கடலின் காதலன்

Sunday, August 9, 2009

பேச்சிலர் டிகிரி (பார்ட் டூ )

அண்டத்தின் நிசப்த இறகின்

மீட்டலால்மௌனம் நிரம்பிப்

பொங்கும் அறையில் மெல்லிய

கலங்கல்

வெப்பத்தென்றலைத் துப்பும்

மூன்றிறகு மின் விசிறி ,

மஞ்சள் எச்சில் உமிழும்

விடிவிளக்கு.

பூமிக்கருவின் சூர்ய நாவுகளை

மேற்சுவர் தரை தடவும்

மழையால் தணிக்க இயலுமா????

நிகழ்த்த முயன்று கொண்டிருக்கிறது

இயந்திர விசிறி !!!!!!!!

தீயை விழுங்கியவனை (அல்லது )

தீயால் விழுங்கப்பட்டவனை

எதிர்பாலற்ற தனிமை இரவின்

கொடுமைப்பிடி .

எரிகிறேன் உள்ளும் புறமும்

காதுமடலேறிய இரத்தமும்

காய்ந்த உதடுகளும் யாசிக்கின்றன

எதையோ என்னிடம் (!)

பிச்சையிட வழியற்றவனாய்

நான் .

இளமை மீட்டும் ராகத்திற்கு

வார்த்தை கோர்க்க இயலாமல்

கெஞ்சுகிறேன்

காலத்திடம்

என் இளமையை தின்றழி ,

இல்லையேல்

யாசிக்குமங்கங்களை முடமாக்கு ,

இயலாவிடில்

தயவு செய்து

எனைக்கொன்று விடு ............................

26 comments:

S.A. நவாஸுதீன் said...

அம்மாகிட்ட சொல்லி சீக்கிரம் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்கோ

S.A. நவாஸுதீன் said...

பாலா, உங்களால் மட்டும்தான் இந்த மாதிரி கவிதைகளை எழுத முடியும். கலக்குறீங்களே குரு.

ரமேஷ் said...

பாலா கலக்குறீங்களே

Vidhoosh said...

மஞ்சல் /// மஞ்சள் என்று மாற்றுங்கள்.

:)
வித்யா

நட்புடன் ஜமால் said...

மோகத்தை கொண்றுவிடு

அல்லால் எந்த மூச்சை நிறுத்திவிடு


பாலா தூள்

நேசமித்ரன் said...

தின்றழித்தால் தீராத பசியை
பருகினால் அருகாத பித்தினைப் பற்றிய சொற்கள்
நன்றாக உருக்கொண்டிருக்கின்றன
சொல்லிவிட முடிகிறது ரௌத்திரம் பொங்கும் அதன் விரல்களின் கீறல்களை

கார்க்கிபவா said...

எப்படி மாப்பி????????????????????

அ.மு.செய்யது said...

/காலத்திடம்

என் இளமையை தின்றழி ,

இல்லையேல்

யாசிக்குமங்கங்களை முடமாக்கு ,
//

இந்த வரிகள் டாப்பு....

மைண்ட் ப்ளோயிங்...

படிமங்களை அழகாக பயன்படுத்தி கோர்த்திருக்கிறீர்கள்.

பாராட்டுகள் பாலா.

அப்துல்மாலிக் said...

எப்பவும் போல் சூப்பர்

லீவுலே இருந்தாக்கூட இப்படி ஒரு ஃப்லோயிங்க் இருக்குமா

எங்கும் தனிமை... தனிமையை நிரப்ப முயற்சியுங்கள்

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

அம்மாகிட்ட சொல்லி சீக்கிரம் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்கோ

repeatingggggggggggggg

sakthi said...

யாசிக்குமங்கங்களை முடமாக்கு ,இயலாவிடில் தயவு செய்து எனைக்கொன்று விடு ..........

avvvvvvvvvvvvv

mudiyala

sakthi said...

பிச்சையிட வழியற்றவனாய் நான்

அய்யோ பாவம்

Unknown said...

கவிதை அழகு...!!

பாலா said...

ரொம்ப அக்கறையா சொல்றீங்களே நவாஸ் இவனும் மாட்டிக்கிட்டு முழிக்கனும்னா ??
வாங்க ரமேஷ்
நன்றி சகோதரி வித்யா
ஜமால் (மோகத்தை கொன்றுவிடு அல்லால் எந்தன் மூச்சை நிறுத்திவிடு ) இத சத்தியமா நான் காப்பி அடிக்கல
நன்றி நேசமித்ரன் சார்
வாங்க மாப்பி சார்
நன்றி செய்யது
வாங்க அபு
வாங்க யக்கா
நன்றி மேடி

சத்ரியன் said...

//காதுமடலேறிய இரத்தமும்
காய்ந்த உதடுகளும் யாசிக்கின்றன
எதையோ என்னிடம் (!)

பிச்சையிட வழியற்றவனாய்
நான் .//

பாலா,

போனை அம்மா கிட்ட குடுங்க.

"அம்மா, பேரப்புள்ளையக் கொஞ்சனும்னு உங்களுக்கு கொஞ்சங்கூட ஆசையில்லியாம்மா?

எனக்கு மட்டும் இருக்காதாப்பா!

"அப்ப ஒரு கால் கட்டப் போட்டு விடுங்க."

பாலா சத்ரியனோட சப்போர்ட் போதுமா இன்னும்.....?


கவியாக்கம் நல்லாருக்கு பாலா.

பாலா said...

unga supportukku nandri sathriyan
(nalla kelapuraangaiyaa peethiya )

பா.ராஜாராம் said...

நல்லா இருக்கு பாலா.

பாலா said...

நன்றி ராஜாராம் சார்

வலசு - வேலணை said...

கவிதையும் பயன்படுத்திய படிமங்களும் அருமை பாலா

பாலா said...

nandri velanai

ப்ரியமுடன் வசந்த் said...

அற்புதமான இளமையின் வெளிப்பாடு

பாலா said...

nandri vasanth

nila said...

தங்களை இந்தத் தொடரோட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கிறேன்...
நன்றி [ http://nilamagal-nila.blogspot.com/2009/09/blog-post.html ]

ANU said...

இளமை மீட்டும் ராகத்திற்கு

வார்த்தை கோர்க்க இயலாமல்

கெஞ்சுகிறேன்

rompa alahana varikal....
eppada varuvaa un aalu
hahhahahha

ANU said...

kalakkura bala ..pramaatham

SUFFIX said...

தனிமையின் கொடுமையை இதை விட ஆழமா சொல்ல முடியாதுங்க!!