அன்பின் பெருநதி சுழித்துக்கொண்டோடும்
நிழற்பட பரப்பில் ..
ஹைபிஸ்கஸ் மலரின் ஒற்றைக்கோட்டு
ஓவியமென பறக்க எத்தனிக்கும்
நீர் பறவைகளின் கடற்பின்புல நிழல் .
விளம்பர செயல் மாதிரி காதல் இணை
உதடுகள் வழுக்க ஒன்றன் மேல் ஒன்றென .
விழிக்கோள ஆடியில் விழுங்கும்
எனக்கு ஏன் வலிக்க வேண்டும்
பெருந்தோளும் இதயமும் . ??
8 comments:
மகாதனிமையில் சிதறும் கணம் !! தலைப்பு நல்லாருக்கு.,
//ஹைபிஸ்கஸ் மலரின் ஒற்றைக்கோட்டு
ஓவியமென பறக்க எத்தனிக்கும்
நீர் பறவைகளின் கடற்பின்புல நிழல்//
:)
வழக்கம் போல கொஸ்டீன் மார்க்ல முடியுது கவிதை..
கலக்குங்கண்ணோவ் :)
காதல் இணை உதடுகள் வழுக்க ஒன்றன் மேல் ஒன்றென .விழிக்கோள ஆடியில் விழுங்கும் ]]
கலக்குற போ ...
விருது பெற்றுகொள்ளுங்கள்
விஜய்
hibiscus இன் ஒற்றைக்கோட்டு ஓவியம் ..ஆஹா! ...அது வரையும் போதெல்லாம் பறவையை நானும் நினைத்ததுண்டு ...
கப்பலின் விளிம்பில் தூரத்தே தெரியும் பறவை உங்கள் கண்ணில் பட்டு கவிதையாய் ...
அழகு பாலா
ஏன் வலிக்க வேண்டுமா?:)
வலிக்கணும் பாலா ...அப்போதான் கவிதை வரும் ...
உங்கள் உணர்வுகள் ஒரு மாதிரி புரிந்தாலும் முழுசாக புரியவில்லையே....
அழுவாச்சி கவிதை
ரொம்ப அடர்த்தியா ரொம்ப நல்லா நண்பரே...
கருத்திட்ட நண்பர்களுக்கு நன்றிகள் பல
Post a Comment