அவளைக்காணவில்லை
முற்பகலில் தேடத்தொடங்கினேன்
வெக்கை
வெளியேயும் உள்ளேயும்
.
.
முன்னிரவிலும் கிட்ட வில்லை
காலத்துளிகள் இற்று உதிர்ந்து போயின !
பின்னிரவில் நெருப்பாய் தகிக்க
தொடங்கினேன் !!
.
.
கருக்கலில் அருகம்புல்லில்
அரும்பிய பனித்துளியொன்றில்
கண்டெடுத்தேன்
இதயத்துசெல்களை
பூக்களாய் புஷ்பிக்க செய்து
அர்ச்சிக்கத் தொடங்குகிறேன்
.
அவள் கால் சுண்டுவிரலால்
சீண்டப்பட்டு
சிரித்து விழுகின்றன அவை !!!
இதயம் செல் உற்பத்தியில்
சாதனை செய்யும் விதமாய்
உமிழத்தொடங்கியது
பூக்களை !!!!
.
எங்களை ஒதுக்கித்தள்ளி
ஓடிக்கொண்டிருக்கின்றது
காலவெளி
சிறு ஓடையென !
.
சட்டென்று நுகர்கிறேன்
அவளை
ஏதோ ஒன்று தூக்கி எறிகிறது
எனை !
அதொரு வெட்ட வெளி
அந்திமம்
ஏதேதோ வாசனைகள்
எண்ணப்பிதற்றல்கள்
இப்போழ்து
என்னைக்காணவில்லை !!!!!!!!!(?)..........................
8 comments:
மீண்டும் ஒரு தேடல் இங்கே!. நல்லா இருக்கு பாலா. வழக்கம்போல் வரிகள் அனைத்தும் அற்புதம். இன்னொரு சிறப்பு, முன்பை விட கொஞ்சம் எளிய தமிழில் முதல் முறைப் படித்ததும் புரியும்படி ரசிக்கும்படி இருக்கின்றது.
ரசித்தேன்... !
nandri navas(puriyutha)
vaanga kavikizhavan
தேடல் அருமைய் பாலா
ஒவ்வொரு எழுத்தும் சொல்கிறது அழகான வரிகளை
nandr abhu
alagana kavithai bala
நல்லா இருக்கு பாலா இந்த தேடல்...
vaanga akka
nandri puthiyavan
Post a Comment