கடலின் காதலன்

Tuesday, October 20, 2009

யாசித்த கரக்காரி !!!!!!

குருதியிற் விளை பூச்செண்டு

பரிசளித்தும் பரிகசிக்கிறாள்

வேர்களின் நுனியிலென் இரத்தத்துளிகளை

உணராதவள் .காகிதமலரென.

.

பழங்கூரை ஈர்க்கின் நுனிதிரளும்

மேகமழலையை கைதட்டும் லாவகமுனக்கு

என் ரத்த அடர்த்தி கண்ணுமிழ்நீர் .

.

உன் ஹெம்லேக் மௌனவிடம்

என் சொற்சிசுவிற்கு புகட்டப்படுகிறது

பழைய மருத்துவக்கிழத்தியின்

கைப்பக்குவத்தோடு .....

.

நிராகரிப்பின் சூட்டுகோல் பட்டும்

நா வியர்க்கும் மிருகமென

மூன்றெழுத்து பெயரை

சுற்றுகிறது அருவமொன்று ..

.

உடற் கழன்ற பிராணனொன்று

துடிக்கிறது .....

இறந்தகுட்டியை மூக்கால்

அசைத்துணர்ந்து ஓலமிடும்

நாய்போல் .

.

பழைய ஒருத்தியின் யாசித்த

உள்ளங்கரம் முத்தமிட்டு அழவேண்டும்

எங்கே அவள் ???????????

குறிப்பு :

கொஞ்சம் தரம் குறைவாய் இருப்பின் பெருமக்கள் மன்னிக்க ....................

16 comments:

பா.ராஜாராம் said...

அப்பா..என்ன பாலா!

ரொம்ப பிடிச்சுருக்கு மாப்ள
.
//
குருதியிற் விளை பூச்செண்டு

பரிசளித்தும் பரிகசிக்கிறாள்

வேர்களின் நுனியிலென் இரத்தத்துளிகளை

உணராதவள் .காகிதமலரென.

.

பழங்கூரை ஈர்க்கின் நுனிதிரளும்

மேகமழலையை கைதட்டும் லாவகமுனக்கு

என் ரத்த அடர்த்தி கண்ணுமிழ்நீர் .

.

உன் ஹெம்லேக் மௌனவிடம்

என் சொற்சிசுவிற்கு புகட்டப்படுகிறது

பழைய மருத்துவக்கிழத்தியின்

கைப்பக்குவத்தோடு .....

.

நிராகரிப்பின் சூட்டுகோல் பட்டும்

நா வியர்க்கும் மிருகமென

மூன்றெழுத்து பெயரை

சுற்றுகிறது அருவமொன்று ..

.

உடற் கழன்ற பிராணனொன்று

துடிக்கிறது .....

இறந்தகுட்டியை மூக்கால்

அசைத்துணர்ந்து ஓலமிடும்

நாய்போல் .

.

பழைய ஒருத்தியின் யாசித்த

உள்ளங்கரம் முத்தமிட்டு அழவேண்டும்

எங்கே அவள் ???????????//

இதில்,ஏதாவது ஒரு வரியை,வார்த்தையை கூட்டியோ,குறைத்தோ விடமுடியுமா என்ன?

மனசை,பிசையும் அபாரமான சித்திரம் பாலா!கண்கலங்கிவிட்டது...

பா.ராஜாராம் said...

//உன் ஹெம்லேக் மௌனவிடம்//

இந்த இடம் கொஞ்சம் குழப்பம்.

மௌனவிடம் or மௌனமிடம்?

S.A. நவாஸுதீன் said...
This comment has been removed by the author.
நேசமித்ரன் said...

இரத்தத் திரை அடிக்கும் கடலிது என்ற
யூமா வாசுகியின் வரிகள் நினைவுக்கு வருகிறது
மீதமிருந்தது சருமம் என்கிற சுகுமாரனின் படிம வெளி கூட

விவாகரத்தைப் பற்றி பேசிய இரவில் கனவில் வந்து தொலைக்கிறாள் என்னை யாசித்த பெண் என்று நான் எழுதிய வரிகளும் ஓடுகின்றன
வெறும் சொற்களின் பிணைப்பு அல்ல கவிதை கவித்துவம் வாசகனுக்கு அனுபவமாக வேண்டும் என்பதில் கவனம் கொண்டு எழுத வருகிறது இப்போதெல்லாம் உனக்கு

கனவு மெய்ப்படட்டும்

S.A. நவாஸுதீன் said...

//உன் ஹெம்லேக் மௌனவிடம்//

ஹேம்லெட் (Hamlet)என்பதுதான் சரி என்று தோன்றுகிறது

நேசமித்ரன் said...

1.உடலில் வியர்க்காத பாகங்களில் ஒன்று நாக்கு என்பார்கள்
2. மௌனவிடம்தான் பா.ரா

அ.மு.செய்யது said...

//பழங்கூரை ஈர்க்கின் நுனிதிரளும்
மேகமழலையை கைதட்டும் லாவகமுனக்கு

என் ரத்த அடர்த்தி கண்ணுமிழ்நீர்//

காம்ப்ரமைஸே பண்ணிக்க மாட்டீங்களா......அடர்த்தியான வார்த்தைப் பிரயோகங்கள்..

கடைசி வரிகள் பிடிச்சிருக்கு..நானும் அதே கரங்களைத் தான் தேடி கொண்டிருக்கிறேன்.

ISR Selvakumar said...

அ.மு.செய்யது சொன்னது போல, அடர்த்தியான வரிகள்.

ஆனால் அதுதான் ”யாசித்த கரக்காரி”க்கு அழகு.

எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.

விடாமல் எழுதுங்கள், வலையுலகையும் தாண்டி. பத்திரிகைகளில் பிரசுரியுங்கள். இன்னும் பெரிய உயரம் செல்வீர்கள்.

அ.மு.செய்யது said...

//கொஞ்சம் தரம் குறைவாய் இருப்பின் பெருமக்கள் மன்னிக்க ....................//

இதெல்லாம் ரொம்ப ஓவரு !!!

ஹேமா said...

பாலா ஒவ்வொரு வரிக்குள்ளும் கிடந்தெழும்பி கிடைத்த பரிசோடு போகிறேன் நேசனின் கவிதைகள்போல்.

புலவன் புலிகேசி said...

நல்ல இருக்கு...

பாலா said...

nandri nanbargale oorukku kilampiten ATHANALA ELLARUKUM PATHIL ALIKA MUDIYALA MAINNIKAVUM NANBARGALE

அப்துல்மாலிக் said...

எப்பவும் போலவே நல்லாயிருக்கு

எனக்கு தான் புரிஞ்சிக்க முடியலே

அடர்த்தியான வார்த்தை பிரயோகம்


நீங்க நடத்துங்க பாலா

ஊருலே எல்லோரையும் கேட்டதா சொல்லுங்க‌

butterfly Surya said...

அருமை.. 3 தடவை படிச்சேன். அப்புறம் தான் புரிந்தது..

சந்தான சங்கர் said...

//குருதியிற் விளை பூச்செண்டு

பரிசளித்தும் பரிகசிக்கிறாள்

வேர்களின் நுனியிலென் இரத்தத்துளிகளை

உணராதவள் .காகிதமலரென.

.

பழங்கூரை ஈர்க்கின் நுனிதிரளும்

மேகமழலையை கைதட்டும் லாவகமுனக்கு

என் ரத்த அடர்த்தி கண்ணுமிழ்நீர் .//

பொண்ணுகளே இப்படித்தான்
யாசிக்க வைத்துவிடுகிறார்கள்
கொஞ்சம்கூட
யோசிக்காமல்...

வலி...

பாலா said...

nandri abu
nandri surya
nandri sankar