கடலின் காதலன்

Sunday, June 20, 2010

அவனுக்கு

எச்சில் டம்ளர் கழுவியே ரேகை அழிந்தவனுக்கு
கழுவிய நீரிலேயே எதிர்காலம் தேடியவனுக்கு
வெந்நீர் ஆவியில் விடியலைக்கண்டவனுக்கு
சிகரெட்டில் வெந்த உதட்டுக்காரனுக்கு
சாராயத்தில் திளைப்பவனுக்கு
கடைச்சுவர்களுக்குள்ளேயே உலகம் கண்டுவிட்டவனுக்கு
புத்தகப்பையோடு என்னை வெள்ளநீரில் சுமந்தவனுக்கு
உழைக்க அஞ்சாதவனுக்கு
என் கோபத்தையும் ரசிப்பவனுக்கு
என் மூடத்தனத்தை பரிசளித்தவனுக்கு
ஒன்றுமறியா வெகுளித்தனக்காரனுக்கு
எனக்கான ஒற்றைக்கருவிற்கு ஓராயிரம் உயிரணுக்கள் ஈந்தவனுக்கு !
அவனுக்கு !
எங்கப்பனுக்கு !
..
அடேய் !! நரைத்த தாடிக்காரா மீசை துளிரா பருவத்துள் மீண்டும் நான் நுழைந்து உன் உள்ளங்கை சூட்டோடு உலகம் சுற்ற வேண்டுமடா !!!

நண்பர்களுக்கு தந்தையர் தின வாழ்த்துகள்

16 comments:

sakthi said...

Enna oru mariyathai sago

sakthi said...

Ippadi oru kavithai unnal mattume saathiyam

sakthi said...

Kadaisi varigal class

ப்ரியமுடன்...வசந்த் said...

என்னடா இது அப்பாவை பற்றி புகழ்ந்து வஞ்சப்புகழ்ச்சி அணியா?

நல்லாருக்குடே...

பத்மா said...

நல்லா இருக்கு பாலா .proud father ஆகத்தான் இருப்பார் . good boy

அபுஅஃப்ஸர் said...

மரியாதையில்லாத வார்த்தையா இருந்தாலும் உள்ளுக்குள்ள மித மிஞ்சிய மரியாதை எப்பவுமே இருக்கு என்பது தெரியுது ராசா

எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்

அ.மு.செய்யது said...

ரொம்ப கேஷூவலான கவிதை பாலா !

ஒரே ஒரு கவிதையில உங்க அப்பாவ கண்முன்னாடி நிக்க வச்சிருக்கீங்க.!

இதே யதார்த்த நடையில இன்னும் பல கவிதைகளை எதிர்பார்க்கிறோம்

Anonymous said...

good., where is ur father now?

கமலேஷ் said...

உங்கள் தந்தையின் அன்போடு ஒரு டீ மாஸ்டருடைய கஷ்டங்களையும் இந்த கவிதை உரக்க சொல்கிறது நண்பா...இந்த இடத்தில்தான் என் வாழ்க்கையை துவங்கினேன் என்பதால் கவிதையின் ஆரம்ப வரிகளில் சற்று ஸ்தம்பித்து பின் தொடர்கிறேன்...அப்பாவோட நிலையில் இருந்து ஒரு மகனின் வாழ்த்து கவிதை ரொம்ப நல்லா இருக்கு நண்பரே...தந்தையர் தின வாழ்த்துக்கள்...

Sivaji Sankar said...

:)

VELU.G said...

கவிதை நல்லாயிருக்கு. பெரும்பாலும் தந்தையரை கண்டு கொள்ளா உலகில் நீங்கள் தந்தையை பெருமைப்படுத்தியிருக்கிறீர்கள்

siragu said...

என்ன கடல்புறா, நீங்க காதல் புறான்னு மட்டும்தான் நினைச்சேன், கலக்குறீங்க....... அப்பாகிட்ட கொண்டுபோய் காட்டிட்டா போச்சு..........

siragu said...

என்ன கடல்புறா, நீங்க காதல் புறான்னு மட்டும்தான் நினைச்சேன், கலக்குறீங்க....... அப்பாகிட்ட கொண்டுபோய் காட்டிட்டா போச்சு..........

சி. கருணாகரசு said...

வாழ்த்துக்கள்.

சி. கருணாகரசு said...

வாழ்த்தையே வன்முறையாதான் சொல்லுறிங்க....

Anonymous said...

fine