கடலின் காதலன்

Tuesday, July 14, 2009

"ஜே .ஜே சில குறிப்புகளும் " சில குறிப்புகளும்

முதலில் பதிவுலகத்திற்கு என் நன்றி. யாரோவொரு பிரபல பதிவர் (பெயர் ஞாபகமில்லை மன்னிக்கவும் ) பரிந்துரைத்திருந்தார் படிக்கவேண்டிய சில புத்தகங்களென அவருக்கும் .

இராஜராஜன் திருமண மண்டபத்தில்(திருவாரூர் ) ஜனவரி மாத புத்தக கண்காட்சியில் இதோடு சேர்த்து "ஒரு புளியமரத்தின் கதை , ஸீரோ டிகிரி,சிவகாமியின் சபதமும் வாங்கினேன் .அவை பற்றி பிரிதொரு சந்தர்ப்பத்தில் பகிரலாமென ......

ஜே ஜே சில குறிப்புகள் .
"ஜோசப் ஜேம்ஸ் ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபது ஜனவரி ஐந்தாம் தேதி தனது முப்பத்து ஒன்பதாம் வயதில் ஆல்பெர் காம்யு விபத்தில் மாண்டதற்கு மறுநாள் இறந்தான் " இப்படி முதல் இரண்டு வரியிலேயே அவனைக் கொன்று போட்டு அத மேல் ஓடத் தொடங்குகிறது இந்த நாவல் அதனோடு ஓடியே ஆக வேண்டிய கட்டாயம் இல்லையேல் வேடிக்கை மட்டுமே பார்க்க இயலும் .
இப்படி சொன்னாலும் சில சமயம் எதோ ஒரு பக்கத்தை பிரித்து படிக்கும்போது மின்காந்த புலமென அப்படியே உள்ளிழுக்கும் தன்மை கொண்டதாயும் இருக்கிறது .
குறிப்புகள் என்றே சொல்வதால் வரிசைக்கிரமத்தை பார்க்க முடிவதில்லை
முதல் வரியில் இறந்தவன் நாவலின் இரண்டாம்பாகத்தின் முதல் வரியில் பிறக்கிறான் .இதெல்லாம் நாவலோடு ஓடியே ஜீரணித்து கொள்ளவேண்டியிருக்கிறது .
படித்துக்கொண்டிருக்கும் போதே வெளிவந்தது சுய மதிப்பீடுகளுக்குள் புகுந்து விடுகிறேன் காரணம் சுய மதிப்பீட்டிற்கான எண்ணங்களை புகுத்தி நம்மை வெளித்தள்ளிவிடுகிறது .
ஒரு பத்து ,பதினைந்து வரிகள் கொண்ட ஒரு பத்தி தோற்றுவிக்கும் எண்ணங்களும் பயணங்களும் விசாலமானவை .வார்த்தைகளில் சத்தும் , அடர்த்தியும் நிரம்பி வழிகிறது .
நாவல் முழுவதும் அவனை (ஜே.ஜே ) தூக்கி கொண்டாடியிருப்பது அழகாகவே ஒரு படைப்பாளியை கொண்டாடும் விதமும் அப்படியே .
.
நாவலிலிருந்து
"ஹோட்டேல் உரிமையாளருக்கும் பட்லர்களுக்கும் ஜே.ஜே மீது ஒரு தினுசான கவர்ச்சியும் அதிலிருந்து கிளர்ந்த அனுதாபமும் இருந்தன "மிக புத்திசாலியான பையித்தியம் " என்ற படிமமும் அவனைப்பற்றி நாளா வட்டத்தில் அவர்களிடம் உருவாகி இருந்தது ."

இரண்டாம் பாகத்தில் ஜே ஜே வின் டைரிக் குறிப்புகளாய் சொல்லப்படும் கிட்டத்தட்ட அறுபத்து ஐந்தும் தனித்தனி சிறுகதைகளாய் எழுதப்பட வேண்டியவை .
.
"நேற்று ஒரு கவிதையை மொழி பெயர்த்தேன் மூலத்தில் கனமாக இருந்தது என் தாய் மொழியில் கஞ்சித் தாள் மாதிரி பறக்க ஆரம்பித்து விட்டது .என்ன நேர்ந்தது அந்த கவிதைக்கு ? என் பாஷை அந்த கவிதையை என்ன செய்தது ? எந்த விதத்தில் அதை துன்புருத்திற்று ?"
இப்படி நீள்கிறது அந்த குறிப்பு

நாவலை முடித்தவுடன் ஜே ஜே இடம் ஆட்டோகிராப் வாங்கும் எண்ணம் மேலிடுவதை தடுக்க முடிவதில்லை .


இந்த நாவலை பதிவுலக நண்பர்கள் சிலருக்கு பரிந்துரை செய்தேன் யாரும் காதில் போட்டு கொண்டதாய் தெரியவில்லை .

மீண்டும் ஒருமுறை இதை படிக்க வேண்டுமென இருக்கிறேன் புதிதாய் எண்ணங்களும் வாசல்களும் கட்டாயம் திறக்கலாம் .

பி. கு
இந்த நாவலுக்கு பின்னரே தமிழிழும் , மலையாளத்திலும் (மொழி பெயர்ப்பு ) நவீன இலக்கியங்கள் வந்ததாய் சொல்லப்படுகிறது .
.

பிழை இருந்தால் பொறுத்தருள்க .14 comments:

இராகவன் நைஜிரியா said...

நன்றி நண்பரே... அருமையான விளக்கம். வாங்கி படிக்க தூண்டுகின்றன உங்கள் விளக்கங்கள்.

பாலா said...

அண்ணா முதல் கமென்ட் நீங்களா ரொம்ப சந்தோசம்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

தமிழில் வந்த முக்கியமான நாவல்களில் ஒன்று. இந்த நாவலின் ஆரம்பம் மட்டுமல்ல, பல இடங்கள் மனப்பாடம் எனக்கு :)

‘பாஷை என்பது வேட்டை நாயின் கால்தடம். கால்தடத்தை நாம் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும்போது நாய் எங்கேயோ சென்றிருக்கும்'

‘அவனுக்கு சரித்திரமும் அவன் மனைவி கார்த்தியாயினி வைக்கும் மரவள்ளிக்கிழக்கு கறியும் ஒன்று'

‘மூட்டை தூக்குவது கேவலம், பிறரைத் தூக்கச் சொல்வது அதைவிடக் கேவலம்'

‘சிவகாமி அம்மா தன் சபதத்தை முடித்துவிட்டாளா... '

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம் :)

பாலா said...

தெய்வம் நீங்க வந்ததே போதும் இதுல கமென்ட் வேறையா ?

"அவனுக்கு சரித்திரமும் அவன் மனைவி கார்த்தியாயினி வைக்கும் மரவள்ளிக்கிழக்கு கறியும் ஒன்று'"
ரசித்தது
ஆமாம் தெய்வம்

நன்றி சுந்தர்ஜி

கார்க்கி said...

ஹிஹி...

நட்புடன் ஜமால் said...

"நேற்று ஒரு கவிதையை மொழி பெயர்த்தேன் மூலத்தில் கனமாக இருந்தது என் தாய் மொழியில் கஞ்சித் தாள் மாதிரி பறக்க ஆரம்பித்து விட்டது .என்ன நேர்ந்தது அந்த கவிதைக்கு ? என் பாஷை அந்த கவிதையை என்ன செய்தது ? எந்த விதத்தில் அதை துன்புருத்திற்று ?"\\

மிக அருமையா சொல்லியிருக்கார்

நட்புடன் ஜமால் said...

நல்ல பகிர்வு பாலா


அவசியம் தேடிப்புடித்து படிக்கின்றேன்

அ.மு.செய்யது said...

நல்லா எழுதியிருக்கீங்க...

படிக்கும் ஆவலை தூண்டி விட்டாலும் புத்தகம் பெற சான்ஸே இல்ல...

sakthi said...

அருமையான விளக்கம்

பாலா said...

நன்றி மாப்பி
நன்றி ஜமால்
வாங்க செய்யது ( சென்னை வரும்போது வாங்கிக்கலாம் )
நன்றி அக்கா

அபுஅஃப்ஸர் said...

பாலா புத்தகம் படிக்கத்தோன்றுகிறது

நிச்சயம் படிப்போம்

பகிர்தலுக்கு நன்றி

பாலா said...

நன்றி அபு முடிந்தால் வாங்கி படியுங்கள்

S.A. நவாஸுதீன் said...

படிக்க ஆர்வம் ஏற்படுவது உண்மைதான். இந்தியா வரும்போதுதான் வாங்கணும்.

பாலா said...

S.A. நவாஸுதீன் said...
படிக்க ஆர்வம் ஏற்படுவது உண்மைதான். இந்தியா வரும்போதுதான் வாங்கணும்.


sampaathikura panaththa konjamaavthu selvu pannunga navas