அவனைப்பார்த்ததுண்டா நீங்கள் ?
முப்பது,முப்பத்தைந்து வருடங்கள்
முன்பு அவன் பிறந்திருக்ககூடும் !
உங்கள் தெருவில் ,ஊரில்
நகரத்தில் எங்கேனும் .
.
அவனைப்பார்த்திருப்பீர் நீங்கள்
அவன்தானவனென்று உங்களுக்கு
தெரிய வாய்ப்பில்லை .
.
நினைவு படுத்தி பாருங்கள்
"பழுப்பு நிற பற்கள்
செம்படைந்த தலை மயிர்
உள்நோக்கி வளைந்த கால்கள்
தரங்கிய உடல் "
அடையாளம்
.
மனப்பிறழ்ந்தவன்
உணவேயவன் தேவை
உங்கள் படிமம்
அவன்மீது
.
அவன் கனவுகள்
உடற்,மனத்தேவைகள்
அறிய விருப்பமில்லை ,நேரமில்லை
உங்களுக்கு .
அவனை மனித வட்டத்தினின்று
தூக்கி எறிந்திருக்கலாம் . (இல்லை )
அவனை மறந்தே போயிருக்கலாம்
பாதகமில்லை !!
.
என்றேனும் அவசரகதி வாழ்வில்
ஒருநாளவன் இறந்து போயிருப்பான்
அன்றும் நேரமிருக்காது உங்களுக்கும் எனக்கும் .!!!!
ஆகையால் புறப்பட்டுவிட்டேன் இதோ
.
அவனிருக்கும் போதேயவனுக்கு அஞ்சலி செலுத்த
"ஒரு உச்"
"இயன்றால் இருதுளி கண்ணீர் "
முடிந்தால் நீங்களும் வரலாம் ..........
23 comments:
கொஞ்சஞ் சிரமந்தேன்..புரிய..
நானும் இதே கருத்துள்ள ஒரு கவிதை ட்ரை பண்ணிட்டு இருந்தேன்.அதுக்குள்ள
நீஙக் போட்டீங்க...
சரி விடுங்க..
அவனிருக்கும் போதேயவனுக்கு அஞ்சலி செலுத்த "ஒரு உச்""இயன்றால் இருதுளி கண்ணீர் " முடிந்தால் நீங்களும் வரலாம் ..........
முடிந்தால் ஒரு வேலை உணவு.
கவிதை நல்லா இருக்கு பாலா
இன்றைய இயந்திர வாழ்க்கையில், மனிதாபிமானம் செத்துக் கொண்டிருக்கிறது
(இந்த கவிதை நேரடியா புரிஞ்சாலும், இதை எழுதியது நீங்கள் என்பதால், இதுக்கு உள் அர்த்தம் உங்களின் பார்வையில் வேறாக இருக்குமோ என்ற அச்சமும் உண்டு.)
(ச்சே)ன்னையில் இம்மாதிரி நிறைய, தினம் தினம் பார்க்கிறேன். பார்க்கும் போதெல்லாம் வருந்துவேன். இவனை காதலித்தவள் கூடவா இல்லை இவனோடு என்று..
இல்லை அவள் கூட இல்லாததால் தான் இப்படியா???
ஏதும் செய்ய முடியாத கையாலாகாததனத்தின் உச்....சம் - வரவே இல்லையே கண்ணீர். என்ன செய்ய?
தஞ்சையா நீங்க. நானும்தான்.
அந்தப் படத்தில் ஒளிவட்டம் மட்டும்தான் தெரியுது பாலா.... (ச்சும்மா ஜோக்குதான்)
மாப்பி, ஆச்சரியபப்டுத்துகிறாய்.. keep it up
என் கண்ணாடி ...
நவாஸின் கருத்தை நானும் வழிமொழிகிறேன்.
பாலாவின் பார்வையில் ஒரு மனிதரை மனிதாபிமானமில்லாத மக்களின் பார்வை
இந்த பாலா க்கலே இப்படித்தானா? சொல்லுவதை தெளிவா சொல்லுங்கப்பூ
//அ.மு.செய்யது said...
கொஞ்சஞ் சிரமந்தேன்..புரிய..
நானும் இதே கருத்துள்ள ஒரு கவிதை ட்ரை பண்ணிட்டு இருந்தேன்.அதுக்குள்ள
நீஙக் போட்டீங்க...
சரி விடுங்க..
//
உங்கப்பார்வையில் நீங்களும் எழுதலாமே தப்பில்லைதானே
வாங்க செய்யது
"விரால் மீனு ஒரே டேஸ்ட்தான் கைபக்குவம் தான் வேற வேற நீங்க குழம்பு வைங்க நான் சாப்பிட தயார் "
நன்றி நவாஸ்
"உங்க எல்லாரையும் அப்புடி குழப்பி இருக்கேன் போல "
வாங்க வித்யா
"இந்த கவிதையோட(?) ஜுஸ பிழிஞ்சு குடுத்துடீங்க
சோழ நாட்டு குசும்பு இருக்கத்தான் செய்யுது என்ன பண்ண "
நன்றி மாப்பி
"நீ வந்து ஒரு ஸ்மைலி போடு போதும் "
வாங்க ஜமால்
" சாதாரணன் எல்லாரோட கண்ணாடியும் இதுதான் "
வாங்க அபு
"என்ன பண்ண எல்லாம் விதி நீங்க அனுபவிச்சுதான் ஆகணும் வேற வழி
super..
நன்றி அம்மு மது
(பார்த்தேன்)
நன்றி சகோதரி வித்யா
அருமை
விருதுக்கு வாழ்த்துக்கள்
நன்றி நேசமித்திரன் சார்
அற்புதம் பாலா!...
//அவனிருக்கும் போதேயவனுக்கு அஞ்சலி செலுத்த
"ஒரு உச்""இயன்றால் இரு துளி கண்ணீர்"
முடிந்தால் நீங்களும் வரலாம்...//
நானும் வருகிறேன் பாலா...
மிக்க நன்றி ராஜாராமன் சார்
பாலா கவிதை நன்றாக உள்ளது.
நன்றி கும்மாச்சி அய்யா
மிக அருமை!
//
அவனிருக்கும் போதேயவனுக்கு அஞ்சலி செலுத்த
"ஒரு உச்"
"இயன்றால் இருதுளி கண்ணீர் "
முடிந்தால் நீங்களும் வரலாம்
//
வந்திட்டோம்ல
இயன்றால் ஒருபிடி உணவு.
நன்றி மணி
வாங்க வேலணை
கவனிப்பாரற்றுக் கிடக்கும் இவர்களை கவனிக்க வைக்கும் நல்ல சிந்தனையுள்ள வரிகள். அருமை.
நன்றி உழவன் அய்யா
Post a Comment