கடலின் காதலன்

Wednesday, September 30, 2009

நீர்த்தஇரவுகள்

நீர்த்துக்கிடக்கிறது நம்

பரண் இரவுகளின் தொகுப்பு .

குசலவிசாரிப்புகள் ,சிறுஎள்ளல்

உண்டுகளைத்தாயா ?,நள்ளிரவு

காலைவணக்கம் .

சத்தற்ற பிதற்றல்கள் மின்னரட்டைப் பிணைப்பில் .

எட்டித்தெளிய முடிமின் சிரம் நுழைத்திருப்போம்

உன்னுள்ளும் என்னுள்ளும் !!!!

எத்தனை உருகி எழுதி கிழித்ததென்ன ?

இந்தாடா உதட்டுச்சாய முத்தமென

தவறியேனும் விழமறுக்கிறதுவுன்

எச்சிற் பூசிய சொற் பிண்டம் .

காகித சிறைக்குள் செந்தூரம்

சிவந்து போகிறது ஓரங்களை

*****???காதல் ????!!!!!

அச்சத்தின் மூலப்பிடியில்

சிக்கித்தவிக்கின்றன

இரத்தமிறைக்கும் இயந்திர

நாளங்கள் !!

இனி எந்நொடியும் சாத்தியமில்லை.

உன்னுள்ளானவென் பிம்பத்தை அழி

என்னுள்ளும் கொன்றேவிடுகிறேனுனை .

வா கை சேர்

மறுகட்டமைப்போம்

புதிதாயுன் பேர் சொல் !

இம்முறை சென்றேயாகவேண்டும்

மானிதரற்ற மலர்சமைந்த

பிரபஞ்சத்துள் !!

Sunday, September 27, 2009

பேச்சிலர் டிகிரி - 3

சாமத்தின் யாகத்தில் ஹவிசை

நான் .

யாக்கையை தின்று கொழுக்கின்றன

பாஸ்பரத்தின் தாயாதி மழலைகள் .!!

தோள் தினவு வெற்றாய் அழிகிறது

தலை சாயும் உற்றவளின்றி !.

கால் நூற்றாண்டாய் பெருந்தவம்

படர் முல்லைக் கொடியற்ற

ஒற்றைக்கொழு .

தசை நார் கிழிபடுகிறது

துருவக்கரடி கையிடை

மச்சம் .

விடியலில் சிரத்தீ கொண்ட

மெழுகு தற்கொன்றிருந்தது!!!..

*************************************************************

பந்தி :

மேலே படித்தது மெயின் டிஷ் (நான்வெஜ் .முட்டையில செஞ்ச கேக் மாதிரி ) அசைவம் சாப்பிடாதவர்கள் கீழே சமோசா + டீ இருக்கிறது எடுத்துக்கொள்ளவும் .எப்படி இருந்தாலும் ஏதாவது சாப்பிட்டுதான் போகணும்

ஏன்னா ? விருந்தோம்பல் தமிழன் பண்பாடாச்சே :)))))

*************************************************************

தவறியோ ;தவறட்டுமென்றோ

நீ

சிதறிவிடும் எழுத்துகூட்டங்களில்

தொலைந்துவிடுகிறது

உணர்ச்சி கூட்டில் சிக்கிக்கிடக்கும்

ராட்சத பறவை .!!

************************************************************

தவறாது மொய் எழுதிவிட்டுச்செல்லவும்.:))))

பாலா

Thursday, September 24, 2009

குடைக்குள் மழை !!???

தென்னை ஈர்க்கின் நுனி திரண்டு

மழை மறுபிறப்பெடுக்கும்

ஈரநாளில் ;

உன்னின் நானும் ;நானெனப்படும்

உன்னின் எனக்கான நீயும் .

.

..

விரல்களின் கலவியிலுதித்த

செஞ்சூட்டு குழவியொன்று

பருகிக்கொண்டிருக்கிறது இதயத்தின்

காதற் தாய்மையை .

..

உன்னாலவென் தருணங்கள்

வார்த்தைகளில் வர்ணத்தையும்

வாசனையையும் பீச்சியடிப்பதை

(அறிவாயா நீ ?(டீ))

..

ஒற்றைக்குடைக்குள் மௌனத்தோடு

ஒழுகுகிறது காதற் பெயருற்றும்

பெயரிடப்படாவொன்று!!!!!

சட்டென்று பொழிந்து விடுகிறது

ஒற்றை வெம்மழை உதடுகளினிடுக்கில்

திறந்த கதவின் வழி சட்டென்று

உடற்கலவும் பதனவறை காற்றைப்போல ..

..

கண்டும் காணா தோழியைப்போல்

ஓடிக்கொண்டிருக்கிறது

வெட்கிச்சிவந்து செம்மழையாய் ..

குறுகுறிப்பு .

இது மழையை காதலிக்கும் "மழைக்கு ஒதுங்கியவருக்காக "

மழை ??!!!

மழை ... இதன் மீது எனக்கு காதலோ ,விருப்பமோ , ரசனையோ இதுவரை

வந்ததாய் இல்லை .இதன் அவசியம் பொருட்டே வலுவில் ஏற்று கொண்டிருக்கிறேனென்றே நினைக்கிறேன் .ரோஜா வர்ணத்தின் மீது காதலிருந்தும் வன்மயாய் கறுப்பை ஏற்று கொண்டதைப்போல .

என்றேனும் ஒருநாள் இந்த மண்புணரியை இதே குடைக்குள்ளோ அல்லது

ஒற்றை இருக்கையில் எவளோ அவளுடன் சாளரக்கம்பிகளிடுக்கின் வழி மண் புணர்தலை காதலிக்க தொடங்கலாம் அப்போது இந்த கிறுக்கல்களின் அவசியம் நேரலாம்

Wednesday, September 16, 2009

ஊடற்பெருநிறை

சொற்களோடு புணரும் சாத்தியமற்ற
நிசி நுனி வளர் பொழுதில் .
மேல்தட்டு மண்ணகழ்ந்தோடியபுழுவின்
வழித்தடமாய் வெடிப்புகளால்
நிரம்புகிறது .
வீட்டுள் வீடுகட்டும்
மஞ்சள் குளவியின் பிருஷ்ட
கொடுக்கு விஷம் தின்ற
புழுவென நிறம் மாறுகிறது
இதயம் .
வன்முயக்க குரூர திருப்தி
ஊடற் பெருநிறையையுன் மேல்
கவிழ்த்ததன் .
வன்மம் தொலைந்த பின்னொரு நொடியில்
அழத்தொடங்குகிறேன் யார்க்கும்
கேட்டிராவண்ணம்....

Friday, September 11, 2009

அழகியல்


மஞ்சள் அலகு நீலப்பறைவையொன்று

ஜன்னலோர புங்கையின் கிளையில்

உன் அழகைத்தின்ற படி !!!......

நாம் விட்டகர்ந்த

சொர்ண புஷ்ப மரத்தடியில்

காம்பு கழன்ற புஷ்பங்கள் சில

சிதறிய முத்தத்தை

தின்று முடித்திருந்தன!!!!!!!!!!!!!!.....

உன் முல்லைப்பூ

நிறப்புடவையுன் மாம்பழ

வர்ண அழகை சொட்டியபடி

கொடியில்!!!!!!!!!!!!.........

நொடிகளைக்கொட்டும்

படுக்கையறை மணிகாட்டி

நம்மின்(????) மணித்துளிகளை

முடிவிலியால் பெருக்கி

எண்ணியபடி !!!!!!!!!!!!.......

நாம் சொல்லிக்கொள்ளாத

காதலென்ற வார்த்தை

வீட்டு வெள்ளைப் பூச்சு

சுவர்களில் மோதி

சிதறியபடி !!!!!!!!!!!!!!...........

முதல் முறையாய்

மடி புதையும் சிசு

முதல் வாய்ப்பருகல்

சிலிர்க்கும் ஸ்பரிசம்

கர்வப்பெருமை உனக்கு

மார்க்காம்புகள் முளைக்க

வரம் வேண்டியபடி நான்

எங்கிருந்தோ வந்த

தேவப்பறவைகள் உன்

தலையில் தாய்மை எழிலை

கவிழ்க்க !!!!!!!!!!!!!!!....

மூன்று பக்க சிறுகதையை

கவிதைக்குள் அடைக்கும்

முயற்சி

வார்த்தைகளின் அடர்த்தி

உன் அழகு !!!!!!!!!!!!!!....

Monday, September 7, 2009

திமிரெழில்

நாவிற்கிடறும் பல்லிடுக்கின்

இறைச்சி துண்டு பிசிறோ ??

பல்லிடைப்பட்டோ ; வெட்டப்பட்டோ

நுனியறுந்த நகக் கண்ணோர

எரிச்சல் ரத்த தீற்றலோ ??

உன் திமிரோடு ஒத்துபோவது ..

ஆயிரமாயிரமாய்

திமிரின் வெளிப்பாடாய்

ஏகோபித்தவுன் ஆதரவில் .

இருக்கிறேன் நானும்

திரிசங்கின் ஓரத்தில் !!

(என்றேனும் இடம் பெயரலாம் )

துணிச்சலை திமிராய்

குழம்பி னேனோ????

பார்வையில் ; அழைப்பில் ;

நிராகரிப்பில் ; செயலில்

துணிச்சல் தூக்கில் (!!)

திமிரும் அழகென வளர்சிதைந்து

போர்த்தியிருக்கிறதுன்மேல்

எதோ ஈர்ப்பில்

வைரமுத்துவை கடன் வாங்கி

"ரெட்டைத்திமிரே

நெஞ்சில் முட்டிக்கொல்லு "

என வாய்வரை வந்ததை

காலணியை கையிலேடுப்பாயாதலால் :(

மறக்காமல் மறந்து வைத்தேன்

காரணக்குறிப்பு :

திமிருக்கும் அழகுரு கொடுக்கும் அவளால் அவளுக்கே இது .

நேசமுடன்

பாலா