சாமத்தின் யாகத்தில் ஹவிசை
நான் .
யாக்கையை தின்று கொழுக்கின்றன
பாஸ்பரத்தின் தாயாதி மழலைகள் .!!
தோள் தினவு வெற்றாய் அழிகிறது
தலை சாயும் உற்றவளின்றி !.
கால் நூற்றாண்டாய் பெருந்தவம்
படர் முல்லைக் கொடியற்ற
ஒற்றைக்கொழு .
தசை நார் கிழிபடுகிறது
துருவக்கரடி கையிடை
மச்சம் .
விடியலில் சிரத்தீ கொண்ட
மெழுகு தற்கொன்றிருந்தது!!!..
*************************************************************
பந்தி :
மேலே படித்தது மெயின் டிஷ் (நான்வெஜ் .முட்டையில செஞ்ச கேக் மாதிரி ) அசைவம் சாப்பிடாதவர்கள் கீழே சமோசா + டீ இருக்கிறது எடுத்துக்கொள்ளவும் .எப்படி இருந்தாலும் ஏதாவது சாப்பிட்டுதான் போகணும்
ஏன்னா ? விருந்தோம்பல் தமிழன் பண்பாடாச்சே :)))))
*************************************************************
தவறியோ ;தவறட்டுமென்றோ
நீ
சிதறிவிடும் எழுத்துகூட்டங்களில்
தொலைந்துவிடுகிறது
உணர்ச்சி கூட்டில் சிக்கிக்கிடக்கும்
ராட்சத பறவை .!!
************************************************************
தவறாது மொய் எழுதிவிட்டுச்செல்லவும்.:))))
பாலா
18 comments:
அதிரை நவாஸ் 1001/- எழுதுங்கப்பா.
**********************************
தோள் தினவு வெற்றாய் அழிகிறது தலை சாயும் உற்றவளின்றி !.
கால் நூற்றாண்டாய் பெருந்தவம் படர் முல்லைக் கொடியற்ற ஒற்றைக்கொழு.
குரு, எங்கிருந்து வருகிறது இவையனைத்தும். பின்றீங்க போங்க
**********************************
Sivaji Sankar மொய் : 101/100
சாமத்தின் யாகத்தில் ஹவிசை நான்
நல்ல உவமை, சொல்லாடல்.
தசை நார் கிழிபடுகிறது துருவக்கரடி கையிடை மச்சம்.
இதுக்குதான் டிஸ்கவரி சேனலும் பார்க்கனும்னு சொல்றது.
எனக்கு சமோசா + டீ போதும்
வழக்கம்போல் நல்லாயிருக்கு
சமோசா டீக்கே மொய்யா?
தாங்களடா சாமீயோவ்
விடியலில் சிரத்தீ கொண்ட மெழுகு தற்கொன்றிருந்தது!!!..
மெழுகுத்திரியின் உடல் சிதறி மழை பெய்த திண்ணைபோல்!! யம்மாடியோவ்.
குரு எனக்கும் இந்த வித்தை (இந்த மாதிரி எழுத) கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன்.
மாப்ள நான் ரெண்டும் திங்கிற ஆளு.சொல்லப்போனால் மூனும்.மூணாவது மெனுவில் இல்லை.நான்வெஜ் கலக்கல்,நேசா விலாஸ் மிலிடரி மெஸ் மாதிரி!செமிக்க தாமதமாச்சு.செமித்ததும்,கிடைத்த சொக்கலில் இஞ்சி டீயும் சமோசாவும் விழிப்பு தட்டி கொடுத்தது.வீடு திரும்புவதற்கு முன் ஒரு டிஸ்க்கி;கடலுக்கு போகாமல் இப்படியே கவிதை எழதி கிடங்கப்பு.கோல்கொண்டா பழகிய நாக்கு இருக்குதானே!அன்பும் நிறைவும் மாப்ள.
பாலா
முன்பு நான் படித்தபோது உங்கள் கவிதைகள் வன்முறையுடன் பயப் படுத்துவதாக இருந்தது...
ஆனா இந்தக் கவிதைகள் இரண்டும் நல்லா இருக்கு
//அதுவும்தோள் தினவு வெற்றாய் அழிகிறது தலை சாயும் உற்றவளின்றி !.//
simply superb
கலக்கல் வரிகள் நண்பா,சீறான எழுத்துக்கோர்வை. வாழ்த்துக்கள் நண்பா
ஏன்பா நாங்க எல்லாம் கவிதை எழுதுறதா வேண்டாமா ?
பத்தாததுக்கு பா.ரா வேற நேசன் விலாஸ் ன்னு சொல்லிட்டு போய்ட்டாரு
நல்லாருக்கு மாப்ள ..!
கத்தார் தோஹா வசந்த்-10001 .ரூ
நான் ரெண்டையும் சாப்பிட்டேன் மாப்பி
மாப்ள,ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருக்கேன்.வந்து கை நனைச்சுட்டு போங்க.
வந்துட்டுட்டு போன மக்காக்கெல்லாம் பெரிய கும்புடுங்கோ .நன்றிங்கோ, வணக்கமுங்கோ
Supera erukku
Nan saivam asaivam 2 um schapitaen
nandrinha
nalla ruku bala
innum nalla elzuthanum
nandringo anu
நம்ம நான்வெஜ்,வெஜ் எதையும் விட்டு வைக்கறதில்ல..
எனக்கு உங்களோட நான்வெஜ் ரெசிப்பி தான் பிடிச்சிருக்கு !!
வித்தியாசமா எழுதறீங்க...புதுசு புதுசா ட்ரை பண்றீங்க..!
/கால் நூற்றாண்டாய் பெருந்தவம் படர் முல்லைக் கொடியற்ற ஒற்றைக்கொழு.//
இது தமிழா தெலுங்கா தல ??
Post a Comment