தினவெடுத்த தீநாக்கள்
திரண்டு தழலாய்
அந்த அறை மையத்தில்
பொங்கி வழிந்ததில்
இல்லாதது இருப்பு கொண்டு
இருப்பின் இல்லாததை
ஒன்றையொன்று நிரப்பும்
முயற்சியில் !
பூமியினின்று கழற்றி
கொண்ட அவ்வறை
கட்டற்ற வெப்ப உயர்தலில்
எரிந்து சாம்பலானது !
வெட்ட வெள்ளை வெளியில்
இயங்கியவற்றின்
முயற்சி தீவிரத்தில்
ஒன்று வென்றிருக்கையில்
மற்றொன்று தோல்வியின் விளிம்பில்
வெற்றியை ருசித்துக்கொண்டிருந்தது !!
நெருப்பு நீறு பூக்க
உறங்கத்தொடங்கியது !!...................................
6 comments:
நெருப்பு அப்படித்தான்
நீறு பூக்க பூக்க
உறக்கம் தழுவியே தீரும்.
காதலர்கள் இருவர் மட்டுமே நிறைந்த, முற்றிலும் ஏகாந்தமான உலகத்தில் நுழையும் இவர்களுக்கு உலகப்பொருட்கள் அனைத்தும் அவர்களின் உத்தரவுக்கு காத்திருக்கும். ஈருயிர் ஓருயிராகும் பரிணாமத்தில் கூடலும் ஊடலும் கனவும் கற்பனையும் மௌனமும் பிதற்றலுமாய் ஒரு பித்து நிலையில் சஞ்சரிப்பார்கள். பாலா எப்டி பாராட்டுவது என்றே தெரியவில்லை. அசத்துறீங்க பாலா
வழக்கம் போல கவிதை நல்லா இருக்கு பாலா...
தேர்டுமில்க் நல்லாயிருக்கு பாலா
வாழ்த்துக்கள்
//ஒன்று வென்றிருக்கையில்
மற்றொன்று தோல்வியின் விளிம்பில்
வெற்றியை ருசித்துக்கொண்டிருந்தது !!
//
இந்த வரிகளை ரசித்தேன்.
பின்னுறீங்க பாலா..
nandri jamal
vaanga navas
nandri puthiyavan
nandri abhu
vaanga seiyathu
Post a Comment