நீர்த்துக்கிடக்கிறது நம்
பரண் இரவுகளின் தொகுப்பு .
குசலவிசாரிப்புகள் ,சிறுஎள்ளல்
உண்டுகளைத்தாயா ?,நள்ளிரவு
காலைவணக்கம் .
சத்தற்ற பிதற்றல்கள் மின்னரட்டைப் பிணைப்பில் .
எட்டித்தெளிய முடிமின் சிரம் நுழைத்திருப்போம்
உன்னுள்ளும் என்னுள்ளும் !!!!
எத்தனை உருகி எழுதி கிழித்ததென்ன ?
இந்தாடா உதட்டுச்சாய முத்தமென
தவறியேனும் விழமறுக்கிறதுவுன்
எச்சிற் பூசிய சொற் பிண்டம் .
காகித சிறைக்குள் செந்தூரம்
சிவந்து போகிறது ஓரங்களை
*****???காதல் ????!!!!!
அச்சத்தின் மூலப்பிடியில்
சிக்கித்தவிக்கின்றன
இரத்தமிறைக்கும் இயந்திர
நாளங்கள் !!
இனி எந்நொடியும் சாத்தியமில்லை.
உன்னுள்ளானவென் பிம்பத்தை அழி
என்னுள்ளும் கொன்றேவிடுகிறேனுனை .
வா கை சேர்
மறுகட்டமைப்போம்
புதிதாயுன் பேர் சொல் !
இம்முறை சென்றேயாகவேண்டும்
மானிதரற்ற மலர்சமைந்த
பிரபஞ்சத்துள் !!
14 comments:
ரசனை கவிதை நண்பா, வாழ்த்துக்கள்
//இந்தாடா உதட்டுச்சாய முத்தமென
தவறியேனும் விழமறுக்கிறதுவுன்
எச்சிற் பூசிய சொற் பிண்டம் .
//
இவ்ள தான் மேட்டரா ??? நேரடியா கேட்டுறலாம்ல ..
ரொம்ப நேரமா பாத்துட்டே இருக்கேன் இந்த கவிதைக்கு எப்படி
பின்னூட்டம் போடுவதென்று.
கொஞ்சம் சொற்சிக்கனம் பற்றி யோசித்திருக்கலாம்.அடுத்த
கவிதைக்கும் கொஞ்சம் வார்த்தைகளை மிச்சம் வைத்திருக்கலாம்.
வழக்கம் போலவே !!! பாலா எங்கயோ போயிட்டீருக்கீங்க !!
2.898*10^8 என்ற வேகத்தில்..
நீர்த்துக்கிடக்கிறது நம் பரணை இரவுகளின் தொகுப்பு .குசலவிசாரிப்புகள் ,சிறுஎள்ளல்உண்டுகளைத்தாயா ?,நல்லிரவு,காலைவணக்கம் .சத்தற்ற பிதற்றல்கள் மின்னரட்டைப் பிணைப்பில் .எட்டித்தெளிய முடிமின் சிரம் நுளைத்திருப்போம் உன்னுள்ளும் என்னுள்ளும் !!!!
********************************
குரு! நாங்களும் உள்ளே வந்துட்டோம். கடல் காற்றில் சுனாமியாய் வார்த்தைகள் வெளியேறி கவிதையாய் கரையேரிவிட்டனவா. இப்படி போட்டு தாக்குறீங்களே.
எத்தனை உருகி எழுதி கிழித்ததென்ன ?இந்தாடா உதட்டுச்சாய முத்தமென தவறியேனும் விழமறுக்கிறதுவுன் எச்சிற் பூசிய சொற் பிண்டம் .
***********************
அப்பொழுதாவது இரத்தம் இனிக்கிறது என்று பிறருக்கு புரியாதவாரு புலம்பலாமே!
வா கை சேர் மறுகட்டமைப்போம் புதிதாயுன் பேர் சொல் !இம்முறை சென்றேயாகவேண்டும் மனிதமற்ற மலர்சமைந்த பிரபஞ்சத்துள் !!
************************************
மாங்கல்யம் தந்துனானேனா
//இனி எந்நொடியும் சாத்தியமில்லை.
உன்னுள்ளானவென் பிம்பத்தை அழி
என்னுள்ளும் கொன்றேவிடுகிறேனுனை .//
பாலா,
என்னாச்சு கண்ணு? தொலைப்பேசி வழி உரையாடும் போது கொலையாடும் சொற்கள் விளையாடி விட்டதோ?
பொறுமை பொண்ணுங்களுக்கு மட்டும் இல்ல ராசா. ஆம்பிளைக்கும் கொஞ்சம் வேணும்.
பொறுமை...பொறுமை...பொறுமை...!
நல்லிரவு ?பரணை ?நுளைத்திருப்போம்
இரத்தமிறைக்கும் ?மனிதமற்ற?
கருமம் தமிழே சரியாத் தெரியல
இவிங்க கவிதை எழுத வந்துட்டாணுங்க
இதுல நக்கல் வேற
ஆனாலும் மனசு கேட்கல
இந்தக் கவிதையில் நிகழ்த்தும் காதலின் உரையாடல் மிக அணுக்கமான சமிக்ஞைகளைக் கொண்டிருக்கிறது . சொற்களின் தசம இடைவெளியில்
கோள்களை நிறுவிச் செல்கிறது கவிஞனின் பிரிய வலி .....
பின்னூட்டமிடுவது பற்றி யோசித்து கடைசியில் தோற்றுப்போனேன் திகட்ட உண்ட வரிகளின் உள் அர்த்தத்தில்...
வார்த்தைகளை எங்கேதான் தேடிபிடிக்கிறீங்களோ பாலா
இந்த பாலாவிற்கு டைரக்டர் பாலா எவ்வளவோ மேல் நு நினைக்கிறேன்
மக்கா நீங்க சொன்னதுக்கெல்லாம் நன்றி சொல்லாலம் ஆனா ஏகப்பட்ட பிழைகளோட இருக்குற கவிதைக்கு என் நன்றி தேவை இல்லைதான் . வந்தமைக்கும் பின்னூட்டமிட்டமைக்கும் நன்றிதான் இருப்பினும் .
ஹலோ மாம்ஸ்
இது நான் வாங்கிய முதல் செருப்படி அதுவும் முகத்தில .தப்புக்குத்தானே அடிச்சீங்க இதுல தப்பொன்னுமில்லை. ஆனா இந்த அடில என் முகத்துலையும் மீசைலையும் பெரிய மண் இத உங்க கைக்கொண்டே தொடைக்காம விட மாட்டேன் அது நிச்சயம் .
ஆப்புக்கு ஆப்பு வசுட்டோம்னு சந்தொசப்படவேனாம்
(இத்தனநாளா எங்கையா இருந்தே ???? உம்மைத்தான் நான் தேட்டிட்டு இருந்துருக்கேன் இவ்ளோநாளா
கவிதை ரசிக்க இனிமை.உங்கள் சொற்கோர்வை அசத்தல்.எப்படிச் சாத்தியம்.என்னால் முடியவில்லை.
நன்றிங்க ஹேமா
ஒவ்வொரு சொல்லா ஆராய்ச்சி செய்கிற அளவுக்கு விவரம் இல்லைங்க, முழுசா படிச்சுட்டு சாராம்சம் என்னன்னு புரிஞ்சுக்கிட்டேனுங்க, வார்த்தைகள நிறைய ஸ்டாக் வச்சு இருக்கீங்க பாலா, ஆச்சர்யம் அளிக்கிறது உங்க டேட்டாபேஸ நினைச்சா!!
Post a Comment