சொற்களோடு புணரும் சாத்தியமற்ற
நிசி நுனி வளர் பொழுதில் .
மேல்தட்டு மண்ணகழ்ந்தோடியபுழுவின்
வழித்தடமாய் வெடிப்புகளால்
நிரம்புகிறது .
வீட்டுள் வீடுகட்டும்
மஞ்சள் குளவியின் பிருஷ்ட
கொடுக்கு விஷம் தின்ற
புழுவென நிறம் மாறுகிறது
இதயம் .
வன்முயக்க குரூர திருப்தி
ஊடற் பெருநிறையையுன் மேல்
கவிழ்த்ததன் .
வன்மம் தொலைந்த பின்னொரு நொடியில்
அழத்தொடங்குகிறேன் யார்க்கும்
கேட்டிராவண்ணம்....
கடலின் காதலன்
Wednesday, September 16, 2009
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
நல்ல கவிதை
கவிதையின் மொழி வீச்சு அருமை.
//பின்னொரு நொடியில்
அழத்தொடங்குகிறேன் யார்க்கும்
கேட்டிராவண்ணம்....
//
ஏன் இப்படி.. வாய்விட்டு அழுங்க மனசுலே உள்ள பாரமெல்லாம் குறையும்
நல்லா பயமுறுத்தும் வரிகள்
நன்றி சுரேஷ்
வாங்க அபு
அப்பாடி
உங்ககிட்டேர்ந்து கமென்ட் வாங்கறதுக்கு
இவ்ளோநாள் ஆயிருக்கு எனக்கு
பெரிய நன்றி வாசு சார் உங்களுக்கு
இனிமேலாவது ஒழுங்கா எழுதணும் போல
பாத்துகுங்கப்பா வாசு சாரே நல்லா இருக்கு சொல்லிருக்காரு
இனிமே நானும் ரவுடி தேன் (மனசுல இருக்கட்டும் )
"அகநாழிகை" பொன்.வாசுதேவன் said...
கவிதையின் மொழி வீச்சு அருமை.
மோதிரக்கையால் (செல்லமாய்) குட்டு வாங்கியாச்சு. அப்புறமென்ன!!!
//மஞ்சள் குளவியின் பிருஷ்ட
கொடுக்கு விஷம் தின்ற
புழுவென நிறம் மாறுகிறது//
எப்படிய்யா இப்படியெல்லாம் யோசிக்கிரீங்க...
அதுவா வருதா ???
வாங்க நவாஸ் மாமா
செய்யது உங்க கூட பழகுரதுனாலதான் இப்படி
வேற எப்படி ?
மாப்ள..என்ன இப்புடி பண்ணிபுட்டிக,மொழி இறுக்கமும்,வாசு அண்ணா சொன்னது போல் வீச்சும் விசாலமாய் இருக்கு பாலா.வெகு நேரம் கவிதையை விட்டு விலக இயலவில்லை.வலை உலகம் வந்து,இந்த மூணு மாசத்தில் எவ்வளவு சொந்தங்கள் பாலா...கண்ணும்,மனசும் நிறைந்து வருகிறது.அன்பு நிறைய மாப்ஸ்!
ஆஹா எனக்கு ஏகப்பட்ட மாமாக்கள் ரோய்
ரெம்ப நன்றிங்கோ மாம்ஸ்
நிறமாறிய இதயம் பின்
உளமார அழுதுவிட்டது
நல்ல கவிதை.
நல்ல கவிதை
நன்றி சங்கர்
நன்றி நண்பரே (PEACE TRAIN )
கவிதை அருமை பாலா!
//நிசி நுனி வளர் பொழுதில்//
சொல் ஆளுமை அருமையாக உள்ளது. இத்தனை நாளாக ஏன் உங்கள் எழுத்துக்களை வாசிக்கவில்லை என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.
இனி வாசிப்பேன்.
வாழத்துகள்!
பாலா வணக்கம்.உங்கள் கவிதைகள் நிறைய வாசித்தேன்.சுருக்கமாகவும் நிறைவான சொல்லாடல்களோடும் அழகா இருக்கு.நீங்க எனக்கு 2 தடவைகள் சொல்லிட்டீங்க.சுருக்கமா எழுதணும்ன்னு முயற்சி செய்கிறேன்.
வரமாட்டேன் என்கிறது.உங்களுக்கு நன்றியும் வாழ்த்தும்.
நன்றி வலசு வேலணை
வாங்க செல்வா சார்
நன்றிங்க ஹேமா என் கருத்தை மதித்தமைக்கு
Post a Comment