கடலின் காதலன்

Friday, September 11, 2009

அழகியல்


மஞ்சள் அலகு நீலப்பறைவையொன்று

ஜன்னலோர புங்கையின் கிளையில்

உன் அழகைத்தின்ற படி !!!......

நாம் விட்டகர்ந்த

சொர்ண புஷ்ப மரத்தடியில்

காம்பு கழன்ற புஷ்பங்கள் சில

சிதறிய முத்தத்தை

தின்று முடித்திருந்தன!!!!!!!!!!!!!!.....

உன் முல்லைப்பூ

நிறப்புடவையுன் மாம்பழ

வர்ண அழகை சொட்டியபடி

கொடியில்!!!!!!!!!!!!.........

நொடிகளைக்கொட்டும்

படுக்கையறை மணிகாட்டி

நம்மின்(????) மணித்துளிகளை

முடிவிலியால் பெருக்கி

எண்ணியபடி !!!!!!!!!!!!.......

நாம் சொல்லிக்கொள்ளாத

காதலென்ற வார்த்தை

வீட்டு வெள்ளைப் பூச்சு

சுவர்களில் மோதி

சிதறியபடி !!!!!!!!!!!!!!...........

முதல் முறையாய்

மடி புதையும் சிசு

முதல் வாய்ப்பருகல்

சிலிர்க்கும் ஸ்பரிசம்

கர்வப்பெருமை உனக்கு

மார்க்காம்புகள் முளைக்க

வரம் வேண்டியபடி நான்

எங்கிருந்தோ வந்த

தேவப்பறவைகள் உன்

தலையில் தாய்மை எழிலை

கவிழ்க்க !!!!!!!!!!!!!!!....

மூன்று பக்க சிறுகதையை

கவிதைக்குள் அடைக்கும்

முயற்சி

வார்த்தைகளின் அடர்த்தி

உன் அழகு !!!!!!!!!!!!!!....

19 comments:

சத்ரியன் said...

//எங்கிருந்தோ வந்த
தேவப்பறவைகள் உன்
தலையில் தாய்மை எழிலை
கவிழ்க்க !!!!!!!!!!!!!!!....

மூன்று பக்க சிறுகதையை
கவிதைக்குள் அடைக்கும்
முயற்சி

வார்த்தைகளின் அடர்த்தி
உன் அழகு !!!!!!!!!!!!!!....///

இது தான் பாலா.....!அழகம்மா...!

S.A. நவாஸுதீன் said...

உன் அழகைத்தின்ற படி !!!...... நாம் விட்டகர்ந்த சொர்ண புஷ்ப மரத்தடியில் காம்பு கழன்ற புஷ்பங்கள் சில சிதறிய முத்தத்தை தின்று முடித்திருந்தன!!!!!!!!!!!!!!.....

பாலா. கிளாஸ்

S.A. நவாஸுதீன் said...

முதல் முறையாய் மடி புதையும் சிசு முதல் வாய்ப்பருகல் சிலிர்க்கும் ஸ்பரிசம் கர்வப்பெருமை உனக்கு

பிண்றீங்க பாலா

நட்புடன் ஜமால் said...

உன் முல்லைப்பூ நிறப்புடவையுன் மாம்பழ வர்ண அழகை சொட்டியபடி கொடியில்!!!!!!!!!!!!.]]

ஆஹா! ஆஹா!

அருமை

நட்புடன் ஜமால் said...

நாம் சொல்லிக்கொள்ளாத காதலென்ற வார்த்தை வீட்டு வெள்ளைப் பூச்சு சுவர்களில் மோதி சிதறியபடி ]]

மூன்று பக்க சிறுகதையை கவிதைக்குள் அடைக்கும் முயற்சி வார்த்தைகளின் அடர்த்தி உன் அழகு ]]

-------------

வார்த்தைகள் விளையாடுது பாலா

தேவன் மாயம் said...

உன் முல்லைப்பூ நிறப்புடவையுன் மாம்பழ வர்ண அழகை சொட்டியபடி கொடியில்!!!!!!!!!!!!
சொற்களின் ஜாலம் மிக்க அழகு!

நேசமித்ரன் said...

கவிதை அருமை வாழ்த்துக்கள்
தனித்தனியாக எடுத்துப் பாராட்டினால் கவிதையின் அமைதி கெடும் என்பதால் கட அண்ட் பேஸ்டு செய்யாமல் சொல்கிறேன் நன்றாக இருக்கிறது நண்பா

கார்க்கிபவா said...

:)))

kalakku maappi

ப்ரியமுடன் வசந்த் said...

அருமை...

பாலா said...

நன்றி சத்ரியன் (யாருங்க அந்த அழகம்மா ஹிஹிஹி அட்ரஸ் கிடைக்குமா ??? ஹிஹிஹி )

வாங்க நவாஸ் மாமா ( நீங்க வரம் குடுக்குற தேவதைய பேசியே கொன்னுடுவீங்கலாம் தமிழரசி அக்கா சொல்றாங்க

என் பார்த்தா உங்களுக்கு சிரிப்பா வருது ? இருக்கட்டும் வச்சிக்குறேன் ஜமால்

நன்றி டாக்டர் சார்

வாங்க மாப்பிகளா (கார்க்கி , வசந்த் நெம்ப நன்றிங்கோ )

பாலா said...

மாம்ஸ் நீங்க சொல்றதுதான் எவ்ளோ உண்மை !!!!!!!!!!!!!!
இந்த கட் அண்ட் பேஸ்ட் பண்றதுதான் எவ்ளோ தப்பு
நீங்க சொல்றது நூறு சதம் உண்மை
மிச்சர்ல கேட்குற கடலையையும் அல்வா கெடக்குற முந்திரியயையும்
தனியா எடுத்து திங்குற மாதிரி டேஸ்ட் லெஸ்ஸ் ஆனா விஷயம்
நீங்க சொல்ற அமைதியும் முக்கியமா கெடுது
இனி கட் அண்ட் பேஸ்ட் செய்யவே மாட்டேன்

அ.மு.செய்யது said...

வார்த்தைகளை ஒரு காளையை அடக்குவது போல அடக்கி ஆளுகிறீர்கள்.

எத்த‌னை வ‌டிவ‌ங்க‌ளில் உங்க‌ள் க‌விதை அழ‌கு பெறுகிற‌து....ஒப்ப‌ற்ற‌ க‌விஞ‌ன் நீர் !!! பாலா !!

பாலா said...

நீங்க சொல்ற வார்த்தைகளுக்கு தகுதியானவனான்னு தெரியல
நீங்க என் மேல் கொண்ட மதிப்பிற்கும் அன்பிற்கும் கடமைபட்டவனாகிறேன்
மிக்க நன்றி செய்யது

பா.ராஜாராம் said...

வண்ணங்களை ஏதாவது ஒரு படிமங்களுக்கு பொருத்துகிறீர்களா என பிடிமானம் கிடைக்கவில்லை பாலா.ஆனால் செய்யது சொல்வதுபோல் வார்த்தைகளை ஒரு திமிரலன்றி கைகொள்வது உங்களின் கலை!அபூர்வமாய்த்தான் இது வாய்க்கும் பாலா.எளிதாய் உங்களுக்கு வாய்த்திருக்கிறது.நண்பன் நேசன் சொன்னது போல் அமைதியாக இருக்கட்டும்.நான் கிடந்தது உழப்ப வேண்டாம்.நவாஸ் குறிப்பிட்ட வரிகள் எனக்கும் சொக்கல்!அபாரம்!

பாலா said...

நீங்க வாறதே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி பா.ரா
உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுக்கவே இன்னம் உழைக்க வேண்டி இருக்கிறது
மிகப்பெரிய நன்றி உங்களுக்கும் என்,உங்கள் நண்பர்களுக்கும்

ஆர்வா said...

ரொம்ப ஃபீல் பண்றீங்க போல.... அழகா இருக்கு நண்பா..

பாலா said...

nandri kavithai kaathalan

Anu said...

//எங்கிருந்தோ வந்த
தேவப்பறவைகள் உன்
தலையில் தாய்மை எழிலை
கவிழ்க்க !!!!!!!!!!!!!!!....

மூன்று பக்க சிறுகதையை
கவிதைக்குள் அடைக்கும்
முயற்சி

வார்த்தைகளின் அடர்த்தி
உன் அழகு !!!!!!!!!!!!!!....///


ஆஹா! ஆஹா!

அருமை

அன்புடன் மலிக்கா said...

கவிதை கலக்கல்