கடலின் காதலன்

Wednesday, January 6, 2010

பெருமெளனம்..

கன்னமயிர்களுள் ,சிகரெட் தின்ற உதட்டினுள்
புறக்கைகளில் முகலாயப் பெருங்கண்ணீர்
முத்தங்கள்.

ஆக்டோபஸ் கரங்களால் இரவெனை
கற்பழித்த நாட்களின் கொடூரம்

கழிவறை கண்ணாடியில் தெரிகிறது
கொலைவெறி மிகுந்தவென் கண்கள்

அவளருவத்தை புணர்ந்து தீர்த்த
திருப்தியில் நிகழ்த்தத்தொடங்குகிறேன்
பெருமெளனம்..

மச்சநிறம் மொழியின் வளைவுகளாய்
அவள் பெயர் நீண்ட கரத்தில்
அறுந்த தமனி வழி கசிகிறது
அவளோடு ஹீமோகுளோபின் திரவம் ..........

பி.கு
அப்பாடி......................(பெரு மூச்சு )
இது "உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு " நடத்தும் " உரையாடல் கவிதைப் போட்டி" க்காக எழுதியது

27 comments:

பாலா said...

என்னையும் மதிச்சு கவிதை (????) எழுத சொன்ன , நவாஸ் ,நேசன் மாம்ஸ் , பா. ரா மாம்ஸ் , விஜய் அண்ணா , செய்யது ,கார்க்கி மாப்பிகளுக்கும் இன்னம் பேர் சொல்லாத சில சொந்தங்களுக்கும் கமெண்ட் போட்ட புண்ணியவான்களுக்கும் விடுபட்ட எல்லாருக்கு நன்றியோ நன்றி ( பா. ரா. மாமஸும் , விஜய் அண்ணாவும் கோவிச்சுகலைன்னு நினைக்கிறேன்

நேசமித்ரன் said...

வெற்றி பெற வாழ்த்துகள்
மாப்ள !!!

எம்புட்டு நாள் ம்ம் ?

SUFFIX said...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே!!

அரங்கப்பெருமாள் said...

வாவ்... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள். ( இணையத்தின் மூலமாக சிறு சந்தேகங்களை தீர்த்தமைக்கு நன்றி).

Unknown said...

yen intha keta palakkam

Thenammai Lakshmanan said...

வெற்றி பெற வாழ்த்துக்கள் பாலா

விஜய் said...

ஐயையோ தம்பியை உசுப்பேத்திவிட்டது தப்பா போச்சே

வரமாட்டேன் வரமாட்டேன் அப்பிடின்னு சொல்லிட்டு வந்துட்டாப்புலேயே

கொஞ்ச நஞ்ச எதிர்பார்ப்பும் நமக்கு போச்சு

வெற்றிபெற்றதற்கு வாழ்த்துகிறேன்

விஜய்

யாத்ரா said...

கவிதை ரொம்பப் பிடிச்சிருக்குங்க, வாழ்த்துகள்.

சிவாஜி சங்கர் said...

வெற்றி பெற வாழ்த்துகள் அண்ணாச்சி..!

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா ம்ம்ம்ம்.. :) :)

நட்புடன் ஜமால் said...

வெற்றி பெற வாழ்த்துகள் ராஸா ...

na.jothi said...

வெற்றி பெற வாழ்த்துகள் பாலா

யாழினி said...

வெற்றி பெற வாழ்த்துகள்

சத்ரியன் said...

//மச்சநிறம் மொழியின் வளைவுகளாய்
அவள் பெயர் நீண்ட கரத்தில்
அறுந்த தமனி வழி கசிகிறது
அவளோடு ஹீமோகுளோபின் திரவம் ..........//

என்னாச்சி மாப்ள? சொல்லவேயில்ல.!

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

ரௌத்ரன் said...

ரொம்ப நல்லாயிருக்கு பாலா...

வெற்றி பெற வாழ்த்துக்கள் :))

கமலேஷ் said...

கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது...வெற்றி பெற வாழ்த்துக்கள்.... தோழரே...

பாலா said...

@ நேசன்
நன்றி மாம்ஸ் இவ்ளோ நாள் எழுதியும்
ஒன்னும் பெருசா வொர்க் அவுட் ஆகலையே :((
@suffix
நன்றி நண்பா பெரிய மகிழ்ச்சி நீ தந்தது
@ அரங்கப்பெருமாள்
நன்றி அண்ணா ; வேறு என்ன சொல்ல?
@வரதகணேஷ்
ஆமாண்டா ராசா இது பெரிய கெட்ட பழக்கம் இத எப்படி விடுறதுன்னு தெரியலை
தெரிஞ்சா சொல்லிட்டு போ
@ தேனம்மை
நன்றி கா , மகிழ்ச்சியும் கூட
@ விஜய்
அண்ணா நன்றி என் மீதான நம்பிக்கைக்கு
ஆனாலும் .......................???????
சந்தேகம்தேன்
@யாத்ரா
மிக்க நன்றி நண்பரே
அவ்வப்போது எனையும் வாசிப்பது
பெரிய மகிழ்ச்சியே
@சிவாஜி சங்கர்
நன்றி தம்பி . மகிழ்ச்சியும்
@ ஜமால்
நன்றிங்கண்ணா
@ஜோதி
நன்றி ங்க
@ யாழினி
நன்றிங்க யாழினி
@ சத்ரியன்
நன்றி மாம்ஸ் (இன்னவரை ஒன்னும் ஆகலை அதுவே பெரிய சந்தோசம் )
@ரௌத்ரன்
நன்றி நண்பா( மெய்யாலுமா அவ்வ்வ்வவ்வ்வ்வவ் )
@கமலேஷ்
நன்றி நண்பரே

வலசு - வேலணை said...

கவிதை நன்றாயிருக்கிறது.

வாழ்த்துக்கள் பாலா!

சந்தான சங்கர் said...

மச்சநிறம் மொழியின் வளைவுகளாய்
அவள் பெயர் நீண்ட கரத்தில்
அறுந்த தமனி வழி கசிகிறது
அவளோடு ஹீமோகுளோபின் திரவம் ..........//

பெருமௌனதிலும்
வார்த்தைகளில்
பெரும் பிரளயங்கள்
நடந்து முடிந்திருக்கிறது..


வெற்றிபெற வாழ்த்துக்கள் நண்பா..
(உங்க மாம்ஸ் இருவரையும் நகலெடுத்தேன் வந்து கருத்து சொல்லிட்டு போங்க. (நேசன், பா.ரா )

பா.ராஜாராம் said...

மாப்பு..வச்சுட்டிகளே...

:-))

ரொம்ப பிடிச்சிருக்கு மாப்ள.வெற்றி பெரும்..பெறனும்.வாழ்த்துக்கள் மாப்ள!

அவனி அரவிந்தன் said...

பெருமௌனத்தின் வார்த்தைகளின் வீச்சு மிகப் பெரியதாய் இருக்கிறது. வெற்றி பெற வாழ்த்துக்கள் !

gayathri said...

வெற்றி பெற வாழ்த்துகள்

Anonymous said...

வெற்றி பெற வாழ்த்துக்கள் பாலா...

S.A. நவாஸுதீன் said...

பப்ளிஷ் பண்ணதிலேர்ந்து நானும் எவ்ளோ நாள்தான்யா பெருமௌனமா இருக்குறது.

மௌனமாவே வெளியே போறேன். (இங்கயாவது மௌனமா இருந்து பார்ப்போமே, என்ன பாலா நான் சொல்றது).

உங்களுக்கு பின்னாடியே (சின்ன) மௌனம் ஒன்னு வேற வந்திருக்கு போல!!

பாலா said...

நன்றி வலசு- வேலணை
நன்றி சந்தான சங்கர்
வாங்க மாம்ஸ் நன்றியும்
அதோடு நான் எதுவும் வைக்கவே
இல்லையே ?? !!!
நன்றி அவனி அரவிந்தன்
நன்றி காயத்ரி
நன்றி தமிழரசி அக்கா
வாங்க நவாஸ்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

///அவளருவத்தை புணர்ந்து தீர்த்த//

??

Sakthi said...

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் & வெற்றி பெற வாழ்த்துகள்

அகநாழிகை said...

பாலா, கவிதை நன்றாக இருக்கிறது. வெற்றிக்கு வாழ்த்துகள்.

நேசனின் கவிதையை வாசித்த உணர்வேற்பட்டது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

- பொன்.வாசுதேவன்