கடலின் காதலன்

Thursday, May 3, 2012

சமுத்ர குறிப்புகள்


சாத்தானின் அருள் பெற்றவன்  
ஜெல்லியாய் உறங்கும் ஊமைக்கடலை
நான்காய் மடித்து விழுங்குவான் 
பெருங்காட்டுத் தீயாய் கனற்றும் 
உதரவிதானம் தணிய

தேவதைகளும் கடவுளரும் இறைஞ்சி 
நிற்கும் காலமதில் 
கனவில் நழுவும் சுக்லமென
உணர்ந்தும் உணராமலும் விழும் 
அவன் கண்ணீர் ஒரு துளியில்
கடல் சமைப்பார்

அடிக்கடலில் திமிங்கிலங்களின் முராரி
பிரணவமாய் ஒலிக்க
என் ஜீவரசமும் உப்பும் பிசைந்து 
உயிர் செய்வோம் 
ப்ரம்மம் வெட்கி கவிழ 

சமுத்ரா ஜனனம்