கடலின் காதலன்

Saturday, April 7, 2012

ஒன்னியும் புரில

மஞ்சள் துருவேறி குமையும் நிலா
சன்னல் ஆடியில் ஈரமற்ற
வெள்ளொழுக்கு

பிறழ்ந்த வானுக்கு கரையேகும்
படகு தீ சுட்டு உதறும் கையாய்
வீசி போகிறது நிராசையின் கவுச்சி
கொடி

நங்கூரத் தூண்டிலில் செவுள் கிழிய
தொங்குகிறேன் சாலமன் மீனென
சகடைஇட்டு நரம்பு சொடுக்கும் கை
உளுந்து மச்சக் காரியினுடையது

மிருகச்சிரங்கில் வீச்சத்திற்கு துரத்தும்
பெருத்த ஈ யாய் அலைகிறது
சுயமைதூனப் பிசாசு
மோகத்திற்கு உயிர் அழிக்க
கேட்ட கவிஞனின் முறுவல்
மீசை முறுக்கு விரிய.


2 comments:

நட்புடன் ஜமால் said...

தலைப்பு மட்டும் நன்னா ...

நேசமித்ரன் said...

நல்லா இருக்கு :)