நூறு அழகிகளுடனான தனியறையில் ஆண்மையற்றவன் படும் பாடு . உடல்முழுவதும் இதழ்களால் அர்ச்சித்தும் முயங்க இயலாதவனை வெளித்தள்ளி , "ச்சீ " என்று உமிழி கதவை பூட்டும் அவமானம் உன் கவிதையின் ஆரம்பத்தில் எனக்கு கிட்டியது .நீ அடித்து வளைத்து இறுக்கிப் போட்டிருக்கும் சொற்கூட்டுக்குள் எந்தவழி நுழைவதேன்றே தெரியாமல் திரும்பிச்செல்லும் கொடூரம் நிகழ்ந்திருக்கின்றன உன் பழைய சில கவிதைகளில் . இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுக்கும் சில நல்ல தாசியைப்போல விருப்பமின்றியும் உன் வார்த்தைகளோடு ஓடியிருக்கிறேன் முன் தினங்களில் .
இப்போதும் நீ வளைந்து கொடுத்தாயா இல்லை நானே ஏறிக்கொண்டேனா என்ற குழப்பம் .
இப்போதெல்லாம் நீ குழப்பி அடித்திருக்கும் வண்ணச் சேற்றுக்குள் சிக்கிக்கொள் என்றே காலை நனைக்கிறேன் ..
சுயிங்கம் மெல்லும் ருசியானது உன் கவிதை அசைபோட்டு சாறு எடுத்தபின்னும் இருக்கும் சுயிங்கத்தின் அழுத்தம் உன் வார்த்தைக்குவியல் . சில கவிதைகளில் நிகழும் அர்த்தப்புரிதலுக்கு பின் சொல் மீதான அலட்சியம் நேர மறுக்கிறதுன் கவிதை -களில்
இப்போதொரு புதிய தலை வலி இது
சூரியனுக்கு ஒட்டிய கருஞ்சுருள்
ஆடி மீது நகரும்
ஆயிரம் கால் ரேடியச் சிலந்தி
நெய்தபடி நகர்கிறது நிழல் வலை
ஞாபக வலையை இப்படி காட்சிப்படுத்த இயலுமா என்ற கேள்வியை எழுப்பிடும் வேலையை அழகாக செய்கிறது இந்த வரிகள் .
( விலாங்கை பிடித்து விடலாம் போல . நீர் சொல்லரவாரத புரியரதுக்குள்ள )
டிராகன் நாவுகள் சூழ ஓட்டகமுடித் தூரிகையில்
எழுதிய சிறகுள்ள அதி மானுடப் பெண்
தைலமிட்டு வைத்திருக்கிறாள் காயத்தின் உதிரத்தை
நிறம் மாறாமல்
நினைவுகளின் நிர்வாணம் ,ரணம் .
நதி தளர்த்தியிருக்கும் மணல் வெளி
அந்தியின் வெம்மை அடைகாக்கிறது
கரிக்கும் அதிகாலை உதட்டில் மற்றும்சிமிழ் சுடரில்
நெகிழ்ந்த புடவையின் வழி அரைகுறையாய் கட்சிக்கு புலப்படும் மார்பக ஆரம்பத்தின் அழகு போல் தெரிகிறது நீ எழுதியிருக்கும் "நதி தளர்த்தியிருக்கும் மணல் வெளி "
வெம்மையை அடை காக்கும் விழி நீர் பூசிய உதடு சொல்கிறது உன் வலியின் எடையை
ஒரு மிடறுக் கடல் உமிழும் எரிமலை
வாய் முன்னம் ஒற்றை முகில்
கார் வானமாய் விரிந்த கண்
நான் மிரண்டு போனது இங்கேதான் "ஒரு மிடறுக் கடல் உமிழும் எரிமலை
கண்ணீரின் அடர்த்தி கடலுக்கு ஒப்பானதே . ஒத்துக்கொண்டே ஆக வேண்டும் .
கண்ணை இப்படியெல்லாம்(ஒரு மிடறுக் கடல் உமிழும் எரிமலை ) சொல்ல முடியுமான்னு அரண்டே போனது இங்கேதான் அதிலும் " எரிமலை வாய் முன்னம் ஒற்றை முகில் "
அங்கயே விழுந்துட்டேன் . இமையை இப்படிலாம் சொல்ல முடியுமான்னு .
மார்புக் கூட்டு மரங்கொத்தி
சப்தம் கொல்ல கொல்ல உயிர்த்தெழும்
மரணத்தின் காலடி
அரிவாள் கருக்கு கொண்டு இதயத்தை கூறுபோட்டும் தீரவில்லை ரணத்தின் பசி .
திசை தீர வெடித்தெறிந்த தசைத்துண்டு கனவு
கடல்கோள் பிரேதத்தின் மீன்தின்றமீதத்தை
பகிர்கின்றன நகம் போல் அலகுள்ள பறவைகள்
என் உணர்ச்சியை காட்சிப்படுத்தும் வித்தை கைவரவில்லை மாம்ஸ் ஆனால் இந்த வரிகள் கிளப்பும் அதிர்வு மட்டும் இப்போதைக்கு அடங்கப்போவதில்லை எனக்கு .
(வார்த்தைகளை கழித்து வலியை மட்டும் பிரித்தெடுக்கும் சூத்திரம் கற்கவேண்டும் உன் கவிதைக்காக )
இதுவரையிலான மேலே உள்ளது எனக்கான புரிதல்கள் மட்டுமே படைப்பாளியின் கோணம்
என்னவென்று தெரிந்திருக்க எனக்கு சாத்தியமில்லை .
(என்னதப்புனு மாமாதேன் சொல்லணும் )
‘உங்க கருத்தோட முரண்படுறேன், ஆனா…”
13 hours ago
18 comments:
மன்னிக்கவும் நண்பர்களே யாரைப்பற்றி இந்த பதிவு எழுதப்பட்டிருக்கிறதோ அவரைப்பற்றி ஒன்றும் சொல்லாமல் விட்டிருக்கிறேன் இதோ அவரது பதிவுலக முகவரி
http://nesamithran.blogspot.com/2009/10/blog-post.html
என்ன குரு இது. இப்படி போட்டு அசத்தி இருக்கீங்க. ஒருபக்கம் நேசனின் கவிதையின் கருவும் கருத்தும் புரியவைத்துவிட்டீர்கள்.
அதோடு உங்களின் விளக்கமும் அதில் கூறி இருக்கும் உவமைகளும் மிரள வைக்கிறன.
\\நூறு அழகிகளுடனான தனியறையில் ஆண்மையற்றவன் படும் பாடு.\\
\\நீ குழப்பி அடித்திருக்கும் வண்ணச் சேற்றுக்குள் சிக்கிக்கொள் என்றே காலை நனைக்கிறேன் ..\\
\\
அரிவாள் கருக்கு கொண்டு இதயத்தை கூறுபோட்டும் தீரவில்லை ரணத்தின் பசி .\\
//வார்த்தைகளை கழித்து வலியை மட்டும் பிரித்தெடுக்கும் சூத்திரம் கற்கவேண்டும் உன் கவிதைக்காக\\
ஆத்தாடியோவ். கடல் காத்த குடிச்சுகிட்டு கரண்ட்ல கைய வச்சாதான் இந்த மாதிரியெல்லாம் வரும்போல
Best of Best in your Post.
Chanceless. wow. what a expresion. cool lines.
மகிழ்ந்துறங்கும் மார்புசூட்டு குழந்தை போல சொற்களின் போதையில் உவந்து கிறங்கும் கவிதைகளின் சொந்தக் காரனே . நாற்றின் தலை கோதும் காற்று வீசும் பூமியில் பிறந்து டால்பின்கள் துள்ளும் பேரலைகளின் இரவு நேர நிலா ஒளியை கவிதையின் வரிகளாய் மாற்றும் மாயம் அறிந்த உன் தளத்தில் என் கவிதைக்கான இசைக்குறிப்புகளை எழுதியிருக்கும் அழகு கவிதையை விஞ்சுவதாக இருக்கிறது உன் சொல் அடர்த்தி . வார்த்தைகளுக்கு இடையில் நீ நிகழ்த்திக் காட்டும் புணர்ச்சி விளையாட்டு .உன் தமிழின் ஆழம் பெருமிதம் தருவதான நிகழ்வை இருக்கிறது ஒவ்வொரு முறை புதியதொரு இடுகையை வாசிக்கும் போதும் ...
முன்னம் சொன்ன அதே வரிகளாய் இன்றும் மேற்கோள் காட்டச் சொல்கிறது மனசு
முரட்டு கவிதை மொழி -சொல்லடர்த்தி - விடலைத்தனம் கலந்த கவிதைகள்
அந்நிய மண்
துணைதேடும் மெய்
வில்லான காமம்
நெட்டித்தள்ளி
மனம் கேட்கும்" அம்மா"
****************************************
என் இளமையை தின்றழி ,இல்லையேல் யாசிக்குமங்கங்களை முடமாக்கு
*******************************************
அவளின் ஆதிக்கம் உச்சத்தில் நான் பெண்மையை அணிந்திருந்தேன் ?!!!!!
அவளுக்கு மீசை முளைத்து விட்டிருந்தது
********************************************************
கண்ணாடியில் நெற்றிக் கண்ணாய் -ஸ்டிக்கர் பொட்டு அழுத்த எண்ணைக்கறை அப்பிக் கொண்ட தலையணை
ஜன்னல் காற்றில் சிரித்தது எப்பொழுதோ உதிர்த்த அவளொற்றை முடி
*********************************************************************
குலுக்கப்பட்ட புட்டியினின்று பிரவாகத் துடிக்கும் மதுவெனக்காதல் எம்மீது
******************************************************
வன்முயக்கம் மூச்சுதிணர முயங்களில் நொறுங்கி மார்காம்புகள் முகிழ்த்தன
*******************************************************************************
என் நெஞ்சில் விழுந்த செஞ்ச்சூட்டு துளியொன்று உயிரின் ஆணிவேருக்கு பாய்ந்திருந்தது !
என்ன இது விடம் தின்றும் இவ்வளவு திருப்தி ?!
*****************************************************************************************
வெட்கம் அதுவென் பனித்திரை
கிழித்தெறி ! உயிரின் மறுபக்க தரிசனம் தருவி !
இது உன் சாகசம்
*************************************************************************************
கழுத்தறுக்கப்படும் ஆட்டின் கதறல்
கள்ளப்பார்வைக்கு கூசும் பெண்மை
*************************************************************************
நெரிசலில் பிதுங்கி வேப்பங்கொட்டையென
வார்த்தைகள் வெளியே ......
கிளர்ந்தெழுந்து நிற்கிறது ஊடகத்தைதேடி
அவ்வழி இறங்கியவுடன் வடிந்துவிடுகிறது
கவிதையும் காமத்தைப்போலவே !
******************************************
அவமானங்களாலென் முகத்திலெழுது
பச்சைக்கைகளால் டைரியின் பக்கங்களில்
என் பிஞ்சுமகன் கிறுக்கிய கோடுகளுக்கு நடுவே
நொண்டியாய் nintru கொண்டிருந்தது என் கவிதை
**********************************************************************
கருக்காய்ந்த மலட்டு சொற்கள்
*************************************************
பிரவகிக்கும் பெரூற்றுபோல நிலம் கரைத்து பாயும் வீச்சு வார்த்தைகளில்
வாசனை கூட்டுகிறது நண்பா .இணக்கம் தரும் உணர்வுகளை கூட்டி சேர்த்து தன்னை கவிஞனுக்கு அருகில் உணரவைக்கும் உன் கவிதையின் கலை மேலும் எமக்கு நல்ல கவிதைகளை தரட்டும்
வாழ்த்துக்கள் திருவாரூர் தினவு நிலாவே
வாழ்த்துக்கள் திருவாரூர் தினவு நிலாவே
naanum vaalthikiren
aana enna eluthi erukenu mail pannu pa
பயங்கரமா இருக்கு பாலா !!!
அவசரத்தில் படிக்க விரும்ப வில்லை.இன்றிரவு தேவைப்படும் நேசமித்ரனையும் பாலாவையும்
வாசிக்க..!!! வெயிட்டீஸ் !!!!
நன்றி நவாஸ் ( இந்த வெறும் நன்றிக்கு பின்னால் இருக்கும் அன்பை அறிவீர் என்றே நினைக்கிறன் )
நன்றி சதீஸ் (மாமா பிரெண்டா நீங்க ?)
வாங்க மாம்ஸ் (ஆனாலும் நீங்க கொடுத்து வைத்த மீசை மண் இன்னமும் துடைக்கப்படவில்லை என்பதை நினைவிற் கொள்க )
நீங்கள் எனக்காக அனுப்பியிருக்கும் வார்த்தைகளின் போதை இன்னமும் தேவை அதற்காகவேனும்
ஏதேனும் செய்து தொலைக்க வேண்டும் இனியும்
எங்கே இருந்தாய் சகோதரி இதனை நாளாய் ???
நன்றி செய்யது பொறுமையா படிச்சுட்டு பின்னூட்டம் போடுங்க .
யோவ் கண்ண கட்டிட்டு அழுகை வருதுயா
என்னால் இப்படியெல்லாம் எழுத முடியலைன்னு...
//நதி தளர்த்தியிருக்கும் மணல் வெளி
அந்தியின் வெம்மை அடைகாக்கிறது
கரிக்கும் அதிகாலை உதட்டில் மற்றும்சிமிழ் சுடரில்
நெகிழ்ந்த புடவையின் வழி அரைகுறையாய் கட்சிக்கு புலப்படும் மார்பக ஆரம்பத்தின் அழகு போல் தெரிகிறது நீ எழுதியிருக்கும் "நதி தளர்த்தியிருக்கும் மணல் வெளி "//
இது கொஞ்சம் விவகாரமா இருக்கே !!! அவரும் இப்படித்தான் யோசிச்சிருப்பாரோ !!!
//ஒரு மிடறுக் கடல் உமிழும் எரிமலை
வாய் முன்னம் ஒற்றை முகில்
கார் வானமாய் விரிந்த கண்//
இங்க தான் நிக்கிறார் நேசமித்ரன்...தாறுமாறு.
கண்ணீரை Highly viscous liquid என்பதற்கு நல்ல உவமை.
( மண்ட காயுது !! )
நானாக இருந்தால் பாதரச அடர்த்தி வரை தான் சென்றிருப்பேன்.
பரந்த சிந்தனை சில பேருக்கு தான் வாய்க்கிறது.
அந்த வகையில் நேசமித்ரனும் பாலாவும் அதிர்ஷ்டசாலிகள் !!
நேசனின் கவிதைகள் சில எனக்குப் புரிவதேயில்லை.என்றாலும் முக்கி முனகி ரொம்ப நேரமெடுத்துப் படிப்பேன்.விட்டு வர விருப்பமிலாமலே சில வரிகள் அல்லது சில பந்திகளை மட்டும் புரிந்துகொண்டு கவலையோடே ,
ஏனடா எனக்குப் புரியுதுமில்லை.
எனக்கு எழுத வருதுமில்லையென்று வருவேன்.அந்தக் கவிதைகளுக்குள் இவ்வளவு இருக்கா என்று பாலா உங்கள் அசைமீட்டலுக்குள் அகப்பட்டு திணறி நிற்கிறேன்.விளக்கம் வேணும் என்று ஒரு தரம் நேசனிடமும் கேட்டிருந்தேன்.நன்றி பாலா.
நேசனுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
இதொரு பெரிய நன்றி செய்யது
நன்றிங்க ஹேமா ( அவர்
கவிதை புரிய நேரமெடுக்கும் அவ்வளவே )
--
மெயில் பண்நீருந்தேனே
பார்த்தியா மாப்ள (வசந்த்)
வித்தியாசமான சிந்தனையுடன் திரும்ப திரும்ப படித்து புரியவைக்கும் திறன், ஒஹ் அங்கேர்ந்துதான் கத்துக்கிட்டீங்களோ
நேசன் தடாகத்தில் முங்கி குளிச்சுருக்கீங்க மாப்ள?இது வரம்!
thanks mams
thanks abu
Post a Comment