கடலின் காதலன்

Thursday, January 14, 2010

ஒருநாள் (கள்)!!

ஒருநாள்

தார்ச்சாலை நான்முனை சந்திப்பின்
மஞ்சள் விளக்கு சமிக்ஞையாய்
நகர்த்தி விட்டிருக்கிறோம் நாட்காட்டி
தினங்களை !!!

.
பத்தங்குல நம்மிடைவெளியில் புதைந்து
கிடக்கிறது ஆதிமனித உணர்ச்சிகுறிப்புகள்

.
பாண்டி ஆடும் சிறுமி கைசிறகடித்து
மையநோக்கு விசை சமன் செய்யும்
வித்தை பழகி நிற்கிறேன் நமக்கான
ஒற்றை நூலிழைமுன் ...

................................................................................................................
இன்னுமொரு நாள்

மீட்டு நம்மிடை ஒற்றை
வயலின் இழையை
ஒவ்வொரு மீட்டலுக்கும்
பொடிந்து கொட்டுகிறது
இதயம்


...............................................................................................................
மற்றுமொருநாள்

தயவு செய்து பேசாமல்
எனை வதை !
ஊடலின் தேவமொழி
மௌனம் !


...............................................................................................................
குறிப்பு :
மேற்கண்டதில் முதற் கவிதை(?) அந்த ஒற்றை நூலிழை முன் தள்ளாடி கொண்டிருக்கும் மாப்பி செய்யதுக்கு !!..
தலைப்பில் இலக்கண பிழை இருப்பின் மேன் மக்கள் மன்னிக்க .......

26 comments:

ANU said...

பாலா ரொம்ப நல்லா இருக்கு...
////தயவு செய்து பேசாமல்
எனை வதை !
ஊடலின் தேவமொழி
மௌனம் !////

ANU said...

பத்தங்குல நம்மிடைவெளியில் புதைந்து
கிடக்கிறது ஆதிமனித உணர்ச்சிகுறிப்புகள்!///


அன்பை ரொம்ப அழகா சொல்லி இருக்கிங்க....

ANU said...

ஹைய்யா.... நான் தான் முதல் இடம் இன்னைக்கு...

நேசமித்ரன் said...

நல்லா இருக்கு
நண்பர்களுக்கு என் வாழ்த்துகள்

பொங்கல் வாழ்த்துகள்
தனி

:)

அண்ணாமலையான் said...

நல்லாருக்கு வாழ்த்துக்கள்....

விஜய் said...

மூன்று நாட்களும் நாட்காட்டி காகிதங்களாய் இதயத்தில் படபடக்கிறது

வாழ்த்துக்கள்

விஜய்

அரங்கப்பெருமாள் said...

//தயவு செய்து பேசாமல்
எனை வதை !
ஊடலின் தேவமொழி
மௌனம் !//

”ஊடல் காமத்திற்கின்பம்” என்றார் வள்ளுவர்.நீங்கள் வதைக்கச் சொல்லுறீங்க...இப்போ இன்பமா அல்லது துன்பமா...

நட்புடன் ஜமால் said...

மற்றுமொருநாள் ...

அ.மு.செய்யது said...

ஏன்ன்ன்ன்ன் ??? தெரிகிற‌தா ?? புரிகிற‌தா ???

//பத்தங்குல நம்மிடைவெளியில் புதைந்து
கிடக்கிறது ஆதிமனித உணர்ச்சிகுறிப்புகள்//

இந்த இரண்டு வரிகளை உன்னைத்தவிர வேறு யாராலும் துல்லியமாக சொல்ல முடிந்திருக்குமா என்பது கேள்வியே. குட் ஒன் பாலா.

கீழே இரண்டு கவிதைகளும் நல்லா இருக்கு ..

அ.மு.செய்யது said...

//ஹைய்யா.... நான் தான் முதல் இடம் இன்னைக்கு...//

Adha solli than theriyanuma ??

Kumaresan said...

வாழ்த்துகள் மட்டுமல்லாமல் அடுத்த வரவின் எதிர்பார்ப்புடன்..
அன்புச்சோதரன்...

பாலா said...

@அனு
நன்றி தோழி
@நேசன்
நன்றி மாம்ஸ்
@ அண்ணாமலையான்
நன்றிங்க நண்பரே
@விஜய்
நன்றி அண்ணா
@ அரங்கப்பெருமாள்
நன்றி அண்ணாத்த
@ ஜமால்
நன்றி ஜமால் சாரே
@செய்யது
இது போதுமா மாப்பி ??
@ குமரேசன்
நன்றி சகோதரா

சத்ரியன் said...

//பாண்டி ஆடும் சிறுமி கைசிறகடித்து
மையநோக்கு விசை சமன் செய்யும்
வித்தை பழகி நிற்கிறேன் நமக்கான
ஒற்றை நூலிழைமுன் ... //

மாப்ள,

நான் இன்னொருமுறை காதலித்துப் பார்க்கட்டுமா?


எல்லாருக்கும் புரியிற மாதிரி கவிதையெழுத ஆரம்பிச்சிட்ட..!.எல்லாருக்கும் புரியட்டும்னா? இல்ல “அந்த” யாரோ ஒருத்தருக்கு புரியனும்னா மாப்ள...?

சத்ரியன் said...

//ஹைய்யா.... நான் தான் முதல் இடம் ...//

மாப்ள பாலா,

நிஜந்தானா?

இதென்ன புதுக்கதை மாப்ள.....?

பாலா said...

@ சத்ரியன்
மாம்ஸ் நீரு அடங்கவே மாட்டீரா ?
கமெண்ட்ஸ் ல கதகளி ஆடுரீரே

S.A. நவாஸுதீன் said...

நல்லா இருக்கு பாலா.

///ANU said...
ஹைய்யா.... நான் தான் முதல் இடம் இன்னைக்கு...///

மூனு கவிதைங்க இருக்கு. முதல் மூனு இடமும் நீங்கதான்.

///Adha solli than theriyanuma??///

பாலா

உங்களுக்கு பெரிய மனசு(முதுகு)ய்யா.

///இதென்ன புதுக்கதை மாப்ள...?///

இப்படியே வெள்ளாந்தியாவே இரு மாப்ள நீ

கமலேஷ் said...

மிகவும் நன்றாக இருக்கிறது...திருநாள் வாழ்த்துக்கள்...

பா.ராஜாராம் said...

//மீட்டு நம்மிடை ஒற்றை
வயலின் இழையை
ஒவ்வொரு மீட்டலுக்கும்
பொடிந்து கொட்டுகிறது
இதயம்//

மாப்ள எனவும்,என் மாப்ள எனவும் கொண்டாடலாம்.


//தலைப்பில் இலக்கண பிழை இருப்பின் மேன் மக்கள் மன்னிக்க//

யாருங்க அது மேன் மக்கள்?

சத்தமே இல்லை மாப்ள.பயந்துட்டாங்க போல.வாங்க போகலாம்..

ரொம்ப பிடிச்சது மூன்று கவிதைகளும்.இங்கு குறிப்பிட்டது ஒரு சோறு அவ்வளவே!

பாலா said...

@நவாஸ் நன்றி கும்மீட்டு போனதுக்கு
@கமலேஷ்
நன்றி நண்பரே தொடர்ந்த வருகைக்கு
@ பா.ரா
நன்றி மாம்ஸ்
பின்நூட்டத்துக்குனே தனி மொழி வச்சுருக்கீங்களே !!!!!
--

நேசமித்ரன் said...

செய்யது நவாஸ் சத்ரியன்
அனு பாலா என்னதான்யா நடக்குது இங்க ஒன்னும் புரியல

என்னமோப்பா மாப்ள பார்த்து

அப்புறம் இந்த பிராக்கட்ட ஒருவுக்கு அப்புறம் போட்டா என்ன ?

இப்பிடி

ஒரு (கள்) நாள்

ஆனாலும் இங்க என்ன நடக்குதுன்னு யாராவது சொன்னா நல்லா இருக்கும்

யாழினி said...

நல்லா இருக்கு பாலா.......

Thenammai Lakshmanan said...

ஊடலின் தேவமொழி மௌனம் மிக அருமை ரசித்தேன் பாலா

பாலா said...

@ நேசன்
நக்கலுக்கு பதில் லேதண்டி
@யாழினி
நன்றி
@ தேனம்மை
நன்றிக்கா

அடலேறு said...

//தயவு செய்து பேசாமல்
எனை வதை !
ஊடலின் தேவமொழி
மௌனம் !//

என்ன ஒரு தேர்ந்த வார்த்தை பிரயோகம். நல்ல கவிதை. வாழ்த்துக்கள் நண்பரே

SUFFIX said...

இடைவெளி, ஊடல், இந்த கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தன.

பாலா said...

@ அடலேறு
நன்றி மச்சான்
@சபிக்ஸ்
நன்றி நண்பரே