கடலின் காதலன்

Sunday, July 11, 2010

கடலாடி

கருத்த உடல் வெளிர்தேமல்கள் பேராழியின்
குறைஆழ ஓவியப்பிரதேசங்கள் ..

மஞ்சள் அலகு நீருறைப்பறவைகள் நிகழ்த்தி
காட்டும் பெருமீன்களுக்கு தப்பி திகில் நாடகம்

அலைதலைகளை கொய்துவிடுகின்றன
சுக்கான் வழிநடக்கும் புரப்பெல்லர் இறகுகள்

கட்டளைகள் ஏற்றுவித்து உலோக முலாம்
பூசப்படுகின்றன இயங்கும் மூளைகள்

இயந்திர மிருகமான கடலாடியென் முலாம்
படர்ந்த மூளையை அரிக்கத் தொடங்குகிறது
நாட்காட்டி நிர்வாணப்பெண் நிழற்படம் ..........

6 comments:

ராகவன் said...

அன்பு பாலா,

வெளிர் தேமல்கள்... அலைதலைகளை கொய்து விடும் புரபல்லர் இறகுகள்...

அருமையான கவிதை பாலா... நிர்வாணப்பெண் நிழற்படம், இதன் காரணம் தான் புரியவில்லை பாலா.

வாழ்த்துக்கள்,
அன்புடன்
ராகவன்

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமையான கவிதை

வாழ்த்துக்கள்

வினோ said...

புரிவதற்க்கு பல முறை படித்துவிட்டேன்...அருமை பாலா...

சிவாஜி சங்கர் said...

Annachi.. mattrumoru kalakkal konjam kuzhambi poi nirkiren. :-)

Vani said...

பரவால்லை இந்த முறை டெரரிசம் இல்லை ரொம்பவே நல்லாருக்கு

:)))

பாலா said...

கருத்திட்ட நண்பர்களுக்கு நன்றிகள் பல