அசிட்றேசியின் பூவில் வாசம் ?
பேபேசி குடும்பத்தில் எத்தனை வகைகள் ?
.
சங்கு பூவும் , அவரையும் கைகால் பரப்பி
தொங்குகின்றன ஒன்பது வருடமாய் !!
.
அட்டையில் பென்சிலின் கோட்டில்
பிங்க் நிறத்தில் பார்டர்
ஹெர்பெரியமும் , பெயரும் .
.
கடைசி பக்கம் வாழைமொட்டின்
ஒற்றைப்பூ வாய்பிளந்து
மகரந்த நாவை நீட்டியபடி !!
.
நடுவில் ஆமணக்கின்
ஒற்றை இலை கைகாட்டி சிரித்தது !
.
ஒன்பதின் கீழ் பத்தென
மேலதின் தரத்தை கீழது சொன்னது
முதற் பக்க மதிப்பெண் !
.
.
சங்கீதா சொன்னாள்
"இதுவும் ஆட்டோகிராப் போல தான் அண்ணா "என்று
.
.
தாவரவியல் புத்தகத்தின் இடுக்கில்
உறங்கிகொண்டிருக்கிறது கருகிய ரோஜா ஒன்று !
RAJI எங்கே இருக்கிறாய் நீ ?????????????????
என் ஹெர்பேரிய அட்டையில்
"cliteriya terneshya " பச்சையாய் ...............................................
‘உங்க கருத்தோட முரண்படுறேன், ஆனா…”
3 hours ago
18 comments:
மீ தி பஸ்ட்
அட ... மீ தி செகண்டு .......
அடங்கொன்னியா .... மீ தி தேட் .... அட்ரா சக்க... அட்ரா சக்க.......
கவித நெம்ப சூப்பருங்கன்னோவ் .....!!! வாழ்த்துக்கள்.....!!!!!
RAJI எங்கே இருக்கிறாய் நீ ?????????????????
என் ஹெர்பேரிய அட்டையில்
"cliteriya terneshiya " பச்சையாய் ..
ராஜி நீ எங்கே தான் இருக்கின்றாய்....
சீக்கிரமா வாயேன்...
அட்டையில் பென்சிலின் கோட்டில்
பிங்க் நிறத்தில் பார்டர்
ஹெர்பெரியமும் , பெயரும் .
அப்படியா சேதி...
கடைசி பக்கம் வாழைமொட்டின்
ஒற்றைப்பூ வாய்பிளந்து
மகரந்த நாவை நீட்டியபடி !!
.
நடுவில் ஆமணக்கின்
ஒற்றை இலை கைகாட்டி சிரித்தது !
எப்படி பாலா இப்படி எல்லாம்
ரசித்தேன் உன் கவித்திறனை
எல்லாமுமே உனக்கு கவிதையாகிவிட்டது.....
நோட், புத்தகம் etc etc....
நன்றி அக்கா
வாங்க மேடி
தாவரவியல் வாசம் ...
(சக்தி சொன்னது போல் தான் - எல்லாவற்றையுமே எழுதனும் அப்படின்னு உங்களுக்கு தோனுது - ஆரோக்கியம்)
nandri jamal
பாட்டனி கிளாஸ் போயிட்டு வந்த மாதிரி இருக்கு பாலா
கடைசி பக்கம் வாழைமொட்டின்
ஒற்றைப்பூ வாய்பிளந்து
மகரந்த நாவை நீட்டியபடி !!
.
நடுவில் ஆமணக்கின்
ஒற்றை இலை கைகாட்டி சிரித்தது !
இது ரொம்ப அழகு
RAJI எங்கே இருக்கிறாய் நீ ?????????????????
ஹைபிஸ்கஸ் ரோசா சயனைன்சிஸ் பறிக்க போயிருப்பாங்க, கண்டிப்பா திரும்பி வருவாங்க
nandri navas
புதுமையான வாசிப்பனுபவம்!
அன்பு பாலா
முதல் வருகை தங்கள் தளத்திற்கு
உங்கள் பழைய பதிவுகளை பார்த்தேன்
அதில் தொங்கிக்கொண்டிருக்கும் நிறைவில்லமையை
யாரும் சுட்டியதாய் தெரியவில்லை
உங்களின் விஷயமற்ற அழுத்தம் ரசிக்க வைக்கிறது
பழையதை விடுவோம் .........
இந்த பதிவில் நீங்கள் செய்த தவறென்பது
* தாவரவியல் புரியாதவர்களுக்கு ஒரு விளக்கம் பின்னே கொடுத்திருக்கலாம் .
* கடைசியில் சொன்ன காதலை இன்னம் அழுத்தமாய் ப்ரஸ்தாபித்திருக்கலாம்.
* இன்னமும் வார்த்தைகளில் இடைவெளி குறைத்திருக்கலாம் ..
இதில் ரசித்தவை
* இதில் வைத்திருக்குக்ம் கேள்விகள்
* எங்கோ தொடங்கி காதலில் முடித்தது .(ரசித்தேன்)
இந்த பின்னூட்டம் தவறெனில்
மறுமொழிக.
அன்புடன்
இன்பா(இனியவள் )
நன்றி இன்பா
இந்த குட்டுதலுக்கு தான் காத்திருந்தேன்
தொடர்ந்து ஆதரவு தரவும்
நட்புடன்
பாலா
நன்றி ஆபிரகாம்
//
ஒன்பதின் கீழ் பத்தென
மேலதின் தரத்தை கீழது சொன்னது
முதற் பக்க மதிப்பெண் !
//
ஆகா!
என்னடா botany பற்றிய பதிவா என்று சந்தேகித்தால்...
ஆமா! RAJI எங்கே இருக்கிறாள் என்று கண்டுபிடித்து விட்டீர்களா?
Post a Comment