கடலின் காதலன்

Saturday, February 27, 2010

நார்சிச நாயகி!!!!!!!!!!!!!!!!!!

செம்புலப்பரப்பகழ் கிழங்கென பிரசவித்த
ப்ரியமெனும் தூயம் உனக்கேயானது ..

முலையூட்ட நாவறண்டழும் குழந்தைஎனும்
நானுக்கு
கிளாவர் கிலுகிலுப்பை நீட்டும் மரக்கரம் உனது.

பிரேதம் சூடி செருப்பு காலுக்குள் உடல் நசுங்க
தீர்ப்பிடும் கோல் உன்னது .

வியந்து கொள் நார்சிச நாயகி!!!! இதெற்கெல்லாம்
சேர்த்தழும் எவன் கையும் துடைக்கவியலா
உன் கண்ணீர் உனக்கேயானது .....


"" எதிர் பார்ப்பின்றி அள்ளித்தரும் நேயம் கபடறியாதது தோழி "" நேசமித்ரன்

16 comments:

TechShankar @ டெக்‌ஷங்கர் said...

தங்கள் பதிவுக்கு நன்றிகள்..

East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin. Congrats to Sachin Dear Little Master.

Have a look at here too..

Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos

அப்துல்மாலிக் said...

அது எப்படிங்க அடுத்தவனுக்கு புரியவேக்கூடாதுனு கங்கணங்கட்டிக்கினுதான் எழுதவே ஆரம்ப்பீங்களா

ரௌத்ரன் said...

நல்லாயிருக்கு பாலா :)

Thenammai Lakshmanan said...

நேயனுக்காக எழுதியதா பாலா

True Friend said...

machan vandhutomla kudumbathula kulapam undakka!!

சிவாஜி சங்கர் said...

நல்லா இருக்கு அண்ணா... :)

நேசமித்ரன் said...

//இதெற்கெல்லாம் ?//?????


""கிளாவர் கிலுகிலுப்பை""

நல்லாயிருக்கு பாலா

Kumaresan said...

உன் வரிகளின் நயம் உணர கற்றுக்கொண்டேன் .....
அடுத்த பிரசவத்திற்கு இவ்வளவு இடைவெளி தேவையில்லை .....

இடைப்பட்ட நேரங்கள் உன் எழுத்துகளை விட சுவாரஸ்யமானது போல !

அன்புசோதரன் ....

நட்புடன் ஜமால் said...

கவிதை விளங்கவில்லையென்றாலும்

கிளாவர் கிலுகிலுப்பை - இரசித்தேன்.

கபடறியாத நேயம் அழகு - நேசம் சொன்ன நேயம் அழகாய்த்தான் இருக்கும்.

ராகவன் said...

அன்பு பாலா,

முதல் இரண்டு வரிகளில் அமர்க்களமாக ஆரம்பமாகிறது இந்த கவிதை...

எவன் கையும் துடைக்கவியலா உன் கண்ணீர் உனக்கேயானது...

அம்மா... எவ்வளவு சொல்லமுடிகிறது... கொஞ்சூண்டு வார்த்தைகளை மட்டும் வைத்துக் கொண்டு...

மாறா வியப்புடன்,
அன்பு ராகவன்

அ.மு.செய்யது said...

வாக்கிய‌ங்க‌ளை முடிச்சி வெச்சிருக்க‌ !!! எத்தன நாளாச்சி இப்ப‌டி ஒரு க‌விதையை ப‌டிச்சி !!!

க‌ல‌க்கிட்ட‌ போ !!! கிளாவ‌ர் கிலுகிலுப்பை சுவார‌சிய‌ம் !!!

vidivelli said...

பிரமாதமுங்க........
ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.

பாலா said...

@ டெக் ஷங்கர்
நன்றிங்க சங்கர்
@அபு
வாங்க பாஸ் அப்படிப்பட்ட நல்ல எண்ணம் லாம் இல்ல சாமி
@ரௌத்ரன்
நன்றி நண்பா
@ தேனக்கா
இது நேசனுகாக எழுதுனதில்லக்கா .அவரோட வரி ஒண்ணுலேர்ந்து எனக்கு தோணுனத எழுதிருக்கேன்
@true friend
யாரு மச்சான் நீயி
@சிவாஜி சங்கர்
நன்றி தம்பி
@ நேசமித்ரன்
வாங்க மாம்ஸ் ,இன்னமும் முயற்சி பண்ணுமோ?
@ குமரேசன்
வாங்க சகோ . நன்றியும்
@ ஜமால்
நன்றிங்கோ
@ராகவன்
அட வாங்க ராகவன் உங்கள் பின்னூட்டம் தரும் சுகம் அலாதியானது
@செய்யது
வா மாப்பி வா . இதுக்கும் திட்டிடுவியோன்னு பயந்துட்டுதான் இருந்தேன்
ஆனாலும் இதுவும் பத்தாது போலதான் தோணுது . அப்பப்ப இப்படி நாலு அடிகுடுத்தாதான் என்னையே மாதிரி ஆளுங்களுக்கு சரி பட்டு வரும்னு தோணுது . நன்றி மாப்பி
@விடிவெள்ளி
நன்றிங்க , ரசித்தமைக்கு

பா.ராஜாராம் said...

வாவ்!!

ரொம்ப பிடிச்சிருக்கு மாப்ள.

இன்றைய கவிதை said...

நல்லா இருக்கு பாலா



நன்றி
ஜேகே

பாலா said...

@ பா.ரா
வாங்க மாம்ஸ்
@ ஜே.கே
நன்றிங்கோ தொடர்ந்த ஆதரவிற்கு