கடலின் காதலன்

Friday, July 3, 2009

எதிர்நிலையிரவு

வழமையாய் அழைப்பு துளிர்க்கும்

முனை வழமையாய் இல்லை

தேவைக்கு இறைஞ்சியோ ,வன்செயலோ

அதற்கு தேவையாய் இல்லை

அதொரு எதிர் நிலையிரவு ஆதலின் !!!

.

.

கொழுவை நிலம் உழுதல் !

வண்ணப்பூச்சியை மலர் குடித்தல் !

விறகு தீயை எரித்தல் !

சாத்தியம் !! ம்ம் !!!!!!

அதொரு எதிர்நிலையிரவு ஆதலின் !

.

.

எதிர் முனையில் வளர்ந்து விட்ட அழைப்பிதளால்

எங்கும் எதிர் நிலை !

எதிலும் எதிர் நிலை !

நிலையும் எதிர் நிலை !

கட்டுடைப்பு

ஆதலின் அதொரு எதிர்நிலையிரவு !

.

.

ஆணாதிக்கம் தொடங்குமிடம்

இப்போது தலைகீழாய்

இங்கது உடையும் தருணம்

வேறெங்குமது உடைவதற்காய் அவசியமிராது

ஆதலின் அதொரு எதிர் நிலையிரவு !

.

.

அவளின் ஆதிக்கம் உச்சத்தில்

நான் பெண்மையை அணிந்திருந்தேன் ?!!!!!

அவளுக்கு மீசை முளைத்து விட்டிருந்தது ?!!!!

என் சிறந்த இரவுகளில் அதுவும் .

ஆதலின் அதொரு எதிர் நிலையிரவு ............

10 comments:

ராம்.CM said...

நளின வரிகள்!அருமை.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அண்ணாச்சி அசத்துங்க...,

S.A. நவாஸுதீன் said...

கூடலின்போது எதிர்நிலை, நேர்நிலை புரியாத புதிர்நிலை எனினும் அது புனிதநிலை. இங்கு நெருப்பும் நீரை விழுங்கும் ஆதலின் அது எதிர்நிலை

நட்புடன் ஜமால் said...

அவளுக்கு மீசை முளைத்து விட்டிருந்தது ?!!!!என் சிறந்த இரவுகளில் அதுவும்\\

மிக அருமை பாலா!

அ.மு.செய்யது said...

//அவளுக்கு மீசை முளைத்து விட்டிருந்தது ?!!!!//

கிளாஸ்.

பெண்மை வீறுகொண்டெழும் உச்சத்தை அழகாக வடிவமைத்திருக்கிறீர்கள்.

எடுத்து கொண்ட களமும்,தலைப்பும் வியக்க வைக்கிறது.

sakthi said...

முடியலை

வாழ்க வளமுடன்!!!!

பாலா said...

நன்றி ராம்
வாங்க சுரேஷ் அண்ணா
நவாஸ் , ஜமால் எல்லாம் உங்களுக்காகத்தான்
நன்றி செய்யது
அக்கா இந்த முடியலைக்கு என்ன அர்த்தம்ன்னு ஒழுங்கா சொல்லிட்டு போங்க

வலசு - வேலணை said...

//
அ.மு.செய்யது said...

எடுத்து கொண்ட களமும்,தலைப்பும் வியக்க வைக்கிறது.
//

வழி மொழிகிறேன்.
தொடர்ந்து கலக்குங்க பாலா

அப்துல்மாலிக் said...

கலக்கல் வரிகள் பாலா

ரொம்ப நாளாச்சி பதிவு போட்டு சிறந்த பதிவு

பாலா said...

நன்றி வலசு -வேலணை
நன்றி அபு