கடலின் காதலன்

Monday, September 7, 2009

திமிரெழில்

நாவிற்கிடறும் பல்லிடுக்கின்

இறைச்சி துண்டு பிசிறோ ??

பல்லிடைப்பட்டோ ; வெட்டப்பட்டோ

நுனியறுந்த நகக் கண்ணோர

எரிச்சல் ரத்த தீற்றலோ ??

உன் திமிரோடு ஒத்துபோவது ..

ஆயிரமாயிரமாய்

திமிரின் வெளிப்பாடாய்

ஏகோபித்தவுன் ஆதரவில் .

இருக்கிறேன் நானும்

திரிசங்கின் ஓரத்தில் !!

(என்றேனும் இடம் பெயரலாம் )

துணிச்சலை திமிராய்

குழம்பி னேனோ????

பார்வையில் ; அழைப்பில் ;

நிராகரிப்பில் ; செயலில்

துணிச்சல் தூக்கில் (!!)

திமிரும் அழகென வளர்சிதைந்து

போர்த்தியிருக்கிறதுன்மேல்

எதோ ஈர்ப்பில்

வைரமுத்துவை கடன் வாங்கி

"ரெட்டைத்திமிரே

நெஞ்சில் முட்டிக்கொல்லு "

என வாய்வரை வந்ததை

காலணியை கையிலேடுப்பாயாதலால் :(

மறக்காமல் மறந்து வைத்தேன்

காரணக்குறிப்பு :

திமிருக்கும் அழகுரு கொடுக்கும் அவளால் அவளுக்கே இது .

நேசமுடன்

பாலா