நூறு அழகிகளுடனான தனியறையில் ஆண்மையற்றவன் படும் பாடு . உடல்முழுவதும் இதழ்களால் அர்ச்சித்தும் முயங்க இயலாதவனை வெளித்தள்ளி , "ச்சீ " என்று உமிழி கதவை பூட்டும் அவமானம் உன் கவிதையின் ஆரம்பத்தில் எனக்கு கிட்டியது .நீ அடித்து வளைத்து இறுக்கிப் போட்டிருக்கும் சொற்கூட்டுக்குள் எந்தவழி நுழைவதேன்றே தெரியாமல் திரும்பிச்செல்லும் கொடூரம் நிகழ்ந்திருக்கின்றன உன் பழைய சில கவிதைகளில் . இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுக்கும் சில நல்ல தாசியைப்போல விருப்பமின்றியும் உன் வார்த்தைகளோடு ஓடியிருக்கிறேன் முன் தினங்களில் .
இப்போதும் நீ வளைந்து கொடுத்தாயா இல்லை நானே ஏறிக்கொண்டேனா என்ற குழப்பம் .
இப்போதெல்லாம் நீ குழப்பி அடித்திருக்கும் வண்ணச் சேற்றுக்குள் சிக்கிக்கொள் என்றே காலை நனைக்கிறேன் ..
சுயிங்கம் மெல்லும் ருசியானது உன் கவிதை அசைபோட்டு சாறு எடுத்தபின்னும் இருக்கும் சுயிங்கத்தின் அழுத்தம் உன் வார்த்தைக்குவியல் . சில கவிதைகளில் நிகழும் அர்த்தப்புரிதலுக்கு பின் சொல் மீதான அலட்சியம் நேர மறுக்கிறதுன் கவிதை -களில்
இப்போதொரு புதிய தலை வலி இது
சூரியனுக்கு ஒட்டிய கருஞ்சுருள் ஆடி மீது நகரும் ஆயிரம் கால் ரேடியச் சிலந்தி நெய்தபடி நகர்கிறது நிழல் வலைஞாபக வலையை இப்படி காட்சிப்படுத்த இயலுமா என்ற கேள்வியை எழுப்பிடும் வேலையை அழகாக செய்கிறது இந்த வரிகள் .
( விலாங்கை பிடித்து விடலாம் போல . நீர் சொல்லரவாரத புரியரதுக்குள்ள )
டிராகன் நாவுகள் சூழ ஓட்டகமுடித் தூரிகையில் எழுதிய சிறகுள்ள அதி மானுடப் பெண் தைலமிட்டு வைத்திருக்கிறாள் காயத்தின் உதிரத்தை நிறம் மாறாமல் நினைவுகளின் நிர்வாணம் ,ரணம் .
நதி தளர்த்தியிருக்கும் மணல் வெளி அந்தியின் வெம்மை அடைகாக்கிறது கரிக்கும் அதிகாலை உதட்டில் மற்றும்சிமிழ் சுடரில்
நெகிழ்ந்த புடவையின் வழி அரைகுறையாய் கட்சிக்கு புலப்படும் மார்பக ஆரம்பத்தின் அழகு போல் தெரிகிறது நீ எழுதியிருக்கும் "நதி தளர்த்தியிருக்கும் மணல் வெளி "
வெம்மையை அடை காக்கும் விழி நீர் பூசிய உதடு சொல்கிறது உன் வலியின் எடையை
ஒரு மிடறுக் கடல் உமிழும் எரிமலை வாய் முன்னம் ஒற்றை முகில் கார் வானமாய் விரிந்த கண்
நான் மிரண்டு போனது இங்கேதான் "ஒரு மிடறுக் கடல் உமிழும் எரிமலை
கண்ணீரின் அடர்த்தி கடலுக்கு ஒப்பானதே . ஒத்துக்கொண்டே ஆக வேண்டும் .
கண்ணை இப்படியெல்லாம்(ஒரு மிடறுக் கடல் உமிழும் எரிமலை ) சொல்ல முடியுமான்னு அரண்டே போனது இங்கேதான் அதிலும் " எரிமலை வாய் முன்னம் ஒற்றை முகில் "
அங்கயே விழுந்துட்டேன் . இமையை இப்படிலாம் சொல்ல முடியுமான்னு .
மார்புக் கூட்டு மரங்கொத்தி சப்தம் கொல்ல கொல்ல உயிர்த்தெழும் மரணத்தின் காலடி
அரிவாள் கருக்கு கொண்டு இதயத்தை கூறுபோட்டும் தீரவில்லை ரணத்தின் பசி .
திசை தீர வெடித்தெறிந்த தசைத்துண்டு கனவு கடல்கோள் பிரேதத்தின் மீன்தின்றமீதத்தை பகிர்கின்றன நகம் போல் அலகுள்ள பறவைகள்
என் உணர்ச்சியை காட்சிப்படுத்தும் வித்தை கைவரவில்லை மாம்ஸ் ஆனால் இந்த வரிகள் கிளப்பும் அதிர்வு மட்டும் இப்போதைக்கு அடங்கப்போவதில்லை எனக்கு .
(வார்த்தைகளை கழித்து வலியை மட்டும் பிரித்தெடுக்கும் சூத்திரம் கற்கவேண்டும் உன் கவிதைக்காக )
இதுவரையிலான மேலே உள்ளது எனக்கான புரிதல்கள் மட்டுமே படைப்பாளியின் கோணம்
என்னவென்று தெரிந்திருக்க எனக்கு சாத்தியமில்லை .
(என்னதப்புனு மாமாதேன் சொல்லணும் )