கடலின் காதலன்

Monday, August 3, 2009

சொல்லாயுதங்கள்

வெளியில் சூரிய அபிஷேகம் .
மதிய எரிச்சல் .
ரௌத்ரம் முளைவிடும் சூழகம் .
வியாபிக்கும் வெப்பம் உள்ளும் புறமும் .

சிறு தூண்டலுக்கு காத்திருக்கும்
எரிவிளக்கா?!!
பசியோடுறுமும் மான்கண்ட
புலியா?!!
பிரசவிக்கும் முயற்சியில் எரிமலை
திரவக்குழம்புகளா?!!

எரிய, பாய ,வெடிக்க
ஆயத்த தருணம் .
ஆ ................................. வெடித்தேவிட்டது ........

பெயரிலி சொல்லாயுதங்கள்
பல்கூர்முனைகளும் , ரத்தம்
சுவைக்கும் நாவுகளும் கொண்டவை .

சமர்களத்தில் இருபுறமும்
ஆயுதப்பிரயோகம் .

இதய மேற்சுவரென்ன ?
உட்புறமென்ன?
கிழிந்து தொங்குகின்றன
இதயச்சதைகள்

ஆயுத நாவுகள் ரத்தம்
ருசித்து மடிந்து விழுகின்றன .

ரத்தத்தின் வீச்சமடிக்கும்
அறை முழுதும் நிரம்பி வழிகிறது
வன் மௌனம்

இரண்டொரு நாளிலந்த
"வன் மௌனம் " செத்தழியலாம்
பிறிதொரு நாளில் அவ்வாயுதங்கள்
உயிர்பெற்று மீண்டும்
இதயம் கிழிக்கலாம் ................................

பின் குறிப்பு .
ஒரு வாரம் முன்பு " மழைக்கு ஒதுங்கியவர் (பெண்கள் கல்லூரி பக்கம் ) கேட்டிருந்தார் திருவாரூரில் வெயில்காலமா வென்று .ரெண்டொரு நாளில் ஊருக்கு வந்தபின்தான் தெரிந்தது இப்போது நம்மூரில் அதிகம் இருப்பது வெயில் காலம் தானென்று . ஊருக்கு வந்த இரண்டாவது நாளே அம்மாவோடு சண்டை சாயந்தரமே சமாதானமாகி ஒரு வழியா முடிந்து விட்டது. இந்த கடல் காற்றும் ,கப்பல் தனிமையும் என் மேல் ஒரு மிருகத்தனமான பையித்தியகாரத்தனத்தை பூசிவைத்திருகிறது .இப்பொழுதே இப்படி என்றால் திருமணத்திற்கு பிறகு பஞ்சாயத்து வைக்கவேண்டி இருக்கும் போல( சாமி எல்லாம் தயாராஇருங்க) மேற்கண்ட கொலை வெறியில் மேற்மேற்கண்ட கவிதை மாதிரி ஒன்றை கிறுக்கித் தொலைத்தேன் .



22 comments:

நட்புடன் ஜமால் said...

பின் குறிப்பு படிச்சிட்டு

பாவமேன்னு தோனுது

உன்னையல்ல

அவங்களை ...

நட்புடன் ஜமால் said...

கத்தியை விட
துப்பாக்கியை விட

இன்னும், இன்னும்

இருக்கும் அழிவாயுதங்களை விட

சொற்றாயுதம்

செவிடனால் மட்டுமே வெல்ல முடியும்

பொருமை கூட ஒரு செவிட்டு நிலைதான் ...

மழைக்கு ஒதுங்கியவர் said...

//சொற்றாயுதங்கள்//

இந்த சொல்லாடல் சரியா ??

சொல்+ஆயுதம்=சொல்லாயுதம் என்று தானே வரும்.

( ஹைய்..பாலா பதிவில ஒரு தப்பு கண்டு பிடிச்சிட்டேன் )

அ.மு.செய்யது said...

//இதய மேற்சுவரென்ன ?
உட்புறமென்ன?
கிழிந்து தொங்குகின்றன
இதயச்சதைகள்

ஆயுத நாவுகள் ரத்தம்
ருசித்து மடிந்து விழுகின்றன .

ரத்தத்தின் வீச்சமடிக்கும்
அறை முழுதும் நிரம்பி வழிகிறது
வன் மௌனம் //

கொலவெறி கவுஜர் நீங்க....

அதியமானின் உலைக்களத்தை பற்றி ஒளவையார் பாடியதைப் போல் உணர்ந்தேன்.

வன்மெளனம் இந்ந வார்த்தையை ரசித்தேன்.

Vidhoosh said...

அருமை அருமை. ஏதேனும் ஒன்றிரண்டு வரிகளை கோட் (quote) செய்து பாராட்டலாம் என்று மீண்டும் ஒருமுறை படித்தேன். எல்லா வரிகளையுமே c&p செய்ய வேண்டும் போலிருக்கு.
suuuuuuuuuuuuuuper.
--வித்யா

கார்க்கிபவா said...

மாப்பி, தலைப்பு தப்புன்னு சொல்ல வரேன், post comment click பண்றதுக்குள்ள மாத்திட்ட ..

குட்..

S.A. நவாஸுதீன் said...

சொல்லுக்கு சிறையிட்ட உதடுகள் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். சிறு புன்னகையை மட்டும் விடுவிக்கும் உதடுகள் பிரச்சனையைத் தீர்க்கலாம்.

கவிதை சூடாக இருந்தாலும் சூப்பரா இருக்கு பாலா.

பாலா said...

நன்றி ஜமால்
எனக்கு அந்த சொல்லாடல் மேல் கொஞ்சம் ரொம்ப சந்தேகம் தான் செய்யது
திருத்தியமைக்கு நன்றி
நன்றி சகோதரி வித்யா
ரொம்ப அலார்ட்டா இருக்குற போல மாப்பி
இன்னம் சூடா எழுதலாம்னு நினைச்சாலும் பயமா இருக்கு நவாஸ்

நேசமித்ரன் said...

அற்புதம்

தீப்பொறி பறக்கும் சொற்கள்
வன்மௌனம் மனம் அமர்வதை தவிர்க்க இயலவில்லை
வாசித்து முடித்த சில பொழுதுக்குப் பிறகும்

கும்மாச்சி said...

சரிதான் பாலா அங்கேயும் அப்படித்தானா.

பாலா said...

நன்றி நேசமித்ரன் சார்
வாங்க கும்மாச்சி அய்யா

அப்துல்மாலிக் said...

ஏன் ஏன்? இப்படி

சீக்கிரமா ஒரு...????

அது எப்படிங்க ஒவ்வொரு சூழ்நிலைக்கும் தகுந்தாமாத்ரி எழுதி தள்ளுறீங்க, இதுலே அதிகப்பாவப்பட்டவங்க படித்து பின்னூட்டமிடும் நாங்கதான்.. ஆஆஆவ்வ்வ்வ்வ்

அப்துல்மாலிக் said...
This comment has been removed by the author.
பாலா said...

vaanga abu saami

sakthi said...

இதய மேற்சுவரென்ன ?
உட்புறமென்ன?
கிழிந்து தொங்குகின்றன
இதயச்சதைகள்

ஆயுத நாவுகள் ரத்தம்
ருசித்து மடிந்து விழுகின்றன .


கொலை வெறி கவிதை என்பது இது தானா???

sakthi said...

இரண்டொரு நாளிலந்த
"வன் மௌனம் " செத்தழியலாம்
பிறிதொரு நாளில் அவ்வாயுதங்கள்
உயிர்பெற்று மீண்டும்
இதயம் கிழிக்கலாம் .

யப்பா என்ன வரிகள்!!!!

பாலா said...

வாங்க யக்கா

R.Gopi said...

//பெயரிலி சொல்லாயுதங்கள்
பல்கூர்முனைகளும் , ரத்தம்
சுவைக்கும் நாவுகளும் கொண்டவை //

Unmai thaan Bala....

பாலா said...

nandri gopi

சத்ரியன் said...

//இரண்டொரு நாளிலந்த
"வன் மௌனம் " செத்தழியலாம்
பிறிதொரு நாளில் அவ்வாயுதங்கள்
உயிர்பெற்று மீண்டும்
இதயம் கிழிக்கலாம் ...//

முதல் முறையாக வாசிக்கிறேன். 'மெளனம் வன்முறை'யென்று.
'சொல்லாயுதங்கள்' ஒருபுறமிருக்கட்டும். உங்களின் 'சொற்பிரயோகங்கள்'
என்னை செயலிழக்கச் செய்கின்றன.

பாலா, உங்க அளவுக்கெல்லாம் நம்மால முடியாதுன்னுதான் நெனைக்கிறேன்.
எனக்கு பேச்சு வழக்குச் (எளிமை) சொற்களைக் கையாண்டு கவிதை எழுதுவதே பெரும்பாடாகிப் போகிறது.

சத்ரியன் said...

//திருமணத்திற்கு பிறகு பஞ்சாயத்து வைக்கவேண்டி இருக்கும் போல( சாமி எல்லாம் தயாராஇருங்க) //

எங்களுக்குத் தெரியும் சாமி.எங்க பஞ்சாயத்து எல்லாம் அதுக்கு சரிப்பட்டு வராது.. ஏன்னா...,(திருமணத்திற்கு பிறகு)

"ஊடுதல் காமத்திற்கு இன்பம்; அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்".

இப்ப சொல்லுங்க சாமி. நாங்க பஞ்சயத்துக்கு வரனுமா?

பாலா said...

சத்ரியன் என் ப்ளோக்ல இந்த குறளுக்கு ஒரு கவிதை போட்ருக்கேன் முன்னாடி இத பாருங்க http://kadalapura.blogspot.com/2009/04/blog-post_29.html