கடலின் காதலன்

Saturday, May 23, 2009

பேச்சுலர் டிகிரி

ஏதோவொரு காட்சி பிழையின் தீவிரத்திலோ

தனிமையின் முயங்களிலோ

அதுவென்னுள் விழுந்து விட்டது போலும் !

(இதை அனுபவித்திருப்பீர் நீங்கள் )

என்னுள் தன் கிளைகளை

பரப்பி இருந்தது

என்புகள் நொறுங்கி

நரம்புகள் தெறித்துவிடும் போல் !

இழந்து கொண்டிருந்தேன்

அதனாளுமையின் வன்மையில்

வெட்கம் ,பசி இன்னபிற .....

எந்த முனிவனுக்கு தெரியும்

என் ஊசிமுனைத்தவ்ம் ??!!!!!

அங்கங்கள் வழி தீஒழுக

நின்றிருக்கிறானா அவன் ??!!!!

மார்பிலும் முகத்திலும்

மயிர்க்கால்களின் ஆளுமைக்கொண்ட

என்னால் கண்ணாலே

அழைக்கும் எவளுடனோ

அதை விட்டொழிக்க வழியிருந்தும்

கலாச்சார முட்கொம்பிலதை

கொன்று மாட்டி விட்டேன்

இனிமேலும் கொலைக்க

நான் தயாரில்லை

அடியே என்னவளே

எங்கிருந்தேனும் உடனே புறப்பட்டு வா !!

7 comments:

கலையரசன் said...

நல்ல பதிவு பாலா..
இன்றுதான் முதல் தடவை வருகை தருவது உங்கள் பக்கம்.
வாழ்த்துருக்கள்! தொடருங்கள் சந்திப்போம்|
நம்ம பக்கமும் வாங்க..

S.A. நவாஸுதீன் said...

Bachelor Life-ன்னாலே அப்படிதான் பாலா. எத்தனை நாள்தான் வேடிக்கை பார்ப்பது? யாம் பெற்ற கஷ்டம் பெருக இவ்வையகம்.

அப்துல்மாலிக் said...

//அடியே என்னவளே

எங்கிருந்தேனும் உடனே புறப்பட்டு வா !!

//

எங்கே இருக்கீங்கே.. சோழநாட்டுலேர்ந்து கூப்பிடுறாருலே, கிளம்பிவாங்க‌

வளமைப்போல உங்க அழைப்பு அருமை பாலா

நட்புடன் ஜமால் said...

\\கலாச்சார முட்கொம்பிலதை

கொன்று மாட்டி விட்டேன் \\


கொன்றாச்சுல்ல ...

புதியவன் said...

வழமை போல கவிதை நல்லா இருக்கு பாலா...

பாலா said...

நன்றி கலை (நேரம் கிடைக்கையில் தங்கள் வலைப்பக்கம் வருகிறேன் )
வாங்க நவாஸ்
சொல்லிவிடுங்க அபு
வாங்க அண்ணாத்த (ஜமால் )
நன்றி கிருபா
வாங்க மிஸ்டர் நியு (புதியவன் )

S.A. நவாஸுதீன் said...

பாலா, உங்களை தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன். என்னுடைய ப்லோக்-ல் பார்க்கவும்