரை
வந்ததாய் இல்லை .இதன் அவசியம் பொருட்டே வலுவில் ஏற்று கொண்டிருக்கிறேனென்றே நினைக்கிறேன் .ரோஜா வர்ணத்தின் மீது காதலிருந்தும் வன்மயாய் கறுப்பை ஏற்று கொண்டதைப்போல .
என்றேனும் ஒருநாள் இந்த மண்புணரியை இதே குடைக்குள்ளோ அல்லது
ஒற்றை இருக்கையில் எவளோ அவளுடன் சாளரக்கம்பிகளிடுக்கின் வழி மண் புணர்தலை காதலிக்க தொடங்கலாம் அப்போது இந்த கிறுக்கல்களின் அவசியம் நேரலாம்

