இறந்த காலம்
வியர்த்த நுதலுடன் மஞ்சள்
மணக்கும் மடி புதைய
ஈரத்தலைகலைக்குமுன் விரல்
.
.
நிகழ்ந்து போன இறந்த காலம்
முகிழ்த்த முகமயிரும் ,ஊறிய
ஆண்மையும் தொலைதேசச்
சொந்தமாக்கினவுன் மடியை
.
.
நிகழ்காலம்
அறிவின் வாள் ப்ரியத்தின்
துடிதுடிப்பைக் கூறு போடும்
சொற்கொடூரம் நிகழ்த்துகிறேன்
பின்னோக்கிய மனித பரிணாமத்தில்
குரைக்கும் மிருகப்படிநிலையில்
நின்றபடியுன்னிடம் ...
.
.
நிகழவிரும்பா எதிர்காலம்
உணராததை உண்டு ; முயங்கிய
பஞ்சனை போதையில் !!
எதிர்வினை மறுத்த உனதன்பென்னால்
பனைக்கழுவில் ஏற்றும் உற்சவப்
பெருவிழா நடத்தப்பெறலாம் !!
தங்கமுலை தந்தவளே
தயாராய் இரு அதுவரையில் !!!!!!!
11 comments:
நல்ல கவிதை
kalkkurenga Boss..
அறிவின் வாள் ப்ரியத்தின் துடிதுடிப்பைக் கூறு போடும் சொற்கொடூரம் நிகழ்த்துகிறேன் பின்னோக்கிய மனித பரிணாமத்தில் குரைக்கும் மிருகப்படிநிலையில் நின்றபடியுன்னிடம் .....
//தங்கமுலை தந்தவளே
தயாராய் இரு அதுவரையில் !!!!!!!
/
எதுவரையில் பாலா?
எப்போ அனுபவித்த வரிகள் வெளிவரப்போகிறது
இறந்த காலம் வியர்த்த நுதலுடன் மஞ்சள் மணக்கும் மடி புதையஈரத்தலைகலைக்குமுன் விரல்
சட்டை காலர்ல மஞ்சள் இருக்கும்வரைக்கும் அப்படித்தான் இருக்கும்
***********************************
முகிழ்த்த முகமயிரும் ,ஊறிய ஆண்மையும் தொலைதேசச் சொந்தமாக்கினவுன் மடியை
ஷேவிங் பன்னுங்கப்பு
***********************************
அறிவின் வாள் ப்ரியத்தின் துடிதுடிப்பைக் கூறு போடும் சொற்கொடூரம் நிகழ்த்துகிறேன்
பின்னோக்கிய மனித பரிணாமத்தில் குரைக்கும் மிருகப்படிநிலையில் நின்றபடியுன்னிடம்
எங்கேர்ந்து பாலா கிடைக்குது இப்படி கோர்வையாய். பின்றீங்கப்பு
***********************************
உணராததை உண்டு ; முயங்கிய பஞ்சனை போதையில் !!எதிர்வினை மறுத்த உனதன்பென்னால் பனைக்கழுவில் ஏற்றும் உற்சவப் பெருவிழா நடத்தப்பெறலாம் !!தங்கமுலை தந்தவளே தயாராய் இரு அதுவரையில் !!!!!!!
குரு, க்ளாஸ் நேரம் கொஞ்சம் அதிகப்படுத்துங்க. இன்னும் நிறைய கத்துக்கனும் நான்.
பஞ்சனை- பஞ்சணை
பஞ்சு + அணை
:)
ரசனை :-)
//தொலைதேசச்
சொந்தமாக்கினவுன் மடியை
//
இந்த வரிகள் என்னை வெகுவாக பாதித்து விட்டது பாலா.
இதை கடந்து என்னால் செல்ல இயலவில்லை.
மற்றபடி கவிதை வசீகரம் !!!
//நிகழவிரும்பா எதிர்காலம் // இது ஓக்கே !!
//நிகழ்ந்து போன இறந்த காலம் // இது தான் கொஞ்சம் இடிக்குது.
நிகழ்ந்து போனாலே அது இறந்த காலம் தானே.அது
என்ன நிகழ்ந்து போன இறந்த காலம்.
இப்படிக்கு,
மானாவரியாக யோசிப்போர் சங்கம்.
சென்னை,வியாசர்பாடி கிளை ( தற்சமயம் )
நன்றி சுரேஷ்
நன்றி சிவாஜி சங்கர்
வாங்க அபு நாங்கதான்னா நீங்களுமா?
அப்பாடி நவாஸ் பொழச்சுகிட்டு கவிதை
நன்றி மாப்ள அடலேறு
வாங்க செய்யது (மானாவாரியா யோசிகுறீங்க போல அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
மாம்ஸ்
இந்த முறையும் மீசைல மண் .
இந்த வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு மாம்ஸ் (நியுட்டன் வாழ்க )
(பாவம் என் நண்பர்கள் )
இறந்த காலம் வியர்த்த நுதலுடன் மஞ்சள் மணக்கும் மடி புதையஈரத்தலைகலைக்குமுன் விரல்
எதையும் நம்பும்..
உதாசீனத்தை இரசித்து
அனைத்தையும் நேசிக்கும்
குழந்தைமை
***********************************
நிகழ்ந்து போன இறந்த காலம் முகிழ்த்த முகமயிரும் ,ஊறிய ஆண்மையும் தொலைதேசச் சொந்தமாக்கினவுன் மடியை
வாலிபத்தை அருந்தி
வன்மத்தை மூச்சாக்கி
மூர்க்கமாய் வளர்ந்த ‘ஆண்பிள்ளை’
***********************************
உணராததை உண்டு ; முயங்கிய பஞ்சனை போதையில் !!எதிர்வினை மறுத்த உனதன்பென்னால்பனைக்கழுவில் ஏற்றும் உற்சவப் பெருவிழா நடத்தப்பெறலாம் !!தங்கமுலை தந்தவளே தயாராய் இரு அதுவரையில் !!!!!!!
இனிமேலும் நேசிக்கக்கூடும்
ஆனால் அது நீயல்ல
பதின்மம் கடந்து
பஞ்சணை கண்ட ஆண்கள்
மீண்டும் மழலைகள் ஆவதில்லை.
இதை இப்படியும் பார்க்கலாம் என்று நீங்கள் விளக்கியதும் தெளிவாகப் புரிந்தது பாலா. சரியா / தவறா என்று நீங்கள்தான் விளக்கமளிக்க வேண்டும்.
அசத்தல்...
-இப்படிக்கு,
கவிதை எழுதா கவிஞர்கள் சங்கம், குவைத் (வேறெங்கும் கிளைகள் இல்லை)
Post a Comment